சஷ்டாஷ்டக தோஷம் என்றால் (கணவன் மனைவியிடையே ஒற்றுமையின்றி அடிக்கடி சண்டை சச்சரவு ஏற்படுதல், தற்காலிகய பிரிவுகள் அவ்வப்போது ஏற்படுதல்)

 சஷ்டாஷ்டக தோஷம் என்றால் என்ன...?


சஷ்டாஷ்டக தோஷம் என்றால் (கணவன் மனைவியிடையே ஒற்றுமையின்றி அடிக்கடி சண்டை சச்சரவு ஏற்படுதல், தற்காலிகய பிரிவுகள் அவ்வப்போது ஏற்படுதல்)



இதை மனைவியின் ராசியில் இருந்துதான் பார்க்க வேண்டும் என்பதை முதலில் தெளிவு படுத்தி கொள்ளுங்கள்.



மனைவியின் ஜனன கால ராசியிலிருந்து கணவனின் ஜனனகால ராசியானது ஆறாவது ராசியாகவும், கணவனின் ராசியிலிருந்து மனைவியின் ராசியானது எட்டாவது ராசியாகவும் அமைந்தால், அதுவே சஷ்டாஷ்டக தோஷம் எனப்படும்.


அர்த்தமாகியாதா...!!..


ஒரு வேளை அப்படி  இருந்தால் என்ன செய்வது என கேட்கும் அன்பர்களுக்கு , இதோ ஒரு எளிய பரிகாரம்.


ஆயுட்காலம் முழுவதும்  மனைவி வெள்ளிக்கிழமை தோறும் உபவாசம் இருந்து வந்தால் , இந்த தோஷத்தின் தாக்கம் பெரியதாக இருக்காது.


வெள்ளிக்கிழமை கணவன் அசைவ உணவை தவிர்க்க வேண்டும்.


மேலும்  ஷஷ்டாஷ்டக தோஷத்தில்...... அனுகூல ஷஷ்டாஷ்டகம்,

 பிரதிகூல ஷஷ்டாஷ்டகம் என்று உண்டு.



மேஷத்திற்கு கன்னியும்,

தனுசுக்கு ரிஷபமும்,

துலாத்துக்கு மீனமும்

கும்பத்துக்கு கடகமும்,

சிம்மத்துக்கு மகரமும்

மிதுனத்துக்கு விரிச்சிகமும்

அனுகூல ஷஷ்டாஷ்டகம்...!!..


எனவே இவைகள் பெரியதாக ஒன்றும் கெடுதல்கள்  தராது.




ஆனால்

 ரிஷபத்திற்கு துலாமும்,

கடக்திற்கு தனுசும்,

கன்னிக்கு கும்பமும்,

விரிச்சிகத்துக்கு மேஷமும்,

மகரத்துக்கு மிதுனமும்

மீனத்துக்கு  சிம்மமும்

ப்ரதிகூல ஷஷ்டாஷ்டகம்....


எனவே  இவைகள் கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும்.



மனைவியை தேர்ந்து  எடுக்கும் பொழுது மட்டுமல்லாமல் உங்களுடைய நண்பர் , தொழில் கூட்டாளி என அனைத்துக்கும் இந்த விதியை பயன்படுத்தி கொள்ளுங்கள்.. 




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் பொருளாதாரம் முன்னேற்றம் எனும் பலனை தந்தது என்பது

ராஜயோகாதிபதிகளும் அவருடைய தசைகளும் விளக்கம்

எந்த லக்ன/ராசியினருக்கு, படித்த படிப்புக்கான, வேலை கிடைக்கும். (அல்லது) எதை படிக்க வேண்டும்.