ரிஷப ராசி/லக்னத்தில்  பிறந்தவர்கள் என்ன தொழில் செய்தால் சிறப்பாக இருக்கும் என்பதனை பார்ப்போம்.

ரிஷப ராசி :
       ரிஷப ராசியில் பிறந்தவர்கள் சுக்ரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். சுக போக வாழ்க்கை வாழக்கூடியவர்கள். இங்கு சந்திரன் உச்சம் அடைகிறார்.

இவர்களுக்கு பொதுவாகவே வண்டி வாகனம் மீது ஆர்வம் இருக்கும். சுக்ரன் பிறப்பு ஜாதகத்தில் நன்றாக இருக்கும் பட்சத்தில் பல வாகனங்களுக்கு சொந்த காரர்களாக திகழ்வார்கள். சுக்ரன் வலுவிழந்து இருந்தால் ஓட்டுநராக பணி செய்வார்கள். வீடு கட்டிடம் சார்ந்த தொழில் ஒத்து வரும்.

2க்குடையவனாக புதன் வருவதால் ஆசிரியர், கணக்கு வேலைகள் ஒத்து வரும். (சுக்ரன் புதன் சேர்க்கை இருந்து குரு பார்வை இருந்தால் transport துறையில் accountant ஆக சிறந்து விளங்குவார்கள்)

மேலும் கவிதை எழுதுதல், கலை, இசை, நாட்டியம், நடிப்பு, fancy store, விவசாயம் சம்பத்தப்பட்ட தொழில்கள் அமையும்.

10க்குடையவனாக சனி வருவதால் இரும்பு, எண்ணெய், பொறியியல் சம்பத்தப்பட்ட வேலைகள் அமைத்து கொள்ளலாம்.

சுக்ரனுக்கு அதி நட்பு கிரகமான சனி 10க்குடையவனாக வருகிறார். 10க்குடையவன் சிறப்பாக இருக்கும் பட்சத்தில் cinema துறையில் சிறந்து விளங்குவார்கள்.

மேலும் வங்கித்துறை, அழகு சாதன பொருட்கள், துணிக்கடை, பெண்களுக்கு தேவையான பொருட்கள் விற்பனை செய்தல், வாசனை திரவியங்கள் திருமண தகவல் மையம் விவசாயம் போன்ற தொழில்களும் சிறப்பாக இருக்கும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் பொருளாதாரம் முன்னேற்றம் எனும் பலனை தந்தது என்பது

ராஜயோகாதிபதிகளும் அவருடைய தசைகளும் விளக்கம்

எந்த லக்ன/ராசியினருக்கு, படித்த படிப்புக்கான, வேலை கிடைக்கும். (அல்லது) எதை படிக்க வேண்டும்.