உதவி
----------
லக்கினம் ஜாதகரை குறிக்கிறது. லக்கினத்தினத்திற்கு மூன்றாமிடம் ஜாதரின் கையை குறிக்கிறது. லக்கினத்திற்கு ஏழாமிடம் நமக்கு எதிரே இருப்பவரையும் , ஏழுக்கு மூன்றாமிடமான ஒன்பதாமிடம் நமக்கு எதிரே இருப்பவரின் கையையும் குறிக்கிறது. எனவே மூன்றாம் இடம் நாம் கை நீட்டி கேட்கும் உதவியாகும். ஒன்பதாமிடம் ஒருவர் தாமாக முன் வந்து நமக்கு உதவிக்கரம் நீட்டுவதை குறிக்கிறது.
உங்கள் ஜென்ம லக்கினத்திற்கு மூன்றாமிடம் யாருக்கு ஜென்ம லக்கினமாகவோ அல்லது ஜென்ம ராசியாக அல்லது நாம ராசியாக அமைகிறதோ அவர்களிடம் நீங்கள் கை நீட்டி உதவி கேட்டால் அவர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.
உதாரணமாக தனுசு லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு கும்ப லக்கினத்தில் பிறந்தவர்கள், கும்ப ராசியில் பிறந்தவர்கள் மற்றும் கும்ப ராசியை பெயர் ராசியாக கொண்டவர்களிடம் உதவி கேட்டால் உதவி கிடைக்கும்.
உங்கள் ஜென்ம லக்கினத்திற்கு ஒன்பதாமிடம் யாருக்கு ஜென்ம லக்கினமாகவோ அல்லது ஜென்ம ராசியாக அல்லது நாம ராசியாக அமைகிறதோ அவர்களிடம் நீங்கள் உதவி கேட்காமலேயே இருந்தாலும் அவர்கள் தாமாக முன் வந்து உங்களுக்கு உதவுவார்கள்.
உதாரணமாக தனுசு லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சிம்ம லக்கினத்தில் பிறந்தவர்கள், சிம்ம ராசியில் பிறந்தவர்கள் மற்றும் சிம்ம ராசியை பெயர் ராசியாக கொண்டவர்கள் தாமாகவே முன் வந்து கேட்காமலேயே ஜாதகருக்கு உதவுவர்.
கருத்துகள்
கருத்துரையிடுக