மறைந்த* *புதன்* : விளக்கம்:


 *விளையாட்டு* - *ஜோதிட* *விளையாட்டு*
ஜோதிடத்தின் காரகன் புதன்

 *மறைந்த* *புதன்* : விளக்கம்:

 *புதன்* ஒரு *அற்புதமான* ஆச்சரியமூட்டும் விந்தைகள் நிறைந்த ஒரு *கிரகம்* 🌷

ஜோதிடமும் அப்படித்தானே?

நமது கேள்வி🌷

 *மறைந்த* *புதன்* *நிறைந்த* *படிப்பு* *நிறைந்த* *செல்வம்* *தருவாரா* *?*

ஆம். *தருவார்*🌷 எப்படி? இயற்கையாகவே _அவர் கால புருஷனுக்கு ஆறில் உச்சம் பெறுவதனால் தருவாரா _

அல்லது 8 -12 போன்ற இடங்களில் மறைந்து இருந்தால் இந்தப் பலன்களை தருவாரா?🌷

புதனுக்கு என்று சில காரகத்துவங்களை நாம் வைத்திருக்கிறோம்🌷

அதிலொன்று *இரட்டைத்* *தன்மை* என்று உள்ளது
🌷
 *புத்தி* என்று வைத்திருக்கிறோம்🌷

 *புத்தியை* உங்களால் - *கண்ணால்* - நேராக - *பார்க்க* *முடியுமா* ?🌷

என்னதான் சொல்ல வருகிறீர்கள் 😇😇என்று தானே கேட்கிறீர்கள்?😃

நான் சொல்ல வருவதெல்லாம் ஒன்றுதான்🌷 *மறைவு* *என்றாலே* *ஒளிதல்* என்று ஒரு பொருள் உள்ளது🌷

அப்போது -இந்த புதன் ஜாதகத்தில் எவ்வாறு அமைந்தாலும் - இவர் இரட்டை தன்மை உடையவர் என்பதனால் - உங்களால் இந்த புதனை வைத்து - *ஒரே* *முறையில்* - *சரியாக* கணித்து *பலன்* சொல்ல முடியாது🌷

ஏனெனில் அவர் *மண்* *தத்துவம்* ஆனவர்.

மண்ணை தோண்டினால் தான் பொன் கிடைக்கும்🌷

அதுபோல இந்த புதனை - *ஆராய்ந்து* - *தோண்டி* *பலன்* *சொல்ல* *வேண்டும்* _ என்பதற்காகவே *மறைந்த* *புதன்* என வைத்தனர்✍️✍️🌷

ஆம் . *ராசியில்* உங்கள் *புதன்* *எங்கிருந்தாலும்* *_நவாம்சத்தில்* *புதன்* என்ன *வலிமை* பெற்று இருக்கிறாரோ அதன்படியே செயல்படுவார் என்பதுதான் மறைந்த புதன் நிறைந்த பலனைத் தருவார் என்பதற்கு உண்டான உண்மையான கருத்து🌷🌷 (நேராக ராசியை மட்டும் பார்க்காமல் நவாம்சத்தையும் பார்க்க வேண்டும்)

ராசியில் நீசம் அடையலாம் - அஸ்தங்கம் அடையலாம் - உச்சம் அடையலாம் -ஆட்சி  அடையலாம் -எது அடைந்தாலும் புதனின் *முழு* *பலத்தை* அறிய நீங்கள் -

 *நவாம்சத்தில்* *புதன்* *நிலையை* வைத்துதான் முடிவு செய்ய வேண்டும்🌷

இதை -எவ்வாறு நீங்கள் உறுதியாக கூறுகிறீர்கள் என்று நீங்கள் கேட்கலாம்🙄 இதோ எனது ஆய்வின் வெளிப்பாடு✍️🌷

 *மேஷம்* மற்றும் *சிம்ம* *நவாம்சத்தில்* உங்கள் *புதன்* இருக்குமானால் *அரசாங்க* அரசியல் ரீதியான *நன்மைகளும்* *தலை* சார்ந்த ENT *பிரச்சனைகளும்*   *எலும்பு* *பிரச்சனைகளையும்*

சீக்கிரமாக ஒரு விஷயத்தை இவர்களுக்கு புரிய வைக்க முடியாது.

உங்கள் *குழந்தைகள்* சம்பந்தமான *பிரச்சனைகளும்* இருக்கும்🌷

அடுத்து *புதன்* *நவாம்ச* *கன்னியில்* அமரும்பொழுது அவர்கள் நிச்சயம் *நல்லநிலையை* அடைகிறார்
ஆனால் இவர்கள் *கடன்* *வாங்கக்கூடாது*. கடன் வாங்கினால் அதனால் பெரும் துன்பத்தை  அடைகிறார்கள்

 உயர்கல்வியில் தான் படிக்க *நினைத்த* *படிப்பு* *கிடைக்காமல்*
 போவது .

அல்லது *படித்த* *படிப்புக்கும்* *பார்க்கும்* *வேலைக்கும்* *சம்மந்தம்* *இல்லாமல்* இருப்பது💥💥💥💥

 *வேலையில்* ஒரு *நிம்மதி* *இல்லாத* தன்மை  தருகிறது 🌷

 *ரிஷபம்* *துலாம்* *நவாம்ச* *புதன்* *பொருளாதாரத்திற்கு* நன்று🌷 அடுத்தவரை நம்பி *ஏமாறுதல்*

 கூட்டாளிகளால் *ஏமாற்றப்படுதல்* நண்பரால் ஏமாற்றம் அடைதல்

 *இரண்டாவது* *குழந்தை* சம்பந்தமான *பிரச்சனை* வருகிறது💥💥💥💥

 *மிதுனம்* *நவாம்ச* *புதன்* *அதிக* *அறிவை* தந்தாலும் *இளமையில்* அதிக *கஷ்டங்களையும்* நஷ்டங்களையும் தந்த பின்புதான் வாழ்க்கையில் உயர்வை தருகிறது🌷

 *கடக* நவாம்ச புதன் அதிக *அறிவாளி* தன்மையையும் *மேதைமை* தன்மையையும் தருகிறது 🌷ஆனால் தொழிலில் -பண விஷயங்களில் -கட்டாயம் ஒரு *ஏமாற்றத்தை* தந்து விடுகிறது 🌷இவர்களுக்கு குடும்ப வாழ்க்கையில் நிம்மதி இல்லை தாயாருக்கு உடல்நிலைதருகிறது  பிரச்சினைகளையும்  அல்லது தாயாருக்கு மன நிம்மதி இல்லாத வாழ்க்கையும் 🌷

 *விருச்சிக* நவாம்ச புதன் *மாறுபட்ட* *கருத்துக்களின்* *கூடாரம்* - *அதீத* *அறிவு* - திடீரென்று *பொருளாதார* *இழப்பு* - எந்த ஒரு விஷயத்திலும் வித்தியாசமான சிந்தனை  மூலம் புகழ் பெறும் அமைப்பு- *குடும்ப* *வாழ்க்கையில்* அவ்வளவு *நிம்மதியை* *தருவதில்லை* 🌷

 *தனுசு* நவாம்சம் புதன் -

 இது ஒரு *சாத்வீகத்* *தன்மை* யை இங்கு அமரும் புதன் தருகிறார்.

 *ஆசிரியர்* *தன்மையையும்* தருகிறார்.

 அதிகமான -ஆழ்ந்த அறிவையும் -அதேசமயம் இந்த வாழ்க்கை சம்பந்தமான போராட்டங்களையும் -இவர் நினைத்தது நிறைவேற - *கடினமான* *பிரச்னைகளையும்* கடந்து வந்தாக வேண்டும்.🙄 *மணவாழ்க்கைக்கு* சில *பிரச்சினைகளை* தந்து விடுகிறது🌷

ஆனாலும் *கடைசியில்* *சாதனை* செய்யும் அமைப்பு

💥💥💥💥💥💥💥💥
 *மகர* நவாம்ச புதன் -சிறந்த புதன் _ *மிகச்சிறந்த* *அறிவாளிகளை* *தரும்* புதன் 🌷அரசியல் - படிப்பு - செல்வம் -போன்ற அனைத்தையும் தரக்கூடிய புதனாக மகர நவாம்ச புதன் அமைக்கிறார்🌷

 வாரிசு சம்பந்தமான வம்சம் சம்பந்தமான பிரச்சனைகளை தருகிறது

ஆனால் -வாழ்க்கையில் *பல* *போராட்டங்களை* சந்திக்க வேண்டியிருக்கும்🙄

 *கும்ப* நவாம்ச புதன் பல *சங்கடங்களுக்கு* *பின்பு* *சாதனை* தரும் தந்தாலும் - இந்த கும்ப புதனுக்கு நவாம்சத்தில் ஏதேனும் ஒரு நட்பு *கிரக* *இணைவு* இருக்க வேண்டும்

இவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை  அறிய முடியாது  நல்ல கிரக இணைவுகள் ஏற்பட்டால் *தன்னை* *தோண்டி* *ஞானம்* அடைவர்🌷 எந்த ஒரு விஷயத்தையும் இவர்கள் சீக்கிரம் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மிகுந்த ஆராய்ச்சிக்கு பிறகே ஒரு விஷயத்திற்கு முடிவெடுப்பார்கள்.

 இவர்களுடைய முடிவு இவர்களுக்கு சிலநேரம் *வேதனையை* தந்து விடுகிறது🌷

 *மீன* நவாம்ச புதன் -இந்த புதன் அவ்வளவு *நல்லதல்ல*✍️ வாழ்க்கையில் பலவிதமான *இன்னல்களை* *தரும்* - இது வர்கோத்தமம் ஆக அமைந்தால் -சிறப்பு இல்லை✍️ என்றால் -  நவாம்சத்தில் சுக்கிரனும் குருவும் சூரியனும் இங்கே இருக்க வேண்டும் -தனித்த புதன் ஆக இங்கு அமைந்துவிட்டால் -

செய்யாத குற்றத்திற்கு கூட *தண்டனை* *தேடிவரும்* ஆக அமையும்🌷😔

வாழ்க்கையில் ஒரு நாளாவது *ஏன்* *பிறந்தோம்* *_என்கிற* *விரக்திக்கு* தள்ளப்படுவார் வர்கோத்தமம் அடைந்தால் நல்லது 😔

இவைகளெல்லாம் உங்களுக்கு தொட்டு மட்டுமே காட்டப்பட்டுள்ளது 🌷✍️புதனைப் பற்றி *ஏராளமான* *விஷயங்கள்* ஒவ்வொரு *நவாம்சத்திலும்* *உண்டு* ✍️🌷

அவைகளை நாம் *பின்பு* விரிவாக சொல்வோம்🌷🌷

முக்கிய குறிப்பு :இங்க நவாம்சத்தில் *புதனுடன்* *அதிக* *கிரக* *சேர்க்கைகள்* இருப்பது -

அதிலும் முக்கியமாக -சிம்மம் தனுசு மகரம் கும்பம் நவாம்சத்தில் புதன் அமர்ந்து அதிக கிரக சேர்க்கை இருப்பது -

புதன் *வர்கோத்தமம்* நிலையை அடைவதும் *சிறப்பே*🌷

அவர்கள் வாழ்க்கையில் - *படிப்பு* மற்றும் நல்ல *தன* *சேர்க்கை* களுக்கு உரிய அமைப்பாக உள்ளது🌷

உதாரணமாக -

தேசத்தந்தை காந்தி🌷

அவர் துலா லக்னம் லக்னத்தில் புதன்

 *நவாம்சத்தில்* *மகரத்தில்* *சனி*💥🌞 *புதன்* அவருடைய படிப்பு வக்கீல் அவர் செல்வந்தர் தான் என்பதையும் நீங்கள் பாருங்கள்🌷

இந்தியாவின் மிகப்பெரும் தொழிலதிபர் ரத்தன் டாடா.
அவர்களின் ஜாதகத்தில் தனுசு லக்னம் லக்னத்தில் புதன் -புதன் அஸ்தமனத்தில் -

 *நவாம்சத்தில்* *கன்னியில்* *உச்சத்தில்* 💥💥🌞

துவண்டு இருந்த டாட்டா சாம்ராஜ்யத்தை தூக்கி நிறுத்தியவர்🌷🌷

கணிதமேதை சீனிவாச ராமானுஜம்✍️

மிதுன லக்னம் விருச்சிக புதன்

 *நவாம்சத்தில்* *மகர* புதன் கணித மேதை என்பதை உணர்க🌷💥🌞

முன்னாள் பிரதமர்
அடல் பிகாரி வாஜ்பாய் -

விருச்சிக லக்னம் இரண்டில் புதன் அஸ்தமனத்தில்

 *நவாம்சத்தில்* *சிம்மத்தில்* புதன்💥🌞🌞

சிம்ம புதன் *அரசியலுக்கு* *நன்மை* என நாம் குறிப்பிட்டிருப்பதை நீங்கள் பார்க்க வேண்டும்🌷🌷🌷

தலைவர் கலைஞர் ஐயா.

