சனி+ சுக்ரன்........

பிறப்பு ஜாதகத்தில்....

சேர்க்கை, பார்வை அல்லது பரிவர்த்தனை பலன்கள்.....

வேலை அல்லது தொழில் செய்யக்கூடிய பெண் மனைவியாக அமைவாங்க...

சொத்து உள்ள பெண் மனைவியாக அமைவாங்க...

 ஜாதகர் செய்யும் தொழிலில் மனைவியின் ஒத்துழைப்பு இருக்கும்....

பொதுவா இந்த கிரக சேர்க்கை அமைப்பு தாரவழி சொத்து உடையோன் என்பது விதி....

இந்த சேர்க்கைக்கு சொகுசான இடத்தில் வேலை செய்பவராகவும்..... பணம் புழங்கக்கூடிய இடத்தில் வேலை செய்யக் கூடியவராகவும்.... ஆடம்பரப் பொருட்கள் விற்பனை செய்யக் கூடியவராகவும்.... தொழிலில் பெண்களால் லாபம் அடைபவராகவும்..... குறுகிய காலத்தில் பெரும் பணக்காரர்களாகவும்.... ஆகக்கூடியவராக இருப்பர்....

ஜாதகரின் வீட்டுப் பெண்களும் சம்பாதிப்பவராக இருப்பர்....

என்னதான் இவைகள் அனைத்தும் சாதகமாக இருக்கும் பட்சத்தில்.... தன்னுடைய கம்பெனியில் அல்லது தனக்கு கீழ் வேலை செய்யும் பெண்களிடம்,  தன் தகுதியை விட்டு கீழே இறங்கி பழக்கம் கொண்டவராக இருக்க வாய்ப்பு உண்டு........

இந்த கிரக சேர்க்கை க்கு குருவின் பார்வை அல்லது சேர்க்கை இருக்கும் பட்சத்தில்.... பங்குச் சந்தை,  ரியல் எஸ்டேட் துறையில் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் வாய்ப்பும்....  மனைவி வழியில் ஏராளமான சொத்துக்கள் கிடைக்கும் வாய்ப்பும் ஏற்படும்.

சாதாரண நிலையில் இருந்தாலும்....
இந்த சேர்க்கை பார்வை

பொருளாதாரரீதியாக நல்ல வளர்ச்சியை தரும்.

பெண்களுக்கு இந்த சேர்க்கை இருக்கும் பட்சத்தில் வேலைக்குச் சென்று சம்பாதிப்பவராகவும் அல்லது சுயதொழில் செய்து சம்பாதிப்பதாகவும் இருப்பார்.

பொதுவா மனைவியாலும் பெண்களாலும் முன்னேற்றத்தை அடைய கூடிய ஜாதக அமைப்பு இது.

இவர்கள் முன்னேற்றத்திற்கு கண்டிப்பாக ஒரு பெண் காரனமாக இருப்பாங்க....

பெரும்பாலும் ஐடி கம்பெனியில் வேலை செய்து நிறைய சம்பாதிக்கும் பெண்களுக்கு உடன் ராகுவும் சேர்ந்து இந்த அமைப்பு இருக்க வாய்ப்பு உண்டு.

ஆண்கள் இந்த சேர்க்கை அமைப்பில் இருக்கும் போது பெண்கள் உபயோகப்படுத்தும் காஸ்மெட்டிக் பொருட்கள்.... பேன்சி  பொருள்கள்... விலை உயர்ந்த துணி வகைகள் விற்கும் கடை அல்லது தயாரிப்பு நிறுவனம் வைத்தால் நிறைய சம்பாதிக்கலாம்.

தன்னுடன் வேலை செய்யும் பெண்களை காதலித்து மணம் செய்யும் வாய்ப்பு உண்டு.

மனைவிக்கு சிறு சிறு உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு மனைவியால் மனக்கசப்பு ஏற்பட வாய்ப்பும் உண்டு

இது பொதுவான பலன்களே.... 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் பொருளாதாரம் முன்னேற்றம் எனும் பலனை தந்தது என்பது

ராஜயோகாதிபதிகளும் அவருடைய தசைகளும் விளக்கம்

எந்த லக்ன/ராசியினருக்கு, படித்த படிப்புக்கான, வேலை கிடைக்கும். (அல்லது) எதை படிக்க வேண்டும்.