படித்து உருப்படாமல் போகிற வர்க்கம்... யாருங்க
படித்து உருப்படாமல் போகிற வர்க்கம் கல்வி தான் மனித குலத்தை முன்னேற்றும், ஏழ்மையில் இருந்து காப்பாற்றும், விடுவிக்கும் போன்ற புத்தொளிக் கால லட்சியங்கள் பாதி உண்மை மட்டுமே. சொல்லப் போனால் கல்வி நம்மை ஒரு பொறிக்குள் மாட்ட வைத்துவிடும் எனத் தோன்றுகிறது. நான் இதை என் வாழ்க்கையில் இருந்தே புரிந்துகொண்டேன், ஏனென்றால் இன்னமும் சமூக சிந்தனையாளர்களும் கல்வியாளர்களும் பழைய பல்லவியையே பாடிக்கொண்டிருக்கிறார்கள். நான் முன்பு ஜெயின் கல்லூரியில் விரிவுரையாளராக இருந்த போது அங்கு நிறைய மார்வாரி மாணவர்கள் இருந்தார்கள். ஒரு இளங்கலை வகுப்பில் ஒரு மாணவன் என்னிடம் சீண்டலாகக் கேட்டான். “சார் நீங்க ஒரு மாதம் எவ்வளவு சம்பாதீப்பீங்க?” அசிங்கமாக இருக்கும் என்பதால் நான் சொல்லவில்லை. அவன் என் மௌனத்தைப் பொருட்படுத்தாமல் சிரித்தபடி சொன்னான், “சார் உங்க ஒரு மாச சம்பளத்தை நான் பத்து நாளில் சம்பாரிச்சிருவேன்.” எனக்கு கடுமையான எரிச்சல் வந்தது. அவமதிக்கப்பட்டதாக உணர்ந்தேன். இருந்தாலும் பொருட்படுத்தாமல் அவனை அழைத்து அவன் என்ன சொல்ல வருகிறான் எனக் கேட்டறிந்தேன். அவனுடைய அப்பா ஒரு கடை வைத்திருக்கிறார். அதில் அவன் ...