ராகு கேது சில உண்மைகள்..
ராகு கேது இருவரும் எந்த வீட்டில் இருந்தாலும் அந்த வீட்டின் ஆதிபதிய பலனை இவர்கள் தருவார்கள், காரக பலனை அந்த வீட்டின் காரக கிரகம் தரும்..
ராகு கேது இவர்கள் இருவருக்கும் 7 ம் பார்வை உண்டு என்று பலரும், பார்வையே கிடையாது என்று பலரும் கூறுகின்றனர், ராகு கேது இருவரும் நிழல் கிரகம் இவர்களுக்கு பார்வை பலம் கிடையாது, ஆனால் இவர்களின் நிழல் பரவும் தன்மை உண்டு , ராகு அல்லது கேது அமர்ந்த வீடு மற்றும் அமர்ந்த வீட்டின் 12 ம் வீடு இவைகளில் நிழல் முழுவதும் பரவும், மற்றப்படி 7 ம் பார்வை மற்ற பார்வைகள் கிடையாது..
ராகு கேது இருவரும் நிரந்த வக்கர கதி பெற்றவர்கள்..
ராகு கேது இருவரும் பெற்ற சாரநாதனின் குணத்தை இவர்கள் கொடுக்கும் பலனில் பரதிபலிப்பார்கள்..
ராகு கேது இருவரும் அமர்ந்த வீட்டின் பலனை மட்டுமே தருவார்கள், அடுத்து 5 பாகைக்குள் சேர்ந்த கிரக பலனையும் தருவார்கள், அடுத்து இவர்கள் மேல் விழும் பார்வையால் உண்டாகும் மாற்றங்களையும் இவர்கள் தரும் பலனில் பரதிபலிப்பார்கள்..
ராகு கேது இருவரும் சுபருடன் 5 பாகைக்குள் சேர்ந்தால் அந்த சுப கிரகத்தின் ஒளியை இவர்கள் ஈர்த்து சுபத்துவம் பெற்று, இருக்கும் வீட்டில் தரும் ஆதிபதிய பலனின் பரதிபலிப்பார்கள், ஆனால் சேர்க்கை பெற்ற சுபர் தன் சுபத்தன்மையை முழுவதுமாக இழந்து, அந்த கிரகம் எந்த வீட்டின் காரகமோ எந்த வீட்டின் அதிபதியோ அதன் பலன்கள் மட்டுப்படும், அசுபர் என்றால் இதற்க்கு எதிர்மறை பலன்..
ராகு கேது இவர்கள் அமர்ந்த பாவத்தில் இருந்து கோணத்தில் உள்ள வீடுகளில் தாக்கத்தை ஏற்ப்படுத்துவார்கள்..
ராகுவுக்கு, சுக்கிரன், புதன், சனி இவர்கள் மிக நெருங்கிய நண்பர்கள் ஆகவே இவர்கள் வீட்டில் அமரும் போது ராகுவின் ஆற்றால் பல மடங்கு அதிகரிக்கும்..
கேதுவுக்கு, குரு, செவ்வாய், புதன் மிக நெருங்கிய நண்பர்கள் ஆகவே இவர்கள் வீட்டில் உள்ள கேது பல மடங்கு ஆற்றல் பெற்று இருப்பார்..
ராகு கேது இருவரும் சனிக்கு கட்டுபட்டவர்கள்..
ராகு அமர்ந்த வீடு, இந்த ஜென்மத்தில் ஜாதகர் செய்ய(எதிர்கொள்ள) வேண்டிய முயற்சி அதில் சமநிலை பெருவதை குறிக்கும்..
கேது அமர்ந்த வீடு, முன் ஜென்மத்தில் ஜாதகர் மிச்சம் வைத்த கர்மா அதை சார்ந்த ஆராய்ச்சி செய்ய வேண்டியதை குறிக்கும்..
ராகு கேது இவர்கள் வேறு கிரகத்துடன் 5 பாகைக்குள் சேர்க்கை பெரும்போது அந்த கிரகம் இவர்கள் அமர்ந்த பாவத்திற்க்கு தரவேண்டிய பலனை ராகு கேது தருவார்கள், ஆனால் அந்த கிரகம் எந்த வீட்டின் ஆதிபதியம் வகிக்கிறதோ அதன் பலனை இவர்கள் சேர்க்கையினால் ஏற்பட்ட மாற்றத்தின் விளைவை பொறுத்து அந்த கிரகமே தரும், இவர்கள் குறுக்கிட மாட்டார்கள்..
ராகு கேதுவோடு சுபர் சேர்ந்தால் இவர்களின் அசுபத்தன்மை கட்டுப்படும், அதே அசுபர் சேர்ந்தால் இவர்களின் வீரியம் அதிகரிக்கும்..
ராகுவின் உச்ச வீடு ரிஷபம், நீச்ச வீடு விருச்சிகம், கேதுவின் உச்ச வீடு விருச்சிகம், நீச்ச வீடு ரிஷபம், இருவரும் உச்சம் பெறுவது தங்கள் மித்ரன் வீட்டில், மேலும் பொருள் அணியை சேர்ந்த ராகு பொருள் அணி சுக்கிரன் வீட்டில் உச்சம், அதே போல் அருள் அணி சேர்ந்த கேது அருள் அணி செவ்வாய் வீட்டில் உச்சம், இருவரும் உச்சம் நீச்சம் பெறுவது 20 பாகையில், இருவருக்கும் புதன் வீடு சமம் ஆகும்..
ராகு கன்னியில் மூல திரிக்கோண பலம் பெறுவார், கேது மீனத்தில் மூல திரிக்கோண பலம் பெறுவார், ராகு அஸ்தம் நட்சத்திரத்திலும், கேது பூரட்டாதி நட்சத்திரத்திலும் மூல திரிக்கோண பலம் பெறுவார்கள்..

கருத்துகள்
கருத்துரையிடுக