இடுகைகள்

ஜூன், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மனம் எங்கு உள்ளது?

  மூளையில் பதிந்துள்ள நினைவுகளும் , மூளை செயல் படும் விதமுமே மனம் என்ற பெயரால் அழைக்கப் படுகிறது . எல்லாம் மூளை தான் என்றாலும் மூளையின் நினைவுகளையும் , அது செயல் படும் முறைகளையும் மனம் என்ற தனிப் பெயரிட்டு அழைப்பது கருத்துக்களைச் சொல்வதில் ஏற்படும் வசதிக்காகத் தான் . மூளை என்பது வீணை என்றால் அதிலிருந்து எழும் இசை மனம் என்று கொள்ளலாம் . வீணையில் ஏற்படும் கோளாறு அதன் இசையைப் பாதிப்பதைப் போல மூளையில் ஏற்படும் கோளாறு மனிதனின் சிந்தனைகளையும் , செயல்களையும் பாதிக்கும் . இது பற்றி மனத் தத்துவ நிபுணர்கள் கூறும் போது , மனம் என்ற சொல்லைப் பயன் படுத்தாமல் , மூளை என்ற சொல்லை மட்டுமே பயன் படுத்துவது சகிக்க முடியாதபடி அசெளகரியமானது (INTOLERABLY INCONVENIENT) என்று சொல்கிறார்கள். மேற்கண்ட உண்மைகளால் , இதயமோ (HEART ) , நெஞ்சமோ ( LUNGS ? CHEST? ) மனத்தின் இருப்பிடம் அல்ல என்பதைப் புரிந்து கொள்ளலாம்.. மூளைச் சாவு அடையும் மனிதனின் மனம் எங்கே போய் விடுகிறது என யோசித்தால் மனம் என்று தனியாக எதுவும் இல்லை என்பது விளங்கும்.