ஷட்பஞ்சசிகா ஸ்லோகம்-3 சுபர் மற்றும் பாவர்
ஷட்பஞ்சசிகா ஸ்லோகம்-3
பாவ அதிபதிகளாலும் சுபர்களாலும் பார்க்கப்படும் மற்றும் அவர்கள் இருக்கும் பாவங்கள் விருத்தி-வளம்-பாக்கியம்-பெருக்கம் அடையும்.
அசுபர்கள் அவ்வாறு பார்த்தாலும் அல்லது இருந்தாலும் அந்த பாவகத்துக்கு தீங்கு விளைவிக்கின்றன.
இந்த விதி ப்ரச்னத்துக்கும் பிறப்பு ஜாதகத்துக்கும் பொருந்தும்.
ஷட்பஞ்சசிகா ஸ்லோகம் 3ன் விளக்கம்.
வராக மிகிரர் தனது பிருஹத் ஜாதகத்தில்
ஒரு பாவமானது அதில் உள்ள கோள்களுக்கு நட்பு வீடாகவோ ஆட்சி வீடாகவோ அல்லது உச்ச வீடாகவோ இருக்கும் பட்சத்தில் அந்த பாவம் விருத்தி அடைகிறது.
அதேபோல் பகைவீடாகவோ பகைக்கோளாக அல்லதோ நட்பு இல்லாதவனின் வீடாக இருக்கும் பட்சத்தில் அந்த பாவத்துக்கு நாசமோ விருத்தியோ உண்டாகாமல் நடுநிலை பலன் ஏற்படும் என்கிறார்.
கல்யாணவர்மர் தனது சாராவளியில் கூறுவது.
ராசியில் ஆட்சி பெறுங்கோள் அல்லது அதன் நட்புக் கோள்கள் பார்த்தாலும் நின்றாலும ஒரு ராசி/பாவகம் வலிமை பெறுகிறது.
இதேபோல் சுபர்களான புதன் மற்றும் குரு இருந்தாலும் பார்த்தாலும் மேற்படி பலனேயாகும்.
ஆனால் மற்ற கோள்களுக்கு மேற்படி பலன் கிடையாது.
இங்குதான் ஒரு கேள்வி எழுகிறது.
எவை சுபக் கோள்கள்? எவை அசுபக் கோள்கள்?
மேற்படி ஆசிரியர்கள் கூறும் சுப/அசுபக் கோள்கள் என்பவை இயற்கை/சுபரா? அல்லது லக்ன சுபர்/அசுபரா?
பட்டோத்பலர் இயற்கை சுபர் பாபரையே கருத்தில் கொள்கிறார்.
சுபர்கள் பாவங்களை வலிமையடைய செய்கின்றனர்
பாபர்கள் பாவங்களை நசிய செய்கின்றனர்
சுபர்கள் 6ல் இருந்து எதிரிகளை அழிக்கின்றனர்.
ஆனால் 8 மற்றும் 12ம் பாவங்களில் எவரும் சுபர் அல்ல என லகு ஜாதகத்தில் சொல்லுகிறார்.
மேற்கண்ட கருத்துக்களை விரிவாக பார்ப்போம்.
விதி-1: எந்தவொரு பாவகத்துக்கும்/வீட்டுக்கும் அதன் அதிபதி சுபரே.
அவர் இயற்கை சுபராக இருந்தாலும் இயற்கை அசுபராக இருந்தாலும் இந்த விதி மாறாது.
விதி-2: ஒரு பாவகத்தை சுபர்கள் பார்த்தாலும் இருந்தாலும் கூட அந்த பாவகத்துக்கு சுபர்கள் நல்லது செய்கின்றன.
எந்தவொரு பாவகமும் நன்றாக இருக்க விதி-1ம் விதி-2ம் ஒரே மாதிரியாகவே சொல்கின்றன.
மேற்கண்ட விதிகளின்படி அசுபர்களும் சுபர்களாக -லக்ன சுபர்களாக மாறி பாவகத்தை வலிமை படுத்துகின்றனர்.
ஆதலால் லக்ன சுபர்களும் லக்ன அசுபர்களுமே பலன்களை நிர்ணயிக்கின்றனர்.
குரு ஓர் இயற்கை சுபராயினும் மகரராசிக்கு 3-12 ம் வீடுகளுக்கு அதிபதியாகி மகரத்தில் நீச்சம் அடைகிறார்.
அதனால் மகரத்துக்கு குரு இயற்கை சுபராகாமல் லக்ன அசுபராகி விடுகிறார்.
இயற்கை அசுபரான செவ்வாய் சிம்ம லக்கினத்துக்கு 4-9க்கு உடையவராகி யோககாரகராகவும் லக்ன சுபராகவும் மாறி விடுகிறார்.சிம்மத்தில் இருக்கும் செவ்வாய் லக்ன சுபராக செயல்படுகிறார்.அவர் அங்கு அசுபராக இல்லாமல் பலம் அடைகிறார்
முடிவாக இங்கு பாபர்கள் என்று கூறப்படுவது லக்ன பாபர்களையே தவிர இயற்கை அசுபர்களை சொல்லவில்லை.
இங்கு அடுத்த கேள்வி எழுகிறது.
6-8-12ம் வீடுகளில் அதன் அதிபதிகள் நின்றிருக்க அந்த பாவபலன்களை அவர்கள் அதிகப்/தீவிரப் படுத்துவார்களா? அல்லது அவர்களது தீய விளைவுகளை குறைத்துக் கொள்வார்களா?
மேலே நாம் விவாதித்த கருத்துக்களின் அடிப்படையில்
இந்த(6-8-12) பாவங்களின் அதிபதிகள் தாங்கள் பெற்றாட்சி வலிமை காரணமாக சுபர்களாகி(Functional) அவர்கள் 6-8-12லேயே இருக்க
அந்த பாவத்தின் தீய விளைவுகளை குறைக்கவே செய்யும்.
அந்த பாவங்களின் நல்ல விளைவுகளை எடுத்து செய்வர்.
உதாரணமாக 6ம் வீட்டின் காரகங்களில் கடன் நோய் தாய்வழி மாமன் வேலைக்காரர்கள் உணவு போன்றவற்றில்
கடனும் நோயும் குறையும்.
மற்றவை வளர்ச்சி அடையும்
மாறாக மேற்படி 6-8-12ல் லக்ன அசுபர்கள் இருக்க அப்பாவகங்களின் தீயவிளைவுகள் பெரிதாகி சுப விளைவுகள்-காரகங்களின் பலன்கள் அழிக்கப் படும்.

கருத்துகள்
கருத்துரையிடுக