water , vellam, panai எல்லாம் தண்ணீர் தான்

எல்லாம் தண்ணீர் தான் - சதுரகிரி, மகேந்திரகிரி, கொள்ளிமலை, அத்திரிமலை போன்ற மலைகளில் பயணம் செய்யும் போது ஒவ்வொரு இடங்களிலும் ஓடும் நீரை ஒவ்வொரு தீர்த்தங்கள் என்று மக்கள் பயன்படுத்தி மகிழ்வதைப் பார்த்திருக்கிறேன். 

சில தீர்த்தங்களுக்குப் புராணக் கதைகள் உண்டு. வியாதிகளைப் போக்கியதாகவும், பாவங்களைப் போக்கியதாகவும், ஞானம் கொடுப்பதாகவும் பலவாறு புராணங்கள் சொல்லப்பட்டிருக்கும். 


மலைகளில் பாறை இடுக்குகளில், பள்ளங்களில் தேங்கி பிறகு சிறிது சிறிதாக நிரம்பி வரக்கூடிய தண்ணீர் அந்த பாறைகளில் உள்ள தனிமங்களின் குணத்தைப் பெற்றுவிடும். அது ஓடி வரக்கூடிய பாறைகளில் உள்ள தனிமங்களையும் கரைத்து எடுத்துக் கொள்வதால் அதில் தினமும் குளிப்பதாலும் அல்லது குடிப்பதாலும் அந்த தனிமங்களின் சக்தியினால் வியாதிகள் குணமாகும். 

சில இடங்களில் சில குறிப்பிட்ட மரங்களின் வேர்கள் உள்ள பள்ளங்களில் தேங்கி வரும் தண்ணீரில் அந்த வேரில் உள்ள மருத்துவ குணம் இருப்பதாலும் சில குறிப்பிட்ட வியாதிகள் நீங்கும். ஆனால் ஒரு நாள் குடிப்பதாலோ, குளிப்பதாலோ அது நிகழாது. குறைந்தது ஒரு மண்டலமாவது பயன்படுத்தினால் வியாதியின் தீவிரத்தைப் பொறுத்து குணமாகும். ஆனால் எந்தெந்த நீரைக் குடித்தால் உடலில் என்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை சித்தர்கள் சொல்லியிருக்கிறார்கள் .

எல்லா நீரையும் அப்படியே உபயோகிக்கக் கூடாது . காடுகளில் உதகநீர் என்று ஒன்று இருக்குமாம் அதைக் குடித்தால் உள் உறுப்புகள் கடினத் தன்மை அடைந்து உயிருக்கே ஆபத்தாக முடியும் .

அதாவது மழை நீரைக் குடித்தால் குளிர்ச்சி, நல்லறிவு, சுக்கில சுரோணித உற்பத்தி இவையாவும் ஏற்படும்,

ஆலங்கட்டி மழை நீரைக் குடித்தால் சிலேஷம்ப் பிரமேகப் பெரும்பாடு, கண்களுக்கு புகைச்சல், கைகால் எரிதல், விக்க
ல், மயக்கம் இவைகள் நீங்கும். குளிர்ச்சி உண்டாகும்.

பனிநீரை சூரியன் உதிக்கும் போது அருந்தினால் சொறி, சிரங்கு, கிரந்தி, குஷ்டம், தாபம், காசம்,கிராணி, தனிவாதம், திரிதோஷம், தேகவறட்சி, நீரழிவு இவையெல்லாம் அடியோடு நீங்கும்.

ஆற்றுநீரைக் குடித்தால் வாதம், பித்தம், கப தோஷம், தாகம இவையெல்லாம் நீங்கும். சுக்கில விருத்தி உண்டாகும்.

குளத்துநீரைக் குடித்தால் வாதநோயை அதிகரிக்கும், மதுப் பிரமேகசலம், சீதளம் போன்ற குற்றங்கள் உண்டாகும்.

ஏரி, சுனைநீரைக் குடித்தால் வாயுவை உற்பத்தி செய்யும். வாத, பித்த தோஷங்களை உண்டாக்கும். ஒருநாள் எடுத்து வைத்திருந்து மறுநாள் அருந்தினால் உடலில் அதிக உஷணத்தை உண்டாக்கும்.

ஓடைநீரை அருந்தி வர தாகம் உண்டாகும், புஜபலம் பெருகும்.

கிணற்றுநீர் தாகம், உஷணம், அழற்சி, சூலை, சரீர வலி, இடுப்பு வலி, மயக்கம், வீக்கம்,பித்தம், போன்றவற்றை போக்கும்.

சுனைநீர் இருமலோடு கூடிய ஜுரம், வாதம், கபவாதம், பயித்தியம் போன்றவற்றை உண்டாக்கும்.

ஊற்றுநீர் மிகுந்த தாகம், அதிகப் பித்தம் போன்றவற்றை உடனே செய்யும்.

பாறை நீர் அதிக குளிர்ச்சி, வாதம், ஜுரம் உண்டாக்கும்.

அருவிநீர் அருந்த ஜலப் பிரமேகம் விலகும், பித்த ரோகம் விலகும், சிலேஷ்மத்தை உண்டாக்கும், தேகபலம் உண்டாகும்.

இவ்வாறாக பலவிதமான நீருக்கு பலவிதமான வியாதியைப் போக்கவோ அல்லது உண்டாக்கவோ கூடிய தன்மைகள் உண்டு .

எனவே மலைகளில் யாத்திரை செய்பவர்கள் நீரைக் கொண்டு செல்வது நல்லது. அது முடியாத பட்சத்தில் காய்ச்சி வடிகட்டியாவது குடிக்கலாம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் பொருளாதாரம் முன்னேற்றம் எனும் பலனை தந்தது என்பது

ராஜயோகாதிபதிகளும் அவருடைய தசைகளும் விளக்கம்

எந்த லக்ன/ராசியினருக்கு, படித்த படிப்புக்கான, வேலை கிடைக்கும். (அல்லது) எதை படிக்க வேண்டும்.