ஜோதிடத்தை ஏன் மனிதன் உணர வேண்டும்?..*

 ♦️♦️♦️ *ஜோதிடம் என்பது என்ன?*ஜோதிடத்தை ஏன் மனிதன் உணர வேண்டும்?..*


*வாழ்க்கைப் பாதையில், ஒரு குறிப்பிட்ட தருணத்தில், எந்தத் திசையை நோக்கிப் பயணம் செய்வது என்ற கேள்வி எழும்போது, ஒவ்வொரு மனிதனும் தனக்கு உண்டான சுய அறிவையும், அனுபவத்தையும் ஒருங்கிணைத்து, ஒரு முடிவை எடுத்துப் பயணம் செய்வது இயல்பு!..*


*இது போன்ற ஒரு முடிவினை எடுப்பதற்கு முன், தான் எடுக்கின்ற முடிவின் சாதக, பாதக நிலைகளைப் பற்றிப் பலமுறை சிந்தித்துச் செயல்படுவது என்பது, எவ்வளவு முக்கியம்?..*


*அவ்வாறு சாதக பாதகங்களை தீர சிந்தித்து செயல்படும் போதும், சில நேரங்களில் வெற்றியும், சில நேரங்களில் தோல்வியும், மாறி மாறி ஏற்படுவதற்கான காரணம் என்னவென்று சிந்திப்பவர்கள், அதற்கான விளக்கத்தைத் தேட வேண்டிய இடம், ஜோதிடம்!..*


*முயற்சி இல்லாத போது வெற்றியும், முயற்சி செய்யும்போது தோல்வியும் பெறுவது,*


*ஒரே விதமான செயல் முறை ஒரு இடத்தில் வெற்றியையும், மறு இடத்தில் தோல்வியையும் தருவது,*


*பட்ட காலிலