வசீகரமான பேச்சு and வாடிக்கையாளர் கவர்ச்சியான பேச்சை 7ஆம் பாவம் சொல்லும். 7 ஆம் பாவம் கெட்டால் கடுகடுப்பு பேச்சு 7ஆம் பாவம் இளமையில் காம பேச்சும், முதுமயில் ஆன்மீக பேச்சும் தரும். -----------@@@-@@@--------@@@@@@@- வாடிக்கையாளர் • 7இல் உள்ள கிரகம் 7ஆம் வீட்டு அதிபதி எங்கு உள்ளாரோ அந்த காரக வாடிக்கயாளர்கள் அமைவார்கள். • 7இல் பெண் கிரகம் இருந்தால் பெண் வாடிக்கையாளர் அதிகம். • 7இல் சூரியன் அல்லது குரு இருந்தால், பதவி அந்தஸ்து உள்ளவர்கள், ஆன்மீக தொடர்பு உள்ளவர்கள் வாடிக்கயாளராக இருப்பார்கள். • 7இல் சனி இருந்து திதி சூனியம் அல்லது பாதகம் சம்மந்தம் இருந்தால் கடன் வைக்கும் வாடிக்கயாளரே அமைவார்கள். • 7இல் எந்த கிரகமும் இல்லையெனில் சனி+கேது உள்ளதாக கருத்தில் கொண்டு 7ஆம் அதிபதி எங்கு எப்படி உள்ளார் என பார்த்து பலன் சொல்லி விடலாம். • யாருக்கு விளம்பரம் தேவையில்லை: 7ஆம் அதிபதி 1,இல். 7ஆம் அதிபதி 2,இல் 7ஆம் அதிபதி 7,இல் 7ஆம் அதிபதி 5,இல் 7ஆம் அதிபதி 9,இல் (5, 9, தேடி வரும் பாவம்) இவர்களுக்கெல்லாம் வாடிக்கையாளர்கள் வந்துக்கொண்டேதான் இ...
இடுகைகள்
செப்டம்பர், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
திருஷ்டி போக்கும் கல் உப்பு அறிவியல் உண்மைகள் கண் திருஷ்டி எனப்படும் தீயபார்வை மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். குடும்பத்தில் ஏற்படும் காரணம் புரியாத இன்னல்கள் மூலம் இதனை நாம் உணரலாம். உலகில் கண் திருஷ்டிக்குப் பயப்படாதவர்களே இல்லை. கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்பார்கள். பிரபல தத்துவ ஞானி பிரான்ஸிஸ் பேகன், ஒருவருக்கு பொறாமை மேலிடும் போது முதலில் அது அவரது கண்களில்தான் வெளிப்படுகிறது என்கிறார். மனிதனின் கண்களிலிருந்து வெளிவரும் ஆற்றல் சில சமயங்களில் மிருகங்களை அல்லது குழந்தைகளைக் கூடக் கொல்லும் ஆற்றல் படைத்தது. சிலருக்கு இன்னும் அதீதமான ஆற்றல் கண் பார்வையில் இருக்கிறது. அவர்கள் பார்வையினாலேயே சாபம் இட வல்லவர்கள்’ என்கிறார் திருஷ்டியை அறிவியல் ரீதியில் விளக்கம் அளித்த அறிஞர் ப்ளூடார்க்! இதே போல கி.பி.மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஹெலியோடோரஸ், “ அருமையான ஒன்றை பொறாமை கொண்ட கண்ணுடன் ஒருவன் பார்த்தானானால் சுற்றி இருக்கும் சூழ்நிலையையே அவன் மாற்றுகிறான். உயிரைப் போக்கும் அளவு மோசமான சூழ்நிலையை உருவாக்குகிறான், அத்துடன் தனது விஷத்தைக் கண்கள் மூலம் தனக்கு அருகில்...
