சனியின் காரகத்துவங்கள்:
சனிக்கு எவ்வளவோ காரகத்துவங்கள் உள்ளன. அத்தனையும் தீயகாரகத்துவங்கள்தான்.

பிறப்பற்ற இந்த வாழ்விற்கு தேவையற்ற நீண்ட ஆயுளை தந்து மனிதனை கர்மம் இயற்ற செய்பவனும் சனியே.

கதை வேறு.ஜோதிடம் வேறு.

சனி எந்தவொரு சுபக்கிரக தொடர்போ பெறாதபோது ( வர்க்கசக்கரங்கள் உட்பட) எந்த நல்லவற்றையும் தராது.

திருடன்,வஞ்சகன், மோசக்காரன்,நம்பவைத்து மோசம் செய்பவன்,தமோகுணம், தீயசெயல்கள்,
வறுமை,துன்பம், உழைக்கசெய்தல், கர்மம்( நற்கர்மம்,தீயமர்மம்) கீழ்நிலை,சாக்கடை,எச்சில்,உபயோகமற்றவை, அழுக்கு, தூய்மையற்ற இடம்,துரோகம், விதவை,கெட்டுப்போதல், அழிவு, நோய், தீராத துன்பம்,கடன்,மனித தன்மையற்ற செயல், கொடூரமாக தடந்துகொள்ளல் போன்ற அனைத்து தீயகாரகத்துவங்களும் சனியுடையது.சோம்பல், எந்த முயற்சியும் செய்யாமை தீயசனி தரும் பலன்களாகும்.

தன்னம்பிக்கையின்மையை பாவத்துவசனியே தருகிறது. எந்த செயல் செய்தாலும் பல இடையூறுகளையும்,காலதாமதத்தையும் பாவத்துவசனி வழங்கும். காலம்தவறுதல், நிகழ்ச்சிகளுக்கு தாமதமாக செல்லுதல், தாமதமாக சென்று பேருந்து,ரயில் போன்றவற்றை தவறவிட்டுவிட்டு வருந்துதல், காத்திருத்தல் சனியின் தீயசெயல்பாடே.

தேர்வில் மறந்துவிட்டு வெளியே வந்ததும் நினைவுக்கு வருதல், முக்கியமான விசயத்தைவிட்டு அல்லது மறந்துவிட்டு மற்ற சாதாரண விசயங்களுக்கு முக்கியத்துவம் தருதல், ஒன்றை செய்துவிட்டு வருந்துதல், தீயசனியின் செயல்பாடுகளாகும்.

லக்னம்,ராசியோடு சனி தொடர்புபெறுவது புணர்பூ என்ற தடை,தாமத இடர்பாடுகளை தரும்.

பாவத்துவசனி நல்ல வைராக்கியத்தையும் தீயசனி தீயவைராக்கியத்தையும்,வறட்டுபிடிவாதம்,மூடத்தனம் ஆகியவற்றை வழங்கும்.பொய்யான ஒன்றை உண்மையென்று நம்பவைப்பது பாவத்துவசனியாகும்.

உற்பத்தி,உருவாக்குதல்,ஜீவன், விரிவாக்கத்திற்கும்,நீதிக்கும் குரு காரகத்துவம் வகித்தால் அதன் அழிவுக்கும் சட்டத்திற்கும் சனி எதிர்காரகத்துவம் வகிக்கிறார்.

பழைய பொருட்களை பாதுகாப்பது,வரலாறு,புராதனசின்னம் , குளிர்ச்சியான பொருட்களை விரும்புவது சனியின் ஆதிக்கமுடையது.

சனி சுபவலுவில் இருந்தால். ஒருவரை அளவுக்குமீறி உண்மையானவராகவும், நியாயமானவராகவும், நல்லவராகவும்,தியானம், இறைநம்பிக்கை,வழிபாடுகள் மனதை ஒருமுக்ப்படுத்துதல்,யோகா, அஷ்டமாசித்துகளில் ஈடுபடுத்துவார். எவ்வளவு பணக்காரராக இருந்தாலும் எளிமை, வெறும்தரையிலும் படுத்துறங்குவது ,சுகபோக வாழ்க்கையை மனப்பூர்வமாக துறப்பது சுபத்துவசனியின் குணங்களாகும். நீசமான சனி சுகபோக வாழ்க்கையை உறுதிபடுத்துகிறார்.

வராஹமிகிராச்சாரியார் கிரகங்கள் வலுத்தால் அதன் முதன்மை காரகத்துவம் வலுக்கும் என்றும் சனிக்கு துன்பம்,துயரம் போன்ற காரகத்துவங்கள் அதிகரிக்கும் என்கிறார்.

சனி தன்னம்பிக்கையை குறைப்பவர்,மனசோர்வை தருபவர் என்பதால் சனியின் தீயகாலத்தில் இருப்பவர்கள் நீலநிறத்தை பயன்படுத்தக்கூடாது என்கிறார் ஜோதிடபேராசிரியர் திரு K.S கிருஷ்ணமூர்த்தி அவர்கள். அவர்கள் தன்னம்பிக்கைதரும் செவ்வாயின் சிவப்பு நிறத்தை அப்போது பயன்படுத்தவேண்டும் என்கிறார்.

சனி,புதன்,சந்திரன் கெட்டவர்கள் மனசோர்வும்,பயமும், தாழ்வுமனப்பான்மையும் கொண்டிருப்பர். அப்போது செவ்வாயின் காரகத்துவத்தை அதிகபடுத்துமாறு திரு K.S.K கூறுகிறார்.

பகலில் பிறந்த ஜாதகருக்கு சூரியன் பிதுர்காரகனாகவும் இரவில் பிறந்தவர்களுக்கெ சனி பிதுர்காரகராகவும் மூலநூல்களில் ஞானிகள் கூறியுள்ளனர்.

தீராத நீண்டகால நோயையும்,எலும்புகளில் நோயையும் தீயசனி குறிக்கிறார். உடல்ஊனத்தை சனியே குறிக்கிறார். மறைத்துவைக்கப்பட்ட ரகசியங்களை சனியே குறிக்கிறார்.காஸ்ட்ரிக் நரம்புகள்,உரோம வளர்ச்சியையும் சனியே குறிக்கிறார். இரத்தத்திலிருக்கும் நிணநீரோட்டம் ,ஊட்டசத்து குறைபாடு, கழிவுப்பாதை, டயாலிஸிஸ், பல்வலி,பல்டாக்டர்,எலும்புடாக்டரை சனியே குறிக்கிறார். ( மருத்துவம்- முதலில் செவ்வாய்).

சனி,செவ்வாய் சேர்க்கை,பரஸ்பர பார்வை விபத்து,ரணம்,அறுவைசிகிச்சை,காயம், எலும்புமுறிவு, உறுப்பு இழப்பு, பித்தப்பை கற்கள், முதுகுதண்டில் அடிபடுதல் ,தாமதம் ,தீவிரமனநிலை போன்றவற்றை தரும்.

சனி புதனை பார்த்தால் நரம்புதளர்ச்சி, பித்துநிலை, மூளைகுறை, பித்து, காதுசெவிடு, குளிரால் நடுக்கம், ஆஸ்துமா ,பேச்சுக்குறைபாடு,திக்குவாய் போன்றவை ஏற்படும்.

சனி சூரியனை பார்த்தால் வழுக்கை, இரத்த அழுத்தம், மூளையில் ரத்தக்கட்டி, மூளையில் ரத்தசோகை ( எழுந்தவுடன் மயக்கம்) இரத்தகுழாய் அடைப்பு ,இதயநோய், இதயபாதிப்பு உண்டாகும்.

சனி சுபத்துவமடைந்தால் உழைப்பால் உயர்தல்,அரசியல்,மக்கள் செல்வாக்கு, மக்கள்தலமை, நகரம்,ஊர்தலைவர்,ஊராட்சி மன்றம், பிளாஷ்டிக்,தார், பெட்ரோலியபொருட்களின் தயாரிப்பு பொருட்கள், தேங்காய்,கயிறு, விவசாயம், மெக்கானிக், ஆயில்நிறுவனங்கள்,போலிசாமியார்,நாத்திகன்,கடவுளின்பெயரால் ஏமாற்றுதல், பரதேசி, நபும்சகன், ஊனம்,உடல்உறுப்பை இழத்தல், அழுக்கான இடத்தில் வேலைசெய்தல், தனிமை விரும்பி,  ரசாயனகழிவுகள், டயர்தொழிற்சாலை, pVC, இரும்பு தொடர்புடையவை, சமுதாய தொண்டு ,முதியோர்,  மூன்றாம்பாலினம்,விதவை,நிலக்கரி, வாணியர், 
அடிப்படை தொழில்கள்,தொழிலாளர் நலத்துறை,சமூகநலம்,சமூகதொண்டு , ஆன்மீகம், மக்கள் கூட்டத்தில் வேலை,நீசக்கூட்டம், ஆள்அடிமை, மளிகைகடை, பழையபேப்பர்,பழையபொருள் வியாபாரம், அதிக எடையேற்றும் சரக்குவண்டி, இரவில்பலம், மோசடித்தொழிலில் லாபம், போன்ற பல்வேறு சுபக்காரகத்துவங்களை அதன் சுபவலுவுக்கேற்ப வழங்கும்.

சுபசனி மெதுவாகவும்,நிதானமாகவும், விடாமுயற்சியுடன் ஒருவரை செயலாற்றசெய்து உழைப்பினமூலம் உயர்த்துகிறது.சிக்கனம்,பொருமை,தயவு, கருணை, அறிவுபூர்வமாக யோசிக்கசெய்தல்,ஆன்மா,கடவுள் போன்றவற்றை உணரசெய்தல், அதிகசெலவுசெய்யாமை, ரகசியப்காத்தல், சேவையுணர்வு ஆகியவற்றை வழங்கும்.

சனைசரன் என்று அழைக்கப்படும் சனி மந்தமான செயல்பாட்டை குறிப்பவர்.

இரவில் பிறந்தவர்களுக்கு பிதுர்காரகனும் ஆவார்.

