யார் மூலம் பண உதவி கிடைக்கும்
=====================================
சுக்கிரனுக்கு 1, 2, 5, 7, 9 இல் குரு பலமுடன் இருக்க, ஆன்மீகவாதிகள், பிராமணர்கள், வங்கி, நீதிபதி, தர்மகர்த்தா அல்லது கோவில் நிர்வாகி மூலம் பண உதவி கிடைக்கும்.
சுக்கிரனுக்கு 1, 2, 5, 7, 9 இல் புதன் பலமுடன் இருக்க, நண்பர்கள், மாமன், இளைய சகோதரன், ஆசிரியர்கள் அல்லது வியாபாரிகள் மூலம் பண உதவி கிடைக்கும்.
சுக்கிரனுக்கு 1, 2, 5, 7, 9 இல் சனி பலமுடன் இருக்க மனைவி, மகள், மருமகள், இளம்பெண்கள் மூலம் பண உதவி கிடைக்கும்.
சுக்கிரனுக்கு 1, 2, 5, 7, 9 இல் செவ்வாய் பலமுடன் இருக்க, நில விற்பனை, கணவன், தம்பி, சித்தப்பா, மச்சான், காவல்காரர், நில தரகர், ஆயுத விற்பனையாளர் மூலம் பண உதவி கிடைக்கும்.
சுக்கிரன் 1, 2, 5, 9 இல் ராகு இருக்க முஸ்லீம், தகப்பன் வழிப் பாட்டன், கடத்தல் தொழில் செய்பவர், விதவை, வெளிநாட்டு வர்த்தகம் செய்பவர், விபசாரம் செய்பவர், சினிமாத் தொழில் செய்பவர் மூலம் பண உதவி கிடைக்கும்.
கருத்துகள்
கருத்துரையிடுக