ஜாதகத்தில்_மிக_நீண்ட_காலம் யோக_தசை_நடப்பவர்கள் .......?
ஜாதகத்தில்_மிக_நீண்ட_காலம்
யோக_தசை_நடப்பவர்கள்
நற்பலனை_மட்டுமே
தொடர்ந்து_அனுபவிப்பார்கள்
என்பது_சரிதானா?
ஒரு ஜாதகருக்கு நன்மை தரும் அமைப்பில் (குரு தசை) 16 வருடம், (புதன் தசை) 17 வருடம் , (ராகு தசை ) 18 வருடம், (சனி தசை) 19 வருடம், (சுக்கிர தசை) 20 வருடம் என்று மிக நீண்ட காலம் ஒரு நல்ல தசை நடந்தாலும் கூட, அவர் ஜாதகத்திலுள்ள தோச அமைப்பைப் பிரதிபலிக்கும் பிற கிரகங்கள், அந்த நல்ல கிரகத்தின் தசா காலத்தில் வரும் தங்களின் புக்தி மற்றும் அந்தர காலங்களில் தங்களின் கெடுபலனைத் தரவே செய்வார்கள்.
அந்த அசுப பலன் தரும் புக்தி மற்றும் அந்தர கால கட்டங்களில், அந்த மிக நீண்ட காலம் நல்ல கிரக தசா நடக்கும் ஜாதகர் தீய பலனை அனுபவிக்கவே செய்வார்.
-வெளி உலகம் நன்மை என்றால் என்ன நினைக்குது? படிப்பு, தொழில், உத்யோகம், வியாபாரம், பணம் சம்பாதித்தல், பேங்க் பேலன்ஸ், வீடு, கார், கல்யாணம், குடும்பம், குழந்தை என்று மட்டும் தான் நினைக்குது. அந்த மாறி நற்பலன்களை தொடர்ந்து, அந்த ஜாதகர் அனுபவிப்பார் என்பது உண்மை தான். இல்லேங்கல.
-ஆனா, இதத் தவிர அந்த ஜாதகரின் வெளியுலக வாழ்க்கைல வெளிப்படையா தெரியாத தீராத நோய், தீர்க்க முடியாத கடன், மறைமுக எதிரிகள் மற்றும் அவரின் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கைல * மனைவி குழந்தைகளால் ஏற்படும் கடுமையான அவமானம், அவரின் ரகசிய தொடர்பு மனிதர்களால் அனுபவிக்கும் வெளில தெரியாத, சொல்ல முடியாத வேதனைகள், அந்த ரகசிய தொடர்பு மனிதர்களிடம், தன் சொத்து, சுகத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருக்கும் அவல நிலை என்று எத்தனையோ தீய பலனை அனுபவிப்பார்கள். அது எல்லாம் நமக்கு வெளிப்படையாத் தெரியாததால, ஜாதகத்தில் மிக நீண்ட காலம் நல்ல யோக தசா நடப்பவர்கள் எல்லாம், அந்த தசா காலம் முழுக்க நெல்லாருப்பாங்க என்று முடிவு சொல்வது சரியல்ல.
-மேலும் அந்த நல்ல தசா நடக்கும் ஜாதகரின் ஜாதகத்தில் உள்ள தோச அமைப்புகள் வெளில தெரியா விட்டாலும், அந்த ஜாதகரின் வாழ்க்கையை பாதிக்கவே செய்யும். அந்த தோச அமைப்புகளால் அவர் அனுபவிக்கும் வெளிப்படையா தெரியாத தீய பலன்கள் எல்லாம் * அவரின் ரகசிய வாழ்க்கை தெரிந்த அவரின் நட்புகள் மற்றும் உறவுகளுக்கு மட்டுமே தெரியும்.
-எனவே வெளி வாழ்க்கைல, ஒரு ஜாதகர் அனுபவிக்கும் நல்ல பலனை மட்டுமே வைத்து, அவர் ஜாதகத்தில் தோசமே இல்லை, முழுக்க முழுக்க நன்மை தான் என்று கூறுவது சரியான ஜோதிடப் பார்வை அல்ல.

கருத்துகள்
கருத்துரையிடுக