ஜாதகர் என்ன கேள்வியுடன் வருவார்
================================

கோட்சார பாம்பின் வால் (கேது) எந்த கிரகம் நோக்கி நகர்கிறதோ அல்லது கோட்சார கேதுவின் திரிகோணத்தில் இருக்கும் கிரகத்தின் காரகத்துவமோ அல்லது கோட்சார மந்தனின் (சனி) திரிகோணத்தில் இருக்கும் கிரகத்தின் காரகத்துவம் அதை கூறிவிடும்.

உதாரணமாக தற்போது கேது மகரத்தில் இருக்கிறது, சனி தனுசில் இருக்கிறது. கேது இருக்கும் இடத்தின் திரிகோணங்கள் மகரம், ரிஷபம், கன்னி. கேது நோக்கி நகருவது தனுசு ராசி. அதுபோல சனி இருக்கும் இடத்திற்கு திரிகோணங்கள் தனுசு, மேசம், சிம்மம். சனி மகரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. மேற்கண்ட இடங்களில் இருக்கும் கிரகங்களை பற்றிய கேள்வியே கேட்பார் ஜாதகர். ஒன்றுக்கு மேற்பட்ட கிரகமிருப்பின், அதில் பலம் பெற்றதை கணக்கில் கொள்க.

சூரியன் - தந்தை, மகன், அரசாங்கம், ஊதியம், மருத்துவம்

சந்திரன் - தாய், பயணம், இடமாற்றம், உடல்நிலை, கண்கள், மனகுழப்பம்

செவ்வாய் - தம்பி, கணவர், அறுவைசிகிச்சை, விபத்து, நிலம், கடன்

புதன் - தாய்மாமன், நண்பர்கள், மனை, படிப்பு, தோல் வியாபாரம்

வியாழன் - முன்னேற்றம், வழிபாடு, சுபகாரியங்கள், கோயில்

சுக்கிரன் - திருமணம், வீடு, வாகனம், மனைவி

சனி - தொழில், வியாதி, மந்தநிலை, ஏமாற்றம்

கேது - தடை, தியானம், ஜோதிடக்கல்வி, வழக்கு, பிரச்சினைகள், கடன், மன அழுத்தம், தீராத வியாதி

ராகு - மரணம், பிரிவு, மனோவியாதி, மாந்திரீகம்

இதை உங்கள் ஜாதகத்தில் பொருத்தி பார்த்து, சரிபாருங்கள்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் பொருளாதாரம் முன்னேற்றம் எனும் பலனை தந்தது என்பது

ராஜயோகாதிபதிகளும் அவருடைய தசைகளும் விளக்கம்

எந்த லக்ன/ராசியினருக்கு, படித்த படிப்புக்கான, வேலை கிடைக்கும். (அல்லது) எதை படிக்க வேண்டும்.