Employees or employer
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
அவர் ஓர் Employeeயாக இருக்கின்றார் என்றால் அவரின் ஜாதகத்தில் சூரியனை விட சனி பலம் பெற்றிருப்பார். அவர் ஓர் Employerஆக இருக்கின்றார் என்றால் அவரின் ஜாதகத்தில் சனியை விட சூரியன் பலம்பெற்றிருப்பார். இனி
- உத்தியோக ஸ்தானம் ஆகிய பத்தாம் வீடு எது…?
- அது எப்படிப்பட்டது அதாவது சர ஸ்திர உபய ராசியா? நிலம் நீர் நெருப்பு காற்று ராசிகளில் எது…?
- பத்தாமிடத்து அதிபர் யார்..?
- லக்கினாதிபதிக்கும் அவருக்கும் என்ன உறவு?
- பத்தாமிடத்தைத்தவிர அவர் பெறும் வேறு ஆதிபத்யங்கள் எவை?
- பத்தாம் இடத்து அதிபரின் நிலை என்ன? அதாவது ஆட்சியா உச்சமா பகையா நீச்சமா நீச்சபங்கமா உச்சபங்கமா சூரியனோடு இணைந்து அஸ்தங்கமா ராகு கேதுவோடு இணைந்து கிரகணமா?
- அவரின் மீது விழும் பார்வைகள் என்னென்ன..? பார்க்கும் கிரகங்களுக்கு அவருடனான உறவுகள் என்னென்ன..?
- அவர் சென்று அமர்ந்த வீடு(ராசி) எது?
- அவருக்கு வீடுகொடுத்த கிரகத்தின் நிலை என்ன..?
- அவர் பெற்ற நட்சத்திர சாரத்தின் அதிபர் யார்? அவருக்கும் இவருக்கும் என்ன உறவு..?
- பத்தாம் அதிபரின் தசா புக்தி காலங்கள் எப்போது வருகின்றன..?
இதையெல்லாம் பிரித்து மேய்ந்தால் தான் ஒருவரின் உத்தியோகம் என்ன என்பதையும் அந்த உத்தியோகம் எவ்வளவு காலத்துக்கு என்பதையும் தீர்மானிக்க முடியும்.
வேலை இழக்கப்படப்போகின்றது என்றால் பின்வரும் நிலமைகளில் ஏதேனும் ஒன்றோ ஒன்றுக்கு மேற்பட்டனவோ நடைபெறலாம்.
- பத்தாம் அதிபர் பலமிழத்தல் (நீச்சம், கிரகணம்)
- பத்தாம் இடத்தில் பாவக்கிரகங்களோ லக்கின பாபர்களோ பத்தாமதிபருக்கு பகைக்கிரகங்களோ அமர்தல்
- பத்தாம் இடத்தை பாவக்கிரகங்களோ லக்கின பாபர்களோ பத்தாமதிபருக்கு பகைக்கிரகங்களோ பார்த்தல்.
- பத்தாம் இடத்துக்கு ஆறு எட்டு பன்னிரெண்டாம் இடங்கள் வலுப்பெறுதல் அல்லது அந்த இடங்களின் அதிபர்கள் பத்தாமதிபரை விட வலுப்பெறுதல். இந்தக் கோணத்தில் சிந்தியுங்கள். வேலை இழக்கப்படுதல் என்பது முழுக்க முழுக்க கெட்ட விடயம் என்றும் சொல்ல முடியாது. வேலையே செய்யத் தேவையில்லாமல் மாபெரும் பணப்பரிசு ஒன்று கிடைத்தாலோ பாரிய சொத்து ஒன்று வாய்த்தாலோ நீங்கள் வேலை செய்யத் தேவையில்லை அல்லவா..? அதாவது பத்தாமிடத்துக்கு பன்னிரெண்டாம் இடமான பாக்கிய (அதிர்ஷ்ட) ஸ்தானம் வலுப்பெற்றால்..!
- பத்தாமிடத்துக்கு இரண்டாம் (லாபம்) ஐந்தாம்(தனம்) ஒன்பதாம் (சத்ரு) இடங்கள் பாதிக்கப்படுதலும் அந்தந்த அதிபர்கள் பலமிழத்தலும். இதில் முதல் இரண்டு கொம்பிநேஷன்களும் கண்டிப்பாக கெட்ட விடயம் தான். அதாவது தனஸ்தானம் பாதிக்கப்பட்டால் சேமிப்பிலுள்ள பணம் கரையும். லாபஸ்தானம் பாதிக்கப்பட்டால் கையில் பணம் மிஞ்சாது. மூன்றாவது கொம்பிநேஷனைப் பாருங்கள். உங்களின் எதிரி பாதிக்கப்பட்டாலோ அல்லது உங்களுக்கு நோய் எதுவும் ஏற்படாமலிருந்தாலோ அல்லது உங்களின் கடன்கள் சகலதும் அடைபட்டாலோ நீங்கள் வேலைசெய்யத் தேவையில்லை அல்லவா..?
பத்தாமிடம் என்பது வெறும் உத்தியோகத்தை மட்டும் குறிப்பதில்லை. இந்தப் பிறவியில் நாம் செய்ய வேண்டிய, எமக்கு விதிக்கப்பட்ட கர்மாவையும் தான் குறிக்கின்றது. அதுதான் அதன் பெயர "கர்மஸ்தானம்".
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக