ஜோதிடம் சொல்ல நச்சுன்னு நாலு டிப்ஸ்.

*Point No 1

ஒருவர் நம்மிடம் ஜோதிடம் பார்க்க வந்திருந்தார் என்றால், ஜென்ம ராசிக்கு கோட்சார கேது எங்கே நிற்கிறது என்று பார்க்க வேண்டும்.  அங்கு தான் தடை  இருக்கும். நூல் பிடித்தற்போல் பிரச்சினையை கண்டுபிடித்து சொல்லி விட்டால், தங்குதடையின்றி ஜாதகரே பேச துவங்கி விடுவார்.

*Point No 2

தசா புத்தியை பார்க்கும் பொழுது புத்தி நாதன் நின்ற நட்சத்திர நாதனின் பாவங்கள் எதுவோ அது இயங்கும் எனபது நாம் அறிந்ததே. ஆனால் நடப்பு புத்திநாதனை விட்டு விட்டு அதற்கு முந்தைய புத்திநாதன் நின்ற நட்சத்திர நாதன் இயக்கிய பாவங்களை ஆராய்ந்தால் கடந்த காலங்களில் ஜாதகரின் வாழ்க்கை எப்படி இருந்தது என்று சொல்லி விடலாம். பின் ஜாதகர் தன்னாலே பேச துவங்கி விடுவார்.

*Point No 3

ஜாதகர் வந்த ஹோரையை வைத்து, ஒரு பிரசன்ன ஜாதகம் எழுதி வைத்து கொண்டால் ஹோராநாதன் ஜாதகருக்கு சுபராகும் பக்ஷத்தில் அவர் நினைத்து வந்த காரியம் விரைவில் நடக்கும் என்று சொல்லி விடலாம்.

*Point No 4

கோபக்கார செவ்வாய் எந்த பாவத்தில் நிற்கிறதோ அந்த பாவக உறவுகளால் தொல்லை தொந்திரவு ஜாதருக்கு உண்டாகும் என்று கூறி விட்டால் ஜாதகர் நம்மிடம் சரண்டர் ஆகிவிடுவார்.

*So*

3,6,8,12-ஆம் பாவங்களையும், பாவகாதிபதிகளையும் பற்றி திரும்ப திரும்ப பேசிக்கொண்டும், சிந்தனை செய்து கொண்டும் இருக்க கூடாது. நம்மிடம் வரும் ஜாதகரின் மனமறிந்து உண்மையை பட்டும் படாமலும் சொல்ல வேண்டும். அது தான் ஜோதிட தர்மமாகும்

 *கிரகங்களை கிரகம் நிற்கும் பாவங்களையும் எந்த அளவிற்கு உயர்த்தி வாழ்த்தி பேசுகிறோமோ அப்போது அவர்கள் நம் வாக்கினில் அமர்ந்து பேச துவங்குவார்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் பொருளாதாரம் முன்னேற்றம் எனும் பலனை தந்தது என்பது

ராஜயோகாதிபதிகளும் அவருடைய தசைகளும் விளக்கம்

எந்த லக்ன/ராசியினருக்கு, படித்த படிப்புக்கான, வேலை கிடைக்கும். (அல்லது) எதை படிக்க வேண்டும்.