சூரிய, சந்திரர்களுக்கு அட்டமாதிபத்திய தோசம் கிடையாது ஏன்?எதற்கு?எப்படி??

அட்டம ஸ்தானம் என்பது லக்னத்திலிருந்து அல்லது ராசியிலிருந்து எண்ண வரும் எட்டாவது ராசியே அட்டம ஸ்தானமாகும். அதன் அதிபதியே அட்டமாதிபதி ஆவார்.

உதாரணமாக ஒருவர் விருச்சிகம் லக்னம் என்றால் விருச்சிகத்தை முதலாவதாக கொண்டு எண்ண வருவது மிதுனம் அட்டம ஸ்தானம் ஆகும். புதன் விருச்சிகத்திற்கு அட்டமாதிபதியாக வருவார்

சனி,குரு,சந்திரன் ,குரு,ராகு, கேது போன்ற கிரகங்கள் எட்டில் வரும்போது அஷ்டம சனி,அஷ்டம குரு,சந்திராஷ்டமம் என்ற பெயரில் மனசு ,உடல் கடுமையாக பாதிப்பு அடைகிறது. இந்த அட்டமம் என்னும் எட்டாம் இடத்தில் வரும் கிரகங்கள் மனச்சஞ்சலங்கள், அவமானங்கள், கெட்ட பெயர்,சிறை ,வம்பு
வழக்குகள், கடன்,தொழில் நஷ்டம் ,தெண்டச்செலவுகள், விபத்து, மேலிருந்து கீழே விழுதல், அலைக்கழிப்புகள் போன்ற தீய பலன்களை தந்து அட்டம ஸ்தான பலன்களை நமக்கு உணர்த்துகிறார்கள்.

இந்த நிலையில்  லக்னத்துக்கு அட்டமாதிபத்தியம் பெறும் கிரகத்தின் தசை அல்லது புக்தி வரும்போதும் மேலே சொன்ன பலன்கள்  கொஞ்சம் கூட குறைவில்லாமல் நடக்கிறதை நாம் அனுபவத்தில் பார்க்கிறோம்.
இதில் அட்டமாதிபதியே லக்னாதிபதியாக வரும் போது, அட்டமாதிபதியே பாக்கியாதிபதியாக வரும் போது ,அட்டமாதிபதியே பஞ்சமாதிபதியாக வரும் போது அட்டமாதிபத்திய தோசத்தை குறைத்து கொள்கிறார்கள். அட்டமாதிபத்திய தோசம் பெறுமளவில் குறைகிறது.

ஆனால் அதே நேரத்தில் ரிஷப,கடக,கன்னி, விருச்சிக  ,மீன லக்னங்களுக்கு அட்டமாதிபதி தசையில் கடுமையான பிரச்னைகளை தருகிறார்கள். அதுவும் கடக லக்னத்திற்கு எட்டில் இருக்கும் சனி தசையில் தொழில் இல்லாமல் செய்து அல்லது தொழிலை கெடுத்து, தொழிலில் நஷ்டத்தை ஏற்படுத்தி தொழிலுக்கு மூடுவிழா நடத்தி கையில் காசு இல்லாமல் செய்வார்.

அதேபோல் எட்டில் இருக்கும் சனி குடும்பத்தை பிரிப்பார்.எட்டில் இருக்கும் சனி விபத்தில் சிக்க வைத்து காலை நொண்டி ஆக்குவார். குழந்தைகள் இல்லாத நிலை, அவர்களை பிரியும் நிலை ,விபத்து, சிறை போன்ற பலன்களை எட்டாம் இடத்து சனி தருவார்..அதேபோல் தான் செவ்வாயும்.

ஆனால் சூரிய ,சந்திரர்கள் அட்டாமாதிபத்திய தோசம் பெறும் தனுசு, மகர லக்னங்களுக்கு
அஷ்டமாதிபத்திய தோசத்தை குறைத்து கொண்டு சில நல்ல பலன்களையும் தருகிறார்கள். சனி,செவ்வாய் அஷ்டமாதிபதி யாக இருக்கும் போது தரும் விபத்து,  சிறை,அறுவை சிகிச்சை, உயிரிழப்பு, எலும்பு முறிவு  போன்ற கொடுமையான பலன்களை தருவதில்லை.

அதற்கு என்ன காரணம் என்று பார்த்தோமானால் லக்னம் சூரியனை அடிப்படையாக கொண்டு கணிக்க படுகிறது. சூரியன் லக்னத்திற்கு காரகத்துவம் வகிக்கிறார். சூரியன் ஆத்மகாரகன்.சூரியன் தந்தைக்கு காரகன்.(தந்தைக்கு பொறுப்பு)
எனவே எந்த தந்தையும் மகனுடைய உயிரை எடுக்க மாட்டார். உயிர் கொடுத்த தந்தை உயிரை எடுக்க மாட்டார்.

