இன்று தேசிய கீதம் vs காதல் கீதம்
இவர்களின் ஜாதகத்தில் எந்த எந்த கிரக சேர்க்கை தேசிய கீதம் எழுத தூண்டியது, மற்றும் காதல் கீதத்தை எந்த எந்த கிரக சேர்க்கை எழுத தூண்டியது  என பார்ப்போம்.

Celebrity horoscope என்றாலே

 பதிக்கப்பட்ட உதாரண ஜாதகங்கள் அனைத்திலும் ஆண் ஜாதகம்-
குரு- ஜாதகர் ஆகும்.
National Anthem- ஜன கன மன... வந்தே மாதரம்....( கவிஞர்.திரு.ரபிந்திரநாத் தாகூர்) -பாடியவருக்கு சூரியன்+புதன்+சுக்ரன் முதன்மை பெற்றுள்ளது.
புதன்+சுக்ரன் - கவிதைகள், இலக்கிய பாடல்களை குறிக்கும்.
சூரியன் - அரசாங்கம் மற்றும் வளர்ச்சி,தான் யார் என்பதை அகிலத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டும்.
பரிவர்த்தனைகள் பெற்ற கிரகம் நீண்ட புகழ்பெற்ற இடத்தில் ஒருவரை வைக்கிறது பூலோகத்தில் இவர்கள் இல்லை என்றாலும் கூட.
இவர்க்கு குரு உச்சம்.

மற்றொரு ஜாதகம் பார்க்கலாம்
திரு.கவியரசர் கண்ணதாசன் அவர்களின் ஜாதகத்திலும் இந்த பரிவர்த்தனை வேலை செய்கிறது. புதன் சுக்கிரன் சேர்க்கை, இவருக்கும் குரு ஆட்சி.

அடுத்து நம்ப என்றும் இளமை புதுமை கவிதை நடையில் பல எண்ணற்ற பாடல்கள் துள்ளுவதோ இளமை என்று இன்றும்  நம்மை என்றும் துள்ள வைத்தவர் திரு.வாலி அவர்கள். ஜாதகத்திலும் புதன் +சுக்கிரன் +சூரியன் இணைத்து இவர் கற்பனை எல்லை இல்லவே இல்லை என்பதை ஐப்பசி உள்ள சூரியன் imaginary பவர் தந்துள்ளார்.  (ஐப்பசி பிறந்தவர்கள் தன் பசிக்கு  உணவு இல்லாவிட்டாலும் கற்பனைக்கு எல்லைக்கு பஞ்சமில்லை என்கிறேன்)
இவரின் எதுகை மோனை யில் ஒன்று தான் ஈகோவையே
*"E"GO* வுக்கு *"U"GO* என்று சொன்னவர்.
 இவரது பாடல் வரிகளில் வாலிபம் கலந்திருப்பதால் வாலிப வாலி ஆனார்
இவருக்கு குரு உச்சம்.
குரு உச்சம், ஆட்சி ஆனவர்கள் புகழின் உச்சிக்கு போய்விட்டார்கள் என்பதையும் கருத்தில் கொள்க👍


Love Anthem -நம்ப லிட்டில் சூப்பர் ஸ்டார் 👌🌟 (அனைத்து மொழியிலும் காதலை வெளிப்படுத்தும் பாடல் வரிகள்...காதல் கீதம் மியூசிக் போட்டு, பாடியவரும் இவரே)
பாடியவருக்கு செ+சுக் காலப்புருஷனுக்கு 11ல்.
செ+சுக் - hormones imbalanceஐ குறிக்கும்,ஒன்றுக்கு மேற்பட்ட காதலையும் குறிக்கும்.
9இல் -புதன் + கேது-
புதன் என்றால் காதல்
கேது -என்றால் சிக்கல் அல்லது வலை
இவர் காதல் தெய்வீகமானது.
காரணம் காலப்புருஷனுக்கு 9இல்.
9 -என்றால் தெய்வீகத்தை குறிக்கும். இவரது காதல் தெய்வீகமானது.
அதான் 9(ninethara) போல.
புதன் -எழுத்து சொந்தமான கிரகம்.
இவர் எழுதிய கவிதை பாடல் வரிகள் எப்போதும் ரசிக்க வைக்கும் ரசிகர்களை மகிழ்விக்கும்.
செ- இசைக்கு மிக முக்கியமான கிரகம் செ+சுக் - இசையும் கலையும் தேர்ந்தவர்.
காதல் கீதத்தை (புதன்)எழுதி,(செ)இசை அமைத்து (சுக்ரன்) ஆயகலைகளில் அனைத்திலும் தேர்ச்சி பெற்றவர் ஆகிறார்.
எல்லாம் இருந்தும் குரு என்ற ஜாதகர் காலப்புருஷனுக்கு 8ல் அமர்ந்து இருப்பதால் ஜாதகர் அதிக சர்சையில் சிக்குகிறார்.
அதிர்ஷ்டம் இருந்தும் இல்லாமல் திளைக்கிறார்.
சரி இந்த இரண்டரை ஆண்டுக்குள் இவர்க்கு திருமண நடக்க அதிக வாய்ப்புகள் உண்டு.
காரணம் - சூரியன் மேல்  transit planet சனி பகவான் பயணம். தந்தையின் ஆசை நிறைவேறும்.
கோட்சார குரு ஜனனகால தை மாத சூரியன் மீது வரும்போது வளர்ச்சியும் திருமணத்தையும் தந்தருள்வார்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் பொருளாதாரம் முன்னேற்றம் எனும் பலனை தந்தது என்பது

ராஜயோகாதிபதிகளும் அவருடைய தசைகளும் விளக்கம்

எந்த லக்ன/ராசியினருக்கு, படித்த படிப்புக்கான, வேலை கிடைக்கும். (அல்லது) எதை படிக்க வேண்டும்.