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
முதலில் வாய் சுமல் (smell), துர்நாற்றம் எடுக்கிறது என்றால். காரணம் குடல் சுத்தமில்ல என்பதே அர்த்தம் 100/100 உண்மை. இதுக்கு இருக்கும் ஒரே செயல் குடலை சரி செய்வது. இந்த உலகத்தில் உள்ள எல்லா மனிதர்களுக்கும் அனைத்து விதமான நோய் வருவதற்கு காரணமே, குடலை நம்ம கவனிக்காமல் விட்டது தான்.! அதனால முதலில் செய்ய வேண்டிய செயல் அதிகாலைல எழுந்து,பல் விளக்கிட்டு டீ குடிக்காம 3கிளாஸ் தண்ணி குடிங்க. அப்புறம் கொஞ்சம் தூரம் நடந்து செல்லுங்கள் பின்னர் வந்து கழிவறையோ அல்லது திறந்த வெளியோ என்பது நீங்க இருக்கும் இடத்தை பொறுத்து. இதை முடிச்சிட்டு, வெறும் வயிற்றில் 50ml வெளக்கண்ணை எடுத்து குடிங்க. குடிச்சுட்டு, அன்னைக்கு காலை உணவு சாப்பிடாதீங்க kk. ஆனால் கண்டிப்பா அன்னைக்கு மதியத்துக்குள்ள வயற்றில் உள்ள கழிவு எல்லாம் 4 @ 5 டைம் வெளியேறும் லூஸ் மோஷன் மாதிரி போகும். அதை பற்றி கவலை பட வேண்டாம். மதியம் வரைக்கும் எதுவும் சாப்பிடாதீங்க. அப்புறமா இந்த லூஸ் மோஷனை சரி செய்ய உப்பை தண்ணீர் la கரைச்சு ஒரு கிளாஸ் குடிங்க சரியாகிடும். அதன் பின்னர் சாப்பிடுங்க. ஆனால், சாப்பிட்டு ...
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
தோஷம் போக்கும் சாதக நட்சத்திரம் ======================================= ஒருவரது ஜென்ம நட்சத்திரத்தில் இருந்து எண்ணி 6, 15 , 24 நட்சத்திரங்கள் சாதக நட்சத்திரங்கள் ஆகும். மறைந்து போன உங்கள் குலதெய்வம் அறியவும், தோஷம் போக்கவும், உடல் உபாதை குணம் பெறவும் சாதக நட்சத்திரத்தில் பிறந்த மகான் அல்லது கடவுளை வணங்க அல்லது அந்த நட்சத்திர வடிவத்தை உபயோகம் செய்து நலம் பெறலாம். உதாரணமாக, பூராடம் என்ற நட்சத்திரத்தில் இருந்து வரும் ஆறாவது நட்சத்திரம் "பூரட்டாதி". அது போல 15 வது நட்சத்திரம் "புனர்பூசம்", 24 வது நட்சத்திரம் "விசாகம்". ஒருவருக்கு தோஷம் போக்கும் நட்சத்திரம் சாதக நட்சத்திரம் ஆகும். பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர் பாம்பன் ஸ்வாமிகள். (தகவலுக்கு நன்றி ஸ்ரீனிவாசன் சார்). இவர் ஒரு முருக பக்தர். முருகனின் நட்சத்திரம் "விசாகம்" என்று அனைவரும் அறிந்ததே. விசாகம் என்ற நட்சத்திரத்தின் அதிபதி குரு ஆகும். குரு ஆளும் மற்ற நட்சத்திரங்கள் "பூரட்டாதி" மற்றும் "புனர்பூசம்". தனது கணுக்காலில் உண்டான எலும்பு முறிவை, விசாக நட்சத்திர உருவான முரு...
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
இந்த 3 விஷயம் தெரிஞ்சா ஜோதிடம் ரொம்ப ஈசி! நீங்களும் ஆகலாம் ஜோதிடர் ! 1. எங்க சுத்துனாலும் இந்த 12 ராசிக்கட்டம்தான் 2. அந்த கட்டத்தில் மாறாத ராசியின் பெயர்கள் வரிசையாக 3. அந்த அந்த ராசிகளின் ஓனர் உரிமையாளர் ஆட்சியாளர் பெயர்கள் (எப்போதும் மாறாத அந்த அந்த கட்டத்துக்கு - வீட்டுக்கு அவுங்க அவுங்கதான் ஓனர்!) நட்சத்திரங்கள் ராசிக்கட்டங்கள் மாறவே மாறது! - standard places ! - நிலையானது கிரகங்கள் மட்டுந்தான் சுத்திகிட்டே வரும் இது தெரிஞ்சா ஜோதிடம் ரொம்ப ரொம்ப ஈசி ! - நிலையற்றது! எனவே நிலையான ராசிகட்டங்கள் 12 ! - & நட்சத்திரங்கள் 27 ! - நிலையானது ! கிரகங்கள் மட்டுந்தான் சுத்திகிட்டே வரும் - நிலையற்றது! இவுகளின் தனிப்பட்ட குணங்கள் செயல்கள் - விருப்பங்கள் நடவடிக்கை தெரிந்தாலே இவுக மத்த கிரகத்துடன் சேரும்போது நிகழும் ரசாயன மாற்றம் தெரிந்தாலே நீங்க ஜோதிட எஞ்சினியர் ஆகிடலாம்!
