மனையின் ஜீவன்
( உயிர்) அறிவது எப்படி?
ஓர் பதிவு

மனை ஜீவன் உள்ளதா என்பதைக் காண (வாஸ்து வித்யை), முதலில் மனையின் நீளம், அகலம் ஆகியவற்றின் கூட்டுத்தொகையைக் கண்டறிய வேண்டும். அடுத்து, மனை உள்ள ஊரின் பெயர் முதல் எழுத்து வர்க்கம்  வர்க்க எண்ணை அறியவேண்டும். வர்க்கம்  வர்க்க எண் குறித்த பட்டியல் பெரிது. உதாரணத்துக்கு சில வர்க்கங்களைக் காண்போம். 

வர்க்கம்                         வர்க்க எண்

'அ’ வர்க்கம்                            1

'க’ வர்க்கம்                             2

'ச’ வர்க்கம்                              3

'ட’ வர்க்கம்                             4

'த’ வர்க்கம்                             5

'ப’ வர்க்கம்                             6

'ய’ வர்க்கம்                             7

இந்த வர்க்க எண்ணையும் மனையின் நீளஅகலத்தை கூட்டிவரும் எண்ணையும் சேர்த்துக் கூட்டி, இந்த கூட்டுத் தொகையை 4ல் பெருக்கிக் கொள்ளுங்கள். விடையாக ஓர் எண் கிடைக்கும்.

அடுத்ததாக மனைக்குச் சொந்தக்காரரின் பெயரில் உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கையைக் கணக்கிட வேண்டும். இந்த எண்ணிக்கையை மேலே விடையாகக் கிடைக்கும் எண்ணுடன் சேர்த்துக் கூட்டி, அந்த கூட்டுத்தொகையை மூன்றால் வகுக்க வேண்டும். (சிவபெருமானின் கண்கள் மூன்று என்பதால், 'சிவநேத்திரம்’ என்ற பெயரில் மூன்றால் வகுக்கப்படுகிறது).

இப்போது மீதி வரும் எண் ஒன்றானால், அந்த மனை ஜீவன் உள்ளதாகும். மீதி எண் இரண்டு எனில், அந்த மனை நடுத்தரமானது. மீதி சூன்யம் எனில், அந்த மனை பயனற்றது!

உதாரணமாக தஞ்சையில் உள்ள ராஜகோபால் என்பவருக்கு சொந்தமான ஒரு மனையின் நீளம் 60 அடி; அகலம் 42 அடி. எனில் நீள  அகலத்தின் கூட்டுத்தொகை 102 அடி. இத்துடன் ஊரின் முதல் எழுத்தின் வர்க்க எண்ணை கூட்டவேண்டும். அதன்படி தஞ்சையின் முதல் எழுத்து 'த’ வர்க்கம்; வர்க்க எண்  5. இதை, மனையின் நீளஅகல கூட்டுத்தொகையுடன் கூட்டவேண்டும். எனில், 102 5 = 107.

இதை 4ல் பெருக்க வரும் விடை  428.

இப்போது அந்த நபருடைய பெயரில் எத்தனை எழுத்துக்கள் உள்ளன என்று பாருங்கள். ரா  ஜ  கோ  பா  ல்  5 எழுத்துக்கள் உள்ளன. எனவே, 428 உடன் 5ஐ கூட்டவேண்டும். எனில், 433. இந்த கூட்டுத் தொகையையே 3ல் வகுக்க வேண்டும். மீதி எண் 1. ஆக, ராஜகோபால் எனும் இந்த நபருடைய மனை ஜீவன் உள்ளதாகும்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் பொருளாதாரம் முன்னேற்றம் எனும் பலனை தந்தது என்பது

ராஜயோகாதிபதிகளும் அவருடைய தசைகளும் விளக்கம்

எந்த லக்ன/ராசியினருக்கு, படித்த படிப்புக்கான, வேலை கிடைக்கும். (அல்லது) எதை படிக்க வேண்டும்.