இயக்க சக்தியும், ஜீரண சக்தியும் ஜுரம் என்ற நோய் எதிர்ப்பு
இயக்க சக்தியும், ஜீரண சக்தியும் ஜுரம் என்ற நோய் எதிர்ப்பு சக்தியாக மாறும் செயல்முறை! உங்கள் குழந்தைகளுக்கு ஜுரம் ஏற்பட்டு விட்டால் முதலில் நீங்கள் உணர வேண்டியது, அது நம் உடலுக்கு நன்மையே என்பதாகும். அதாவது, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளது. உடலில் உள்ள நோய்களை எதிர்த்து அழிக்கும் வேலையைச் செய்து கொண்டிருக்கிறது. மற்றும் உடலின் பொதுவான இயக்க சக்திகளில் உடல் உறுப்புக்களான கை, கால்கள், வயிறு போன்றவற்றை இயக்கும் சக்தியிலிருந்தும் பெரும்பாலும் நோய் எதிர்ப்பு சக்தியாகத் திருப்பப்பட்டு விட்டது. . பசியும் ஜீரணமும் குறையும் எனவே, சுரத்தின் போது உடல் உறுப்புக்களின் இயக்க சக்திகள் குறைவாக உள்ள நிலையில் # வயிற்றின் இயக்கம் குறைவாக இருக்கும். இதன் காரணமாக ஜீரண சக்தி இல்லாமல் இருக்கும். # பசி எடுக்காது. # தாகம் மிகக் குறைவாகவே இருக்கும். # நோய் எதிர்ப்பு சக்தியாக மாற்றப்பட்டுள்ள ஜீரண சக்தி, நோயை எதிர்த்து உடல் இயக்க சக்தியாக மாறி திரும்பும் வரையில் ஜீரணம் மிகவும் பலவீனமாக இருக்கும். . ஜுரம் இரண்டே ந...