தீப ஆருடம்-ஜாதகம் இல்லாதவர்களுக்கு

தீப ஆருடம்
-----------
ஜாதகம் இல்லாதவர்களுக்கு ஜாதகம் பார்க்க நேரம் இல்லாதவர்களுக்கும் அன்றாட பலன்களையும் அவசரப் பலன்களைத் தெரிந்து கொள்ள தீப ஆருடம் என்ற ஒரு வகை ஜோதிடம் உள்ளது.அதாவது உங்கள் வீட்டின் பூஜை அறையில் திருவிளக்கை ஏற்றி வைத்து அது எப்படி எரிகிறதோ, அதைப் பொறுத்து பலன் அறிவதுதான் தீப ஆருடம் எனப்படும்.

தீப ஆருடம் பார்க்க நினைப்பவர்கள் குளித்து சுத்தமான ஆடை அணிந்து ஊதுபத்தி ஏற்றி பூஜை அறை விளக்கை ஏற்ற வேண்டும் விளக்கின் எதிரே கண்களை மூடி இஷ்டதெய்வத்தை சிறிது நேரம் தியானம் செய்ய வேண்டும் பிறகு கண்களைத் திறந்து எரியும் தீபச்சுடர் கண்கொட்டாமல் பார்க்கவேண்டும்.

விளக்கு ஆடாமல் அசையாமல் தீபச்சுடர் உயர்ந்து ஒரே நேராக இருந்தால் நினைத்த காரியத்தில் வெற்றி உறுதி.

 தீபம் அங்குமிங்குமாக அலை மோதினால் இப்போது நேரம் சரியில்லை என்று எடுத்துக்கொள்ளலாம்.

வலது பக்கமாக தீபச்சுடர் சாய்ந்து இருந்தால் காரியத்தில் இப்போது அவசரம் காட்ட வேண்டாம் என்பதாகும்.

இடது பக்கமாக தீபச்சுடர் சாய்ந்தால் காரியத்தில் நஷ்டம் உண்டாகும்.

 சுடர் தெறித்து தெறித்து எரிந்தால் தீமைகள் உண்டாகும்.

 விளக்கு அணைந்து விட்டால் நினைத்த காரியம் ஆபத்தான காரியம் என்று எடுத்துக்கொள்ளலாம்.

இந்த விளக்கு பரிட்சையை ஒரு காரியத்துக்கு ஒருமுறை மட்டுமே பரிசோதனை செய்து பார்க்க வேண்டும் இது ஆண்களும் பெண்களும் ஜாதகம் இல்லாதவர்களும் செய்யலாம் .


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் பொருளாதாரம் முன்னேற்றம் எனும் பலனை தந்தது என்பது

ராஜயோகாதிபதிகளும் அவருடைய தசைகளும் விளக்கம்

எந்த லக்ன/ராசியினருக்கு, படித்த படிப்புக்கான, வேலை கிடைக்கும். (அல்லது) எதை படிக்க வேண்டும்.