வில்வ இலை தாரை ரகசியம்
============================

ஒரு நபர் தனது ஜென்ம தாரை தெய்வத்தை அணுகி தமது சேம தாரை அல்லது சாதகதாரை பொருட்களை அல்லது வஸ்துக்களை தானமாக அல்லது பூஜை கொடுக்கும் பொழுது அவரது வாழ்வில் ஆரோக்கியமும் காரிய சித்தியும் வழக்கு மற்றும் பல சிக்கல்களில் சாதகமான சூழலும் உருவாகும்.

வில்வம் என்பது கண்களைக் குறிக்கும். பூரம் என்ற நட்சத்திரத்தின் வடிவம் கண் என்றும் ஜோதிட நூல்கள் கூறுகிறது. மூன்று கண்களைக் கொண்டவர் சிவபெருமான் ஆவார் ஆகவே முக்கண்ணன் எனும் பெயர் பெற்ற சிவனுக்கு மூன்று கண்கள் வடிவமாக இருக்கும் வில்வ இலை முக்கிய பூஜை பொருளாக பயன்படுத்தப்படுகிறது.

சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை ஆகும். அந்த நட்சத்திரத்தின் சாதக தாரை பூரம் எனும் நட்சத்திரம் ஆகும். ஆகவே திருவாதிரை சுவாதி சதயம் பூசம் அனுஷம் மற்றும் உத்தரட்டாதி ஆகிய நட்சத்திரத்தில் பிறந்த நபர்கள் சிவபெருமானுக்கு வில்வ இலை சாற்றுவது மிகச் சிறந்த பரிகாரமாக அமையும்.

மேலும் வில்வ இலையை தனது பர்சில் அல்லது வாகனத்திலோ பையிலோ வேலை செய்யும் இடங்களில் பிறர் பார்க்கும்படி வைத்துக் கொண்டிருக்கும் பொழுது பலவித நன்மைகளை அடையலாம்.

வில்வ இலையை உற்று நோக்கினால் அது கண்ணை போல தெரியும். சிவபெருமானுக்கு முக்கண்ணன் என்ற பெயர் உண்டு.

வில்வித்தை உபயோகித்து வாழ்வில் வெல்லுங்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் பொருளாதாரம் முன்னேற்றம் எனும் பலனை தந்தது என்பது

ராஜயோகாதிபதிகளும் அவருடைய தசைகளும் விளக்கம்

எந்த லக்ன/ராசியினருக்கு, படித்த படிப்புக்கான, வேலை கிடைக்கும். (அல்லது) எதை படிக்க வேண்டும்.