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
ஜோதிட ஆர்வம் யாருக்கு வரும் =========================== ஜோதிடம் என்பது கர்ம பலனை கூறும் கலையாகும். ஜோதிடத்தில் கர்மக்காரகன் என்பது சனியாகும். எனவே பிருகு நந்தி நாடி முறையில் சனியை கொண்டு ஒருவருக்கு ஜோதிட ஆர்வம் வருமா அல்லது ஜோதிடம் படிப்பாரா என்பதை அறியலாம். சனி இருக்கும் இடத்திலிருந்து எண்ணி வரும் 1,2,5,9 ம் இடங்களில் குரு அல்லது புதன் அல்லது சந்திரன் அல்லது கேது இருப்பவர்கள் ஜோதிட ஆர்வம் கொண்டவர்கள். ஜாதகத்தில் சனியுடன் பரிவர்த்தனை பெறும் குரு அல்லது புதன் அல்லது சந்திரன், அதீத ஜோதிட ஆர்வம் தரும்.
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
பெண்கள் ஜாதக பலன்கள் ++++++++++++++++++++++++++ 1) ராசி அல்லது நவாம்சத்தில் ஏழாம் வீடு சுபர் வீடாக அமைந்தால் வாய்க்கும் கணவன் நல்லவனாக இருப்பான்.சகல அந்தஸ்தும் பெற்று திகழக்கூடியவனாக இருப்பான். 2)எட்டாம் வீட்டுக்கு உரிய கிரகம் சுபகிரகமாக இருந்தால் மகிழ்ச்சியான வாழ்வும் மாங்கல்ய பலமும் நல்ல முறையில் இருக்கும். 3)ஒன்பதாம் வீட்டுக்குரிய கிரகம் சுபராக இருந்தால் அவளுக்கு பிறக்கும் குழந்தைகள் சிறப்பாக வாழக்கூடியவர்களாக இருப்பார்கள். 4)நான்காம் வீட்டிற்குரிய கிரகம் சுபகிரகமாக இருந்தால் அவள் கற்புநெறி தவறாதவளாக இருப்பாள். 5) பெண்ணின் ஜென்ம லக்கினத்திற்கு திரிகோணத்தில் சுபகிரகங்கள் இருந்தால் அவள் வாழ்க்கை வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சி நிரம்பியதாக இருக்கும்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
சனி+ சுக்ரன்........ பிறப்பு ஜாதகத்தில்.... சேர்க்கை, பார்வை அல்லது பரிவர்த்தனை பலன்கள்..... வேலை அல்லது தொழில் செய்யக்கூடிய பெண் மனைவியாக அமைவாங்க... சொத்து உள்ள பெண் மனைவியாக அமைவாங்க... ஜாதகர் செய்யும் தொழிலில் மனைவியின் ஒத்துழைப்பு இருக்கும்.... பொதுவா இந்த கிரக சேர்க்கை அமைப்பு தாரவழி சொத்து உடையோன் என்பது விதி.... இந்த சேர்க்கைக்கு சொகுசான இடத்தில் வேலை செய்பவராகவும்..... பணம் புழங்கக்கூடிய இடத்தில் வேலை செய்யக் கூடியவராகவும்.... ஆடம்பரப் பொருட்கள் விற்பனை செய்யக் கூடியவராகவும்.... தொழிலில் பெண்களால் லாபம் அடைபவராகவும்..... குறுகிய காலத்தில் பெரும் பணக்காரர்களாகவும்.... ஆகக்கூடியவராக இருப்பர்.... ஜாதகரின் வீட்டுப் பெண்களும் சம்பாதிப்பவராக இருப்பர்.... என்னதான் இவைகள் அனைத்தும் சாதகமாக இருக்கும் பட்சத்தில்.... தன்னுடைய கம்பெனியில் அல்லது தனக்கு கீழ் வேலை செய்யும் பெண்களிடம், தன் தகுதியை விட்டு கீழே இறங்கி பழக்கம் கொண்டவராக இருக்க வாய்ப்பு உண்டு........ இந்த கிரக சேர்க்கை க்கு குருவின் பார்வை அல்லது சேர்க்கை இருக்கும் பட்சத்தில்.... பங்குச் சந்தை,...
