விதுரரின் வில் ரகசியம்
======================

விதுரரின் நட்சத்திரம் ரோகிணி ஆகும். துரியோதனின் சித்தப்பாவான இவரிடம் ஒரு வில் இருந்தது. அந்த தனுசு விஷ்ணுவின் வில்லான சாரங்கம் என்ற வில்லிற்கு ஒப்பானதாகும். எவ்வளவு பெரிய பலசாலியையும் அந்த வில் வீழ்த்தும் தன்மை பெற்றது. வில்லுக்கு விதுரர் என்ற சொல்லும் ஒருகாலத்தில் இருந்தது. தூது வந்த கிருஷ்ணனை தன் இல்லத்தில் தங்க வைத்து விதுரர் உபசரித்தார். கிருஷ்ணரும் ரோகிணி என்பதை நினைவில் கொள்க. இவ்வாறு உபசரிப்பு செய்ததை அறிந்த துரியோதனன், கிருஷ்ணர் தூது வந்தபோது, அரண்மனையில் அனைவரின் முன்னும் விதுரரின் தாயை பழித்து பேசி திட்டி தீர்த்தான். அப்போது வெகுண்டெழுந்த விதுரர், கோபமாக துரியோதனனை பார்த்து நின்றார். அந்த சமயம் பார்த்து துரியோதனனிடம், கிருஷ்ணன் விதுரரின் வில் பற்றி வானளாவ புகழ்ந்து பேசி, அவரின் வில் உனக்கு சரியான தருணத்தில் உபயோகப்படும், அதனால் அவரை தகாத வார்த்தைகளால் பேசி பகைக்காதே என அறிவுரை கூறுவது போல, விதுரரின் கோபத்தை மேலும் தீமூட்டிவிட்டார். கடும்கோபத்திலிருந்த விதுரர் தன் வில்லை துரியோதனனுக்காக உபயோகிக்க போவதில்லை என தன் கையால் வில்லை முறித்து எறிந்துவிட்டு கோபமாக கிளம்பி சென்றார்.

வில் என்பது புனர்பூச வடிவமாகும். புனர்பூசம் என்பது ரோகிணியின் சேம தாரை ஆகும். எடுத்தக்காரியம் வெற்றி பெற விஷ்ணுவால் விதுரரின் பக்தி அறிந்து வரமாக கிடைத்தது அந்த வில்லாகும். சேமத்தாரை என்பது ஒருவரின் காரிய சித்திக்கு உபயோகிக்க வேண்டிய தாரை. அதுபோல புனர்பூச வடிவான அந்த வில் துரியோதனனின் பரணி நட்சத்திரத்திற்கு ஆறாவதாக வரும் எனவே அது துரியோதனனுக்கு சாதக தாரையாகும். அவனது வெற்றிக்கு உதவும். அத்தகைய தாரை வடிவம் விதுரரிடம் இருந்ததை அறிந்த கிருஷ்ணன் அதை சூழ்ச்சியால் முறிக்க வைத்து, பாண்டவர்களுக்கு உதவினார். அதுபோல துரியோதனுக்கு உதவி அதர்ம வழியில் செல்லாதவண்ணம் விதுரரை காத்தார் பரந்தாமன்.

இந்த வில் வடிவத்தை புனர்பூசம், பூரட்டாதி, விசாக நட்சத்திர நபர்கள் பயன்படுத்த ஆரோக்யம் அதிகரிக்கும்.

இந்த வில் வடிவத்தை திருவாதிரை, சுவாதி, சதயம் நட்சத்திர நபர்கள் பயன்படுத்த செல்வ வளம் அதிகரிக்கும்.

இந்த வில் வடிவத்தை பூசம், அனுசம், உத்திரட்டாதி நட்சத்திர நபர்கள் பயன்படுத்த நல்வழி கிட்டும்.

இந்த வில் வடிவத்தை ரோகிணி, திருவோணம், அஸ்தம் நட்சத்திர நபர்கள் பயன்படுத்த காரிய வெற்றி கிட்டும்.

இந்த வில் வடிவத்தை பரணி, பூரம், பூராடம் நட்சத்திர நபர்கள் பயன்படுத்த சாதக சூழல் கிட்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் பொருளாதாரம் முன்னேற்றம் எனும் பலனை தந்தது என்பது

ராஜயோகாதிபதிகளும் அவருடைய தசைகளும் விளக்கம்

எந்த லக்ன/ராசியினருக்கு, படித்த படிப்புக்கான, வேலை கிடைக்கும். (அல்லது) எதை படிக்க வேண்டும்.