பத்தாம் அதிபதி நவாம்ச சக்கரத்தில் இருக்கும் பலன்

பத்தாம் அதிபதி எந்த கிரகமாக இருந்தாலும், அந்த கிரகம் நவாம்சத்தில் எந்த வீட்டில் இருக்கிறதோ அதற்கேற்ப தொழில் வியாபாரம் அமையும். பத்தாம் அதிபதி நவாம்சத்தில் மேஷம், விருச்சிகம் ஆகிய ராசிகளில் இருந்தால் நெருப்பு சம்பந்தமான தொழில், செங்கல் சூளை, தங்கம், வெள்ளி உருக்கும் கடை, ரியல் எஸ்டேட், கட்டுமானத் தொழில், டீ, ஹோட்டல், பேக்கரி, எலக்ட்ரிக், எலக்ட்ரானிக் சாதனங்கள், சினிமாத்துறை போன்றவை அமையும். பத்தாம் அதிபதி, நவாம்சத்தில் ரிஷபம், துலாம் ஆகிய ராசிகளில் இருந்தால் பெண்கள் ஆடைகள், உள்ளாடைகள், பேன்ஸி ஸ்டோர், அணிகலன்கள், வெள்ளி வியாபாரம், பெரிய ஷோரூம், சீரியல் படம் தயாரித்தல், சூப்பர் மார்க்கெட், ஏஜென்ஸி போன்றவை அமையும்.

பத்தாம் அதிபதி, நவாம்சத்தில் மிதுனம், கன்னி ஆகிய ராசிகளில் இருந்தால் பல தொழில் செய்யும் யோகம் உண்டு. மார்க்கெட்டிங், ஏஜென்ஸி,
கமிஷன், காண்ட்ராக்ட், கம்ப்யூட்டர் உதிரிபாகங்கள், பல்பொருள் அங்காடி, நாட்டு மருந்து கடை, புத்தகம், பதிப்பகம், பிரிண்டிங் போன்றவை அமையும்.

பத்தாம் அதிபதி, நவாம்சத்தில் தனுசு, மீனம் ஆகிய ராசிகளில் இருந்தால் தங்க வியாபாரம், நவரத்தின வியாபாரம், துணிக்கடை, மளிகைக் கடை, ரெடிமேட் கடை, ஹோட்டல் போன்றவை அமையும். பத்தாம் அதிபதி, நவாம்சத்தில் மகரம், கும்பம் ஆகிய ராசிகளில் இருந்தால் எண்ணெய் சம்பந்தமான
தொழில், இரும்பு, கட்டுமான தொழில் ஹார்ட்வேர் வியாபாரம், பழைய-புதிய வாகன விற்பனைத் தொழில், ஸ்கிராப், அச்சகம், பத்திரிகை, புத்தகம் வெளியிடுதல் போன்றவை அமையும்.

 பத்தாம் அதிபதி, நவாம்சத்தில் மிதுனம், கன்னி ஆகிய ராசிகளில் இருந்தால் பல தொழில் செய்யும் யோகம் உண்டு. மார்க்கெட்டிங், ஏஜென்ஸி,
கமிஷன், காண்ட்ராக்ட், கம்ப்யூட்டர் உதிரிபாகங்கள், பல்பொருள் அங்காடி, நாட்டு மருந்து கடை, புத்தகம், பதிப்பகம், பிரிண்டிங் போன்றவை அமையும்.
பத்தாம் அதிபதி, நவாம்சத்தில் கடகத்தில் இருந்தால் தண்ணீர் சம்பந்தமான தொழில், பழக்கடை, பழமண்டி, காய், கனி, பூ வியாபாரம், பாஸ்ட்ஃபுட், பதப்படுத்தப்பட்ட பொருட்கள், கெமிக்கல், ஜாம், ஊறுகாய், அப்பளம் போன்றவை அமையும். பத்தாம் அதிபதி, நவாம்சத்தில் சிம்மத்தில் இருந்தால் ஹோட்டல், பேக்கரி, அரசாங்க காண்ட்ராக்ட், கேண்டீன், நகைக்கடை, ஜவுளிக்கடை, மருத்துவ தொழில், நெருப்பு சம்பந்தமான தொழில் அமையும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் பொருளாதாரம் முன்னேற்றம் எனும் பலனை தந்தது என்பது

ராஜயோகாதிபதிகளும் அவருடைய தசைகளும் விளக்கம்

எந்த லக்ன/ராசியினருக்கு, படித்த படிப்புக்கான, வேலை கிடைக்கும். (அல்லது) எதை படிக்க வேண்டும்.