லக்னத்திற்கு 12 ஆமிடத்திற்கு அயனபோக ,சயன சுக ஸ்தானம் என்று பெயர். இந்த இடத்தில் இயற்கை பாவக்கிரகங்கள் இருக்கக்கூடாது. 12 ஆம் இடத்தின் முதன்மை சுபக்காரகத்துவமான தாம்பத்திய சுகம் கெடும். இரண்டாவது சுபக்காரகத்துவமான தூக்கம் கெடும். பொதுவாக 12 ல் உள்ள பாவிகள் உயிர்காரகத்துவத்தை கெடுப்பார்கள்.
12 ல் உள்ள பாவக்கிரகத்தால் படுத்தால் தூக்கம் வராது. அதிலும் 12 ல் உள்ள பாவக்கிரக தசா புக்திகளில் தூங்க முடியாத சூழ்நிலை உண்டாகும்.
சிறைக்கு செல்லுதல், மருத்துவமனைக்கு செல்லுதல் ,வீண் அலைச்சல், வீண் விரயம், வெளிநாடுகள்,புதிய இடங்களில் துன்பம் போன்றவையும் இவ்விடத்தின் தீயகாரகத்துவங்கள்.
இவ்விடத்தில் சுபர் இருந்தாலோ பார்த்தாலோ நல்ல தூக்கம், மெத்தை சுகம்,சுபவிரயம் போன்ற சுப காரகத்துவங்களை செய்யும்.
இறுதிகாலம் மகிழ்ச்சியாய் இருக்கும்.
இது தர்ம ஸ்தானமான ஒன்பதாமிடத்திற்கு நான்காமிடம் என்பதால் மறுபிறவி நன்றாக இருக்கும்.
லக்னத்திற்கு துனை அமைப்பாக நோய்நிவர்த்தி இவ்விடமாகும். ( ஆறிற்கு மரணம்).
தந்தையின் சொத்துசேர்க்கையை குறிப்பிடும்.
வெளிநாட்டு யோகம் ,அந்நிய இடங்களில் லாபம் கிடைக்கும். இது போன்ற இன்னும் பல நல்ல சுபகாரகத்துவங்களை 12 ஆம் இடம் குறிப்பிடும்.

கருத்துகள்
கருத்துரையிடுக