கெர்போட்ட_நிவர்த்தி" என்று ஒரு குறிப்பு . அப்படி என்றால் என்ன?  ஏதேனும் விசேட நாளா? சில நாட்காட்டியில் தேதி கிழிக்கும் போது *கெர்போட்ட ஆரம்பம்* என்று இருக்கும்

இது எதும் விசேட தினமோ அல்லது மார்கழி மாத கோவில் திருநாளோ அல்ல

உண்மையில் தமிழர்கள் அடுத்த வருட மழைக்கணிப்பு முறை

அதாவது "கரு ஓட்டம்" என்பதே கர்ப்ப ஓட்டம் என்று மாறி  கர்ப்போட்டம் என்றாகி இன்று காலண்டர்களில் கெர்ப்போட்டம் என்று காண்கிறது

நம்முடைய தமிழகத்தில் சூரியனின் சுழற்சியை மையமாக கொண்ட சூரியவழி மாதங்கள் பின்பற்ற படுகிறது

இது தவிர வானியல் நட்சத்திரங்களை இருபத்தேழு மண்டலங்களாகவும் பன்னிரு ராசி மண்டலங்களாகவும் பிரித்துள்ளனர்

அவ்வகையில் தனூர் மாதம் எனப்படும் மார்கழியில்

சூரியன்  தனூர் ராசி மண்டலத்தை கடக்கும் போது பூராட நட்சித்திரத்தை கடக்க பதினான்கு நாட்களை எடுத்து கொள்கிறது

இந்நாட்களில் கருமேகங்கள் தெற்கு நோக்கி நகருவதை கண்டுகொள்ளலாம்

இந்த பதினான்கு நாட்களும் கர்ப்போட்ட நாட்கள் ஆகும்

அதாவது

மழை கருக்கொள்ளும் நாள் அல்லது மேகம் சூலாகும் நாள்

இதனை பெண்ணின் பத்துமாத கர்ப்பகாலத்துடன் ஒப்பிடுங்கள் மார்கழியில் கர்ப்பம் தரிக்கும் பெண் ஒருவள்்ஒன்பது மாதம் கழித்து  புரட்டாசிக்கு பின் பிள்ளை பெறுவாள்

அவ்வகையில் இந்த கர்போட்ட நாட்களில்  மழை முறையாக சூல் கொண்டால்

ஒன்பது மாதம் கழித்து அடுத்த ஆண்டில் ஐப்பசி கார்த்திகையில் மழைபொழிவு அளவும் முறையாக இருக்கும்

இந்த கர்போட்ட நாட்கள் தோராயமாக டிசம்பர் 28 முதல் ஐனவரி 11ஆந் தேதி வரை அமைகிறது

ஒரு எளிய விவசாயிக்கு தனூர் மாதம் பூராடம் நட்சத்திரம்லாம் தெரியாது இல்லையா??

எனவே

மார்கழி மாதம் அமவாசையில் இருந்து அடுத்து வரும் பதினான்கு நாட்கள் "கர்போட்ட நாட்கள்" .

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் பொருளாதாரம் முன்னேற்றம் எனும் பலனை தந்தது என்பது

ராஜயோகாதிபதிகளும் அவருடைய தசைகளும் விளக்கம்

எந்த லக்ன/ராசியினருக்கு, படித்த படிப்புக்கான, வேலை கிடைக்கும். (அல்லது) எதை படிக்க வேண்டும்.