கடக லக்கனம் மேஷத்தில் புதன்

 *விருச்சிக* *நவாம்சத்தில்* *புதன்* *சனி* *கேது* 💥🌷

நவாம்சத்தில் புதனுடன் மூன்று கிரகங்கள் இணைவு கவிஞர் முதல்வர் பேச்சாளர் எனப் *பல* *சிறப்புகளை* - பண்புகளை அவருக்கு கொடுத்தது🌷🌷

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அவர்கள் .

சிம்ம லக்னம் புதன்  மீனத்தில் நீசம்💥😀

 *நவாம்சத்தில்* *தனுசில்* புதன். விளையாட்டில் அவர் செய்த சாதனைகள் *வெற்றிகள்* *ஏராளம்* ஏராளம் என்பதை பார்க்கவும்🌷🌷🌷

கண்டுபிடிப்புகளின் தந்தை தாமஸ் ஆல்வா எடிசன். அவர்களின் ஜாதகத்தில் கன்னியா லக்னம் புதன் மகரத்தில் அஸ்தமனத்தில்✍️

 *நவாம்சத்தில்* *கன்னியில்* *புதன்* உச்சத்தில் இவருடைய *கண்டுபிடிப்புகள்* மட்டும் *2000* இருக்கும்

இசைஞானி இளையராஜா ஐயா அவர்களின் ஜாதகத்தில்   ரிஷப லக்கனம் லக்னத்தில் புதன்
 அந்த புதனும் அஸ்தமனத்தில்

ஆனால் கும்ப நவாம்சத்தில் புதன் ராகு இசையில் *தனக்குத்தானே* *ஞானம்* அடைந்தவர் இசையின் ராஜா என்று நாம் சொல்லலாம்

எல்லாவற்றிற்கும் மேலாக பூஜ்ஜியத்தில் இருந்து ராஜ்யத்தை ஆண்ட தொழிலதிபர் திருபாய் அம்பானியின் ஜாதகத்தில் 🌷✍️

அவர்கள் லக்னம் தனுசு அதற்கு பனிரெண்டில் விருச்சிகத்தில் புதன்

ஆனால் *நவாம்சத்தில்* *மகரத்தில்* *குரு* *புதன்* இரண்டும் இணைந்து உள்ள அற்புதத்தை பாருங்கள்✍️

எனவே புதனை நாம் *ராசிக்கட்டத்தில்* *பார்ப்பதைவிட* *அம்சத்தில்* அவர் என்ன நிலையில் உள்ளார் என்பதை *பார்த்தே* பலன் சொல்ல வேண்டும்🌷🌷🌷🌷

மேலும் சூரியனுடன் *அஸ்தமனம்* *ஆகும்* *போது* *எந்த* *கிரகத்துடன்* *புதன்* *இணைகிறாரோ* *அந்த* *கிரகத்தின்* *தன்மைகளில்* புதன் *செயல்படுவார்* என்பதனால்

அவர் *அஸ்தமனமே* *ஆனாலும்* அதாவது மறைந்தாலும் *சூரியனின்* *தன்மையுடன்* *செயல்படுவார்* என்பதும் மேற்கண்ட ஆய்வுகள் மூலம் நமக்குத் தெரிகிறது 🌷🌷எனவே மறைந்த புதன் நல்ல கல்வியும் செல்வமும் அவர் திசையில்தான் தரவேண்டும் என்பது அல்ல -

அவர் நின்ற *நட்சத்திர* *அதிபதியின்* திசையிலோ அல்லது *நவாம்சத்தில்* *எங்கு* *இருக்கிறாரோ* அந்த பாவ அதிபதியின் தசை தசையிலோ -

 *நவாம்சத்தில்* அவருடன் *சேர்ந்த* *கிரகத்தின்*  தசையில் கொடுப்பார் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் பொருளாதாரம் முன்னேற்றம் எனும் பலனை தந்தது என்பது

ராஜயோகாதிபதிகளும் அவருடைய தசைகளும் விளக்கம்

எந்த லக்ன/ராசியினருக்கு, படித்த படிப்புக்கான, வேலை கிடைக்கும். (அல்லது) எதை படிக்க வேண்டும்.