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
*நாம் செய்த கர்ம வினைகளுக்கு ஏற்ப நமது உடல் அமையும். மனித உடலில் அவன் செய்த வினைப்பதிவுகள் அனைத்தும் மூலாதாரச் சக்கரம் என்று சொல்கின்ற முதல் சக்கரத்தில் பதிந்துள்ளது. அதற்கு நாயகன் விநாயகர் ஆவார்.* வினைகளுக்கு நாயகன் விநாயகன். மனிதனுடைய வெவ்வேறு வினைகளை வேரோடு அறுத்து மங்களத்தைக் கொடுப்பவர் விநாயகர் ஒருவரே. மனித உடல் ஓர் அற்புத இறை சக்தியை உள் அடக்கிய பெட்டகம். இந்த உடல் உள் உறுப்புக்களை இயக்குவது வெவ்வேறு சக்கரமாகும். முக்கியமாக ஆறு ஆதார சக்கரங்களை நம் முன்னோர் வழிவந்த சித்தர்கள் கோடிட்டு காட்டியுள்ளனர். இதில் எல்லா சக்கரத்திற்கும் மூல ஆதாரச் சக்கரமாக முதல் சக்கரம் இருக்கிறது. அதற்கு தலைவர் கணபதி. இவர் பச்சைக்கொடி காட்டினால்தான் நாம் அடுத்தடுத்த சக்கரத்திற்கு செல்ல முடியும். மூலாதாரம் - கணபதி சுவாதிஷ்டானம் - பிரம்மா, சரஸ்வதி மணிபூரகம் - மகாவிஷ்ணு, மகாலெஷ்மி அனாகதம் - சிவன், பார்வதி விசுக்தி - அர்த்தநாரீஸ்வரர் ஆக்ஞை - சதாசிவம் சிதாகாசம் - வெட்டவெளி யோகம் என்றால் இணைதல் என்று ...
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
தொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால்?... பொதுவாக உணவில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை அனைவரும் தூக்கி எறிந்துவிடுவோம். ஆனால் அந்த கறிவேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட்டு வந்தால் என்ன நன்மைகளெல்லாம் கிடைக்கும் என்று தெரியுமா? கறி வேப்பிலை இலையின் மருத்துவ இரகசியங்கள்!!!... கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி2, வைட்டமின் சி, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை வளமாக நிறைந்துள்ளது. கறிவேப்பிலை முடியின் வளர்ச்சிக்கு நல்லது என்று பலர் சொல்ல கேட்டிருப்போம். ஆனால் அதனை பச்சையாக தினமும் காலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இங்கு தொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் நடைபெறும் மாற்றங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. 🍀கொழுப்புக்கள் கரையும்: காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வந்தால், வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடையைப் பெற...
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
எமன் கூட குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் ஒருவரின் உயிரை எடுக்க முடியும் !!! தந்தை வழியில் பரம்பரை பரம்பரையாக வணங்கி வரும் ஒரு தெய்வத்தை தான் நாம் குலதெய்வம் என்கிறோம். ஒரு குழந்தைக்கு, தெய்வம் என்றால் என்னவென்று அறியாத வயதிலே, அதை குலதெய்வ கோயிலிற்கு அழைத்து சென்று அங்கு மொட்டை அடித்து காது குத்தி குலதெய்வத்தின் அருள் பெற செய்கிறோம். இப்படி செய்வதால் அந்த பரம்பரையில் வந்த அத்தனை புண்ணிய ஆத்மாக்களின் அருளும் அந்த குழந்தைக்கு கிடைக்கிறது. குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாக காணப்பட்டாலும், மற்ற தெய்வங்களை விட குல தெய்வத்திற்கே சக்தி அதிகம். நாம் பல தெய்வங்களை வழிபாடு செய்தாலும் அவை அனைத்தும் குலதெய்வத்தின் அனுமதி பெற்றே நமக்கு அருளினை வழங்க முடியும். எமன் கூட குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் ஒருவரின் உயிரை எடுக்க முடியும் என்றால் குலதெய்வத்தின் சக்தியை நீங்களே புரிந்துகொள்ளுங்கள். ஒருவர் யாரிடமாவது குறிகேட்க சென்றால், குறி சொல்பவர் நம்குல தெய்வத்தை அழைத்து அதனிடம் அனுமதி கேட்டே நம்மை பற்றிய விபரத்தை சொல்ல முடியுமே தவிர அவரால் தன்னிச்சையாக எதையும் சொல்ல முடியாது. நமக்க...
