சனியின் காரகத்துவங்கள்: சனிக்கு எவ்வளவோ காரகத்துவங்கள் உள்ளன. அத்தனையும் தீயகாரகத்துவங்கள்தான். பிறப்பற்ற இந்த வாழ்விற்கு தேவையற்ற நீண்ட ஆயுளை தந்து மனிதனை கர்மம் இயற்ற செய்பவனும் சனியே. கதை வேறு.ஜோதிடம் வேறு. சனி எந்தவொரு சுபக்கிரக தொடர்போ பெறாதபோது ( வர்க்கசக்கரங்கள் உட்பட) எந்த நல்லவற்றையும் தராது. திருடன்,வஞ்சகன், மோசக்காரன்,நம்பவைத்து மோசம் செய்பவன்,தமோகுணம், தீயசெயல்கள், வறுமை,துன்பம், உழைக்கசெய்தல், கர்மம்( நற்கர்மம்,தீயமர்மம்) கீழ்நிலை,சாக்கடை,எச்சில்,உபயோகமற்றவை, அழுக்கு, தூய்மையற்ற இடம்,துரோகம், விதவை,கெட்டுப்போதல், அழிவு, நோய், தீராத துன்பம்,கடன்,மனித தன்மையற்ற செயல், கொடூரமாக தடந்துகொள்ளல் போன்ற அனைத்து தீயகாரகத்துவங்களும் சனியுடையது.சோம்பல், எந்த முயற்சியும் செய்யாமை தீயசனி தரும் பலன்களாகும். தன்னம்பிக்கையின்மையை பாவத்துவசனியே தருகிறது. எந்த செயல் செய்தாலும் பல இடையூறுகளையும்,காலதாமதத்தையும் பாவத்துவசனி வழங்கும். காலம்தவறுதல், நிகழ்ச்சிகளுக்கு தாமதமாக செல்லுதல், தாமதமாக சென்று பேருந்து,ரயில் போன்றவற்றை தவறவிட்டுவிட்டு வருந்துதல், காத்திருத்தல் சனியின் தீயசெயல்...