இது குஜராத் ஜோதிடர் சொல்லி தந்தது. எல்லோரும் செய்யலாம். ஒரு செம்பு பாத்திரம் அல்லது கப். அதில் அரை cup தண்ணீர் அதில் ஏதேனும் பூக்கள் சிகப்பு நிறம் செவ்வரளி போன்றவை சிறப்பு. எனினும் எந்த பூ என்றாலும் பரவாயில்லை. அதையும் தண்ணீருடன் அந்த cup இல் போட்டு சூரியன் உதிக்கும் கிழக்கு திக்கு நோக்கி தரையில் ஏதாவது செடிக்கு ஊற்றி விட வேண்டும் " ஓம் சூர்யாய நமஹ " மனதில் 3 முறை அல்லது அமைதியாக சொல்லலாம். காலை 5.30 to 6.00 நலம். எல்லா நாளும் செய்யலாம் அல்லது நடுவில் அவ்வப்பொழுது gap விட்டாலும் தவறில்லை. செம்பு cup இல்லாதவர்கள் plastic, பீங்கான் அல்லது கண்ணாடி cup அல்லது டம்ளர் பயன்படுத்தலாம். அண்ணா upload செய்துள்ள அதே design இருக்க வேண்டும் என அவசியம் கிடையாது. பூ வேண்டும் என்பதும் கிடையாது.. தண்ணீர் இருந்தாலும் போதும்.. விரைவில் பொருளாதாரம் முன்னேற்றம் எனும் பலனை தந்தது என்பது சொந்த அனுபவம் நன்றி வணக்கம் 🙏🏻 வாழ்க வளர்க 🤲 வாழ்க வையகம் 🙌
ராஜயோகாதிபதிகளும் அவருடைய ______________________________________ தசைகளும் ____________ மேச லக்னத்திற்கு குருதசை 30 வயதில் ,அதாவது நல்ல சம்பாதிக்கற வயதில் வருமாயின் அவர்கள் அதிர்ஷ்டசாலிகள். குரு,ஆட்சி, உச்சம்,திக்பலம் பெற்று கேந்திர திரிகோணங்களில் சனி,ராகு,கேது,புதன் ,செவ்வாய் போன்ற கிரகங்களில் தொடர்பின்றி சுபத்தன்மை அடைந்திருந்தால் அவருடைய தசையில் பேரும் புகழும், அதிர்ஷ்டமும், செல்வாக்கும், பதவி,புகழ், அந்தஸ்து, நல்ல குழந்தை பாக்கியங்களும், தன பிராப்தங்களும்,ஆன்மீகத்தின் மூலமாக உயர்வு,பணம் , கோயிலுக்கு பக்கத்தில் தொழில் என்று உச்சத்துக்கு செல்ல வைப்பார். ரிஷப லக்கனத்திற்கு சனி ஒருவனே மேலான ராஜயோகத்தை தருவார். சனி ஒருவரே ராஜயோகாதிபதி.சனி தர்ம கர்மாதிபதி. சனி தசையை தொடர்ந்து புதன் தசையும் இவர்களுக்கு தொடர்ந்து வருவது ஒரு வரப்பிரசாதமான ஒரு அமைப்பு. ரிஷப லக்ன அன்பர்களுக்கு சனி புதன்,சுக்கிரனுடன் இணைந்து சுபத்தன்மை அடைந்து நல்ல இடங்களில் அமைந்து 30 வயதுக்கு அருகில் தசை வரும் போது வாழ்க்கையில் சகலவிதமான பாக்கியங்களையும் தரும் என்பதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை. ரிஷப லக்கனத்திற்கு ச...
எந்த லக்ன/ராசியினருக்கு, படித்த படிப்புக்கான, வேலை கிடைக்கும். (அல்லது) எதை படிக்க வேண்டும். என கண்டறிய எளிய வழி. எப்படி?. ஜாதகத்தில், எந்த லக்னமாக இருந்தாலும், 4மிடம் கல்வி. 9மிடம் உயர் கல்வி. அதுபோல் 6மிடம் வேலை (Service) , 10 மிடம் சுயதொழில் ( Job). ஜாதகரின் 4 மிடமோ, 9 மிடமோ, கா.பு.த. 6 (கன்னி), 10 (மகரம்) வருமாயின், படித்த படிப்புக்கான வேலை அமையும். ரிஷபம் 9(10). மிதுனம் 4(6). துலாம் 4(10). மகரம் 9(6). இந்த லக்ன / ராசியினருக்கு இது போல் படித்தமைக்கான வேலை அமையும். உதாரணம் :- துலா லக்னம், 4மிடம் மகரம் (கல்வி) இந்த இடம் கால புருஷனுக்கு 10 ஆக (Job) வரும். சூட்சுமம் :- மகரத்தில் வரும் சூரியன், சந்திரன், செவ்வாய் காரக சம்பந்தமான படிப்பு வேலை தேர்ந்தெடுத்து அமைத்து கொள்ள வேண்டும். நண்பர்களே. குறிப்பு :- அவரவர் ஜாதகத்தில், 6 (Or) 10 எது வலுத்து உள்ளதோ, அந்த பாவக காரகம் சார்ந்த படிப்பினை தேர்ந்து எடுத்து படிக்க (மாணவர்களுக்கு) வழி காட்ட வேண்டும்.
கருத்துகள்
கருத்துரையிடுக