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
யாருக்கு கடன் கொடுக்கலாம் என கண்டறிய எளிய வழி எப்படி? 1. ஜாதகத்தில், 6ம் வீட்டோடு குருவுக்கு நண்பர்களான சூரியனும், செவ்வாயும், பலம் பெற்றால் நம்மிடம் கடன் வாங்கியவர்கள் நம்மிடம் திருப்பி செலுத்திவிடுவார்கள். 2. 6ம் வீட்டோடு குருவுக்கு பகைவர்களான சுக்கிரனும், புதனும் பலம் பெற்றால் நம்மிடம் கடன் வாங்கியவர்கள் திருப்பி செலுத்துவது கடினம். 3. 6ம் வீட்டில் குரு வக்கிரம் பெற்று இருப்பின், நம்மிடம் கடன் வாங்கியவர்கள் அதை நிதானமாக திருப்பி செலுத்துவார்கள். சூட்சுமம் : குரு தனகாரகன், 6ம் வீடு கடன் ஸ்தானம். குருவுக்கு நட்பு மற்றும் பகை கிரகங்கள். பரிகாரம் : கடன் உடன் பகை நண்பர்களே.
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
*உங்கள் கஷ்டங்கள் தீர ஒரு சுலப வழி !!!* 🛑 ******************************************* (சித்தர்கள் சொன்ன எளிமையான பரிகாரம்) கடனுக்கு வட்டி கட்ட முடியாமை, வருமானம் நிரந்திரமில்லாத நிலை, எவ்வளவுதான் வருமானம் வந்தாலும் சேமிக்க முடியாத நிலை,தேவையில்லாத பிரச்னைகளில் சிக்கி வழக்கமான வாழ்க்கை பாதிக்கப்படுதல், திடீர் நோய்,திடீர் அவமானம்,மருத்துவச் செலவு கட்டுக்கடங்காமல் செல்லுதல் இது போன்ற பிரச்னைகளைத் தீர்க்க ஒரு சுலபமான பரிகாரம் இருக்கிறது. பசுவுக்கு வெள்ளி கிழமை அன்று அகத்திக்கீரை வழங்கினாலே இந்தப்பிரச்னைகள் படி படியாக தீர்ந்துவிடும்.பசுவை இன்று கிராமங்களில் பார்க்கலாம்.அல்லது பால் பண்ணைகள்,மாட்டுப் பண்ணைகள்,பசு மடங்கள்,பெரிய கோவில்களில் உள்ள பசு மடங்களில் இவ்வாறு அகத்திக்கீரையை வழங்கலாம்.அல்லது வாழைப்பழங்களையும் தானமாக வழங்கலாம். கோயிலுக்குள்ளேயே உட்பிரகாரத்தில் பசுமடம் அமைந்திருக்கிறது.அந்த பசுமடத்தின் வாசலிலேயே அகத்திக்கீரைக் கட்டு ஒன்று ரூ.10/-க்கு விற்பனை செய்கிறார்கள்.நாம் அதை வாங்கி உள்ளே இருக்கும் பசுக்களுக்கு வழங்குவது மாபெரும் புண்ணியம். .சாதாரணமா...
water , vellam, panai எல்லாம் தண்ணீர் தான்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
எல்லாம் தண்ணீர் தான் - சதுரகிரி, மகேந்திரகிரி, கொள்ளிமலை, அத்திரிமலை போன்ற மலைகளில் பயணம் செய்யும் போது ஒவ்வொரு இடங்களிலும் ஓடும் நீரை ஒவ்வொரு தீர்த்தங்கள் என்று மக்கள் பயன்படுத்தி மகிழ்வதைப் பார்த்திருக்கிறேன். சில தீர்த்தங்களுக்குப் புராணக் கதைகள் உண்டு. வியாதிகளைப் போக்கியதாகவும், பாவங்களைப் போக்கியதாகவும், ஞானம் கொடுப்பதாகவும் பலவாறு புராணங்கள் சொல்லப்பட்டிருக்கும். மலைகளில் பாறை இடுக்குகளில், பள்ளங்களில் தேங்கி பிறகு சிறிது சிறிதாக நிரம்பி வரக்கூடிய தண்ணீர் அந்த பாறைகளில் உள்ள தனிமங்களின் குணத்தைப் பெற்றுவிடும். அது ஓடி வரக்கூடிய பாறைகளில் உள்ள தனிமங்களையும் கரைத்து எடுத்துக் கொள்வதால் அதில் தினமும் குளிப்பதாலும் அல்லது குடிப்பதாலும் அந்த தனிமங்களின் சக்தியினால் வியாதிகள் குணமாகும். சில இடங்களில் சில குறிப்பிட்ட மரங்களின் வேர்கள் உள்ள பள்ளங்களில் தேங்கி வரும் தண்ணீரில் அந்த வேரில் உள்ள மருத்துவ குணம் இருப்பதாலும் சில குறிப்பிட்ட வியாதிகள் நீங்கும். ஆனால் ஒரு நாள் குடிப்பதாலோ, குளிப்பதாலோ அது நிகழாது. குறைந்தது ஒரு மண்டலமாவது பயன்படுத்தினால் வியாதி...
திருமண பொருத்தம்-"ஆக்கினா பொருத்தம் "
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
திருமண பொருத்தம் ......!!!! ( இது பழைய " தமிழ் ஓலைச்சுவடியில் " கண்ட விஞ்ஞானத்துவமான குறிப்பு . நம் முன்னோர்கள் பாலினங்களை பற்றி நன்கு அறிந்துள்ளனர் என்பதற்கு இதுவே சான்று . மேலும் பாலினங்களின் திருமண குழப்பங்களுக்கு நிரந்தர தீர்வும் வழங்கியுள்ளனர் ..!) " ஆக்கினா பொருத்தம் " என்பது ஒவ்வொரு பாலினத்துக்கும் ஏற்றால் போல் பொருத்தமான வரனை தேர்ந்தெடுத்து " ஒருவனுக்கு ஒருத்தியாக " வாழ உதவும் துல்லியமான முறையாகும் . இம்முறைப்படி , பாலினங்களை அவர்களின் புருவ அமைப்பை கொண்டு நான்கு வகையாக வகைபடுத்துகிறார்கள் , அவை 1. இணைந்த புருவ ஆண்கள் 65% பேர் 2. தனிப்புருவ ஆண்கள் 35% பேர் 3. இணைந்த புருவ பெண்கள் 35% பேர் 4. தனிப்புருவ பெண்கள் 65% பேர் ஆக மொத்தம் பாலினங்கள் இரண்டு அல்ல , நான்கு வகைப்படும் இணைந்த புருவ ஆணுக்கு , தனிப்புருவ பெண்ணையும் , தனிப்புருவ ஆணுக்கு , இணைந்த புருவ பெண்ணையும் திருமணம் செய்து வைத்தால் தம்பதிகள் எப்போதும் ஒற்றுமையாக இருப்பார்கள் அப்படியில்லாமல் கண...
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
உதவி ---------- லக்கினம் ஜாதகரை குறிக்கிறது. லக்கினத்தினத்திற்கு மூன்றாமிடம் ஜாதரின் கையை குறிக்கிறது. லக்கினத்திற்கு ஏழாமிடம் நமக்கு எதிரே இருப்பவரையும் , ஏழுக்கு மூன்றாமிடமான ஒன்பதாமிடம் நமக்கு எதிரே இருப்பவரின் கையையும் குறிக்கிறது. எனவே மூன்றாம் இடம் நாம் கை நீட்டி கேட்கும் உதவியாகும். ஒன்பதாமிடம் ஒருவர் தாமாக முன் வந்து நமக்கு உதவிக்கரம் நீட்டுவதை குறிக்கிறது. உங்கள் ஜென்ம லக்கினத்திற்கு மூன்றாமிடம் யாருக்கு ஜென்ம லக்கினமாகவோ அல்லது ஜென்ம ராசியாக அல்லது நாம ராசியாக அமைகிறதோ அவர்களிடம் நீங்கள் கை நீட்டி உதவி கேட்டால் அவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். உதாரணமாக தனுசு லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு கும்ப லக்கினத்தில் பிறந்தவர்கள், கும்ப ராசியில் பிறந்தவர்கள் மற்றும் கும்ப ராசியை பெயர் ராசியாக கொண்டவர்களிடம் உதவி கேட்டால் உதவி கிடைக்கும். உங்கள் ஜென்ம லக்கினத்திற்கு ஒன்பதாமிடம் யாருக்கு ஜென்ம லக்கினமாகவோ அல்லது ஜென்ம ராசியாக அல்லது நாம ராசியாக அமைகிறதோ அவர்களிடம் நீங்கள் உதவி கேட்காமலேயே இருந்தாலும் அவர்கள் தாமாக முன் வந்து உங்களுக்கு உதவுவார...