விவசாய நிலங்கள்,பண்ணை நிலங்கள்,கால்நடை,கோழிவளர்ப்பு ,எருமைகள், தானியங்களை விற்பவர், சலவைத்தொழில், மதுபானங்கள், வேலைக்காரன், அமிலம், முடிவெட்டும்தொழில், எடுபிடிவேலை,மூட்டைசுமப்பவர், குட்டை உருவம் உடையவரால் ஏற்படும் தீங்கு, மேற்குநாடுகள்,குளிர்பிரதேசங்கள், இஸ்லாமியநாடுகள், மண்ணிற்கு அடியில் உள்ள தாதுக்கள், ( தனிமம் அல்ல) தவிடு, தோல்தொழிற்சாலை, போன்றவற்றையும் சனி குறிக்கும். சனி அடிமை வேலையையும் குறிப்பதால் பத்தாமிடத்திற்கு நான்கு காரகர்களுள் ஒருவராகிறார்.

விரக்திமனநிலை, மேலிருந்து கீழ்விழுதல், பக்கவாதம், இடதுகால், நாபி, போன்றவற்றையும் குறிக்கிறார்.

சனி பாவத்துவமாக தொடர்புபெற்ற தசாபுக்தி காலங்களில் மறுப்பு,தடைதாமதம்,ஏமாற்றங்கள் உண்டாகும். பொருத்தமற்ற மனவாழ்வை ,சேர்க்கையை தரும்.

துப்புறவுதொழிலாளர்கள், கீழ்நிலை பணியாளர்கள், சேவைதொழில்களையும் சனி குறிக்கும்.

சனி ஒரு பாவகத்துக்கு தொடர்புகொண்டால் அதன் பாவத்தன்மைக்கேற்ப பலனை தாமதப்படுத்தி தரும்.

சனி பிப்ரவரி,மார்ச் மாதங்களை குறிக்கும்.குளிர்ச்சியான கிரகம்.

சனி ராகு அல்லது செவ்வாயோடு சேர்ந்தாலோ சூரியனோடு சேர்ந்தாலோ சனிதசா கொடுமையான தீயபலன்களை தரும். சுபத்தொடர்பு மட்டுமே குறைக்கும்.

குரு,சுக்கிரன்,புதன் தொடர்புகொண்ட சனிதசா எந்த லக்னமானாலும் அதிக தீமை தருவதில்லை. கடகம்,சிம்மம்,மேசம்,விருட்சிகம் லக்னமாகவோ ராசியாகவோ கொண்ட ஜாதகர்களுக்கி சனி யோகபலனை தருவதில்லை. ஆனாலும் கேது, குரு,சுக்கிரன் தொடர்புகொண்டு, யோகிசாரம், யோகி, ராசிநாதன் ஆட்சி,உச்சம் என்றநிலைகளில் விதிவிலக்காக நன்மைகளை தரும்.

சனி கேதுவுடன் ராசியிலோ, நவாம்சத்தில் சேர்ந்திருந்தால் சூட்சுமவலுவில் ஒன்று என்றும் இது சனி நற்பலன்களை தரும் அமைப்பு என்றும் ஜோதிடகலையரசு ஆதித்ய குருஜி அவர்கள் கூறியுள்ளார்.

பெரிய கட்டியங்கள் கட்டுதல்,ராணுவதளவாட ஆய்வகங்கள், பஞ்சம்,பூகம்பம், தொற்றுநோய் பரவுதல் போன்றவற்றையும் சனியே குறிப்பிடுகிறார்.( அழிவு)

சனி,குருசுக்கிரனுடன் தொடர்புபெறுவது யோகம் என்றாலும் மலசிக்கல், ஆண்தன்மையின்மை,மலட்டுத்தன்மை, ஹார்மோன் குறைபாடுகள்,சிறுநீரக குறைபாடுகளையும் தரும். கற்ப்பப்பை கோளாறு தரும்.

தொழிலாளர் பிரச்னை, அதிகவரி, மறியல்,போராட்டங்களையும், ஏற்றுமதி பாதிப்பு, அயல்நாட்டு பணபரிமாற்ற பிரச்னை பூமி அதிர்வு, பலர் வீடுகளை இழத்தல், தேசியமயமாக்கல், தனியார்மயமாதல், சுரங்கங்களவயும், பண்ணைகளையும் கைபற்றுதல், போர்கள், போக்குவரத்துநஷ்டங்கள் , எல்லாப்பொருட்களும் பற்றாக்குறை நிலமை ஆகியவை தீயசனி குறிப்பதாக பேராசிரியர் திரு K.S.K அவர்கள் தனது நூலில் குறிப்பிடுகிறார். அகோரமூர்த்தி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் பொருளாதாரம் முன்னேற்றம் எனும் பலனை தந்தது என்பது

ராஜயோகாதிபதிகளும் அவருடைய தசைகளும் விளக்கம்

எந்த லக்ன/ராசியினருக்கு, படித்த படிப்புக்கான, வேலை கிடைக்கும். (அல்லது) எதை படிக்க வேண்டும்.