உங்களுக்கு சில பாவக உயிர் அல்லது பொருள் காரத்துவங்கள் முற்றிலும் கிடைக்குமா? கிடைக்காதா?

உங்களுக்கு சில பாவக உயிர் அல்லது பொருள் காரத்துவங்கள் முற்றிலும் கிடைக்குமா? கிடைக்காதா?  என அறிய கூடுதல் விதிகள்,

    உதாரணமாக குழந்தை உண்டா? என அறிய வேண்டுமானால் உங்கள் ஜாதகத்தில் குருவின் நட்சத்திர சாரத்தில் கிரகம் அல்லது ஐந்தாம் அதிபதியின் நட்சத்திர சாரத்தில் ஏதெனும் ஒரு கிரகமாவது இருந்தால் குழந்தை உண்டு , ஆனால் அந்த சாரம் கொடுத்த கிரகம் ராகு கேதுவாக இல்லாமல் இருக்க வேண்டும் , அடுத்து லக்னத்திற்க்கு நீசம் மறைவு பெறாமல் இருக்கவேண்டும் ,

மற்ற முதன்மை விதிகள் இருந்தால் இந்த துனை விதிகளை பார்க்க வேண்டியதில்லை ,

மேலும் எந்த கிரகத்தின் நட்சத்திர சாரங்களில்  ஒரு கிரகமும் இல்லையோ அதன் அந்த கிரக காரத்துவ மற்றும் ஆதிபத்திய பலனை அடைய தடை இருக்கும் , உதாரணமாக கார்த்திகை , உத்ரம், உத்ராடம் என்ற சூரியனின் நட்சத்திரத்தில் எந்த கிரகமும் இல்லை எனில் சூரியனின் ஆதிபத்திய பலனும் மற்றும் சூரியன் காரத்துவமான தந்தை இல்லை அல்லது தந்தையால் எந்த அனுகூலமும் ஏற்பட போவதில்லை என எடுக்க வேண்டும் ,

பரிகாரமாக சூரியன் - கோதுமை,
சந்திரன் - அரிசி
செவ்வாய் - துவரை
புதன் - பச்சை பயிறு
குரு- கொண்டை கடலை, நிலக்கடலை
சுக்கிரன் - மொச்சை
சனி- எள்
ராகு - உளுந்து
கேது- கொள்ளு
 
  இதனை முளைகட்டி அதிகம் சாப்பிடலாம், உணவில் அதிகம் சேர்க்கலாம், இறைவனுக்கு படையல் செய்து படைத்து சாப்பிடலாம், தானமும் செய்யலாம்,  அந்த கிரக தெய்வம், அதிதேவதைகளை வணங்கலாம்.

மேலும் அந்த கிரக ரத்தின கற்கலை அணியலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் பொருளாதாரம் முன்னேற்றம் எனும் பலனை தந்தது என்பது

ராஜயோகாதிபதிகளும் அவருடைய தசைகளும் விளக்கம்

எந்த லக்ன/ராசியினருக்கு, படித்த படிப்புக்கான, வேலை கிடைக்கும். (அல்லது) எதை படிக்க வேண்டும்.