அதேபோல் ராசி சந்திரனை அடிப்படையாக கொண்டு கணிக்கப்படுகிறது.சந்திரன் தாய்க்கு காரகன்.தாய்க்கு பொறுப்பு. சரீர காரகனான இந்த சந்திரன் உடலை சிதைக்க மாட்டார்.இந்த விபத்து, உயிரை எடுப்பது போன்ற காரியங்களை அஷ்டமாதிபத்தியம் பெறும் சந்திரன் தருவதில்லை. அவர் தாய் என்பதால் ஒரு நல்ல தாய் குழந்தையின் உயிரை எடுக்க மாட்டார் என்பதால் அவர் அட்டமாதிபதியாக வந்தாலும் கொல்ல மாட்டார்.மேலும் சூரிய, சந்திரர்களுக்கு ஒரே ஒரு ஆதிபத்தியம் மட்டுமே உள்ளது. இதுவும் ஒரு காரணமாகும்.

எனவே தாயும், தகப்பனுமான சூரிய சந்திரர்கள் தன்னுடைய குழந்தைகளின் உயிரை எடுக்க மாட்டார்கள்.எனவே சூரிய, சந்திரர்களுக்கு அஷ்டமாதிபத்திய தோசம் கிடையாது. சனி,செவ்வாய் போன்று சிறை,அல்லது விபத்து ,உயிரை எடுப்பது போன்ற கொடுமையான  பலன்களை செய்ய மாட்டார்கள்.

ஆனால் சில சமயங்களில் மோசமான தாய் மோசமான தகப்பன் என்று அமைந்து விடுவதும் உண்டு இல்லையா??? அது ஆயிரத்தில் ஒன்று லட்சத்தில் ஒன்று என்று இருக்கும் என்ற அமைப்பில் சூரிய சந்திரர்கள் என்னும் ஒளி கிரகங்கள் ராகு-கேது சனி செவ்வாய் போன்ற கடுமையான பாவிகள் பாதிக்கப்படும் போது, அவர்களாலும் சில சமயங்களில் தொல்லைகள் இருக்கவே செய்கிறது.

 லக்னாதிபதி எந்த நிலையிலும் கெடுக்க மாட்டார் என்ற விதி இருக்கும்போதே அதே லக்னாதிபதி சிலருக்கு கடுமையான தீமைகளை தருவதையும் நாம் பார்க்கிறோம்.. உதாரணமாக ஒருவர் தனுசு லக்னம் என்று வைத்துக்கொள்வோம் அவருக்கு குரு தசை நடப்பதாக வைத்துக் கொள்வோம் அந்த குரு பகவான் பகை என்ற நிலையை அடைந்து சனி செவ்வாய் ராகு போன்ற கிரக சேர்க்கை சேர்க்கைகளை அடைந்து கர்ம வினையின் பயனாக அவர் அட்டமாதிபதி என்று சொல்லக்கூடிய சந்திரனின் சாரத்தை வாங்கி கன்னியில் அமர்ந்துவிட்டால்
அவருடைய தசையில் மோசமான தீமைகளை தருவதையும் நாம் பார்க்கிறோம்...

குரு தசையில் மனைவியைப் பிரிந்து, குழந்தைகளை பிரிந்து, தனிமரமாக சொல்லொணாத் துன்பத்திற்கு, சோதனைகளுக்கு அவர் ஆற்படுவதை நாம் அனுபவத்தில் பார்த்து இருக்கிறோம்.. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில நேரங்களில் சிலருக்கு மோசமான தாய் பிரயோஜனம் இல்லாத தகப்பன் அமைவதை போல
அங்கொன்றும் இங்கொன்றுமாக சில நேரங்களில் விதிவிலக்குகள் இருக்கவே செய்கிறது..

ஒருசிலருக்கு அட்டமாதிபதி என்று சொல்லக்கூடிய தனுசு லக்னத்திற்கு சந்திர தசை நடந்து அப்போது குடும்பத்தில் சிலருக்கு இரண்டு மூன்று பேருக்கு ஏழரை சனி அஷ்டமசனி போன்ற  கோட்சாரம் சரியில்லாத காலங்கள் நடக்கும்போது அவருடைய ஜாதகப்படி கண்டாதி தோஷம் ஏற்படுவதும் உண்டு.. விதிவிலக்காக அங்கொன்றும் இங்கொன்றுமாக  நடக்க கூடியது.

ஆனால் பெரும்பாலும் சூரிய சந்திரர்கள் அட்டமாதிபதியாக வரும்போது மற்ற சனி செவ்வாய் போன்ற பாவம் கிரகங்களைப் போல கொடுமையான பலன்களை செய்வது இல்லை.. எல்லாவற்றிற்கும் விதி மற்றும் விதிவிலக்குகள் கண்டிப்பாக இருந்தே தீரும்





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் பொருளாதாரம் முன்னேற்றம் எனும் பலனை தந்தது என்பது

ராஜயோகாதிபதிகளும் அவருடைய தசைகளும் விளக்கம்

எந்த லக்ன/ராசியினருக்கு, படித்த படிப்புக்கான, வேலை கிடைக்கும். (அல்லது) எதை படிக்க வேண்டும்.