ஜோதிடத்தில் *முக்குணவேளை* என்ற ஒரு விசயம் இருக்கிறது. இவை 1.30 மணி நேரத்திற்கு ஒரு வேளை என இருக்கும். *தாமஸம்_சாத்வீகம்_ராஜஸம்* என மூன்று குணங்களையே முக்குணவேளை என்கிறோம். நீங்கள் பிறந்த கிழமையும் நேரத்தையும் கொண்டு அறிந்து கொள்ளலாம்.இவை ஒவ்வொரு பஞ்சாங்களிலும் கொடுக்கப்பட்டிருக்கிறது. உங்களுக்கான குணவேளை அறிந்து அவற்றிகான பலனை தெரிந்து கொள்ளுங்கள்.
இதில் *ஞாயிறு,புதன்,சனி* போன்ற நாட்கள் தாமஸ நாட்கள் என்றும், *திங்கள்,வியாழன்* சாத்வீக நாட்கள் என்றும், *செவ்வாய், வெள்ளி* ராஜஸ நாட்கள் என்பதும் சான்றோர்கள் வாக்கு.
*தாமஸம்*
இவர்கள் தூக்கத்தில் விருப்பம் உள்ளவராகவும், கல்வி அறிவு குறைந்தவராகவும், சுறுசுறுப்பு குறைந்தவராகவும், போதைக்கு அடிமையாக கூடியவராகவும் இருப்பார்கள். நட்பு என்றால் உயிரை கொடுக்க கூட தயங்க மாட்டார்கள்.விட்டுக்கொடுப்பதில் இவருக்கு நிகர் இவர்களே.
(இதில் நல்லவற்றை அதிகரிக்க செய்வதும்,தீயவற்றை நீக்குவதும் வாழ்விற்கு வளம் சேர்க்கும்)
*சாத்வீகம்*
இவர்கள் வேகம், விவேகம் உள்ளவர்கள்,நிதனாமான அழகும் அறிவும் உடைவர்கள். பெற வேண்டிய சுகத்தை அமைதி மூலமே பெற்று அனுபவிப்பார்கள். குருவிடமும் பெரியோர்களிடமும் பக்தியும் மரியாதையும் உடையவர்.
(இதில் நல்லவற்றைஅதிகரிக்க செய்வதும்,தீயவற்றை நீக்குவதும் வாழ்விற்கு வளம் சேர்க்கும்)
*ராஜஸம்*
நல்ல பேச்சும் கல்வியறிவு உடையவர். தான தர்மங்கள் செய்வதிலும் அதிகாரம் செய்வதும் நாட்டம் உள்ளவர்கள். அடக்கி ஆளக்கூடியவர்கள். தீமை செய்ய பயப்படுபவர்கள். இன்பம் சுகம் போன்றவற்றில் ஆர்வம் அதிகம் உள்ளவர்.
(இதில் நல்லவற்றை அதிகரிக்க செய்வதும்,தீயவற்றை நீக்குவதும் வாழ்விற்கு வளம் சேர்க்கும்)
கருத்துகள்
கருத்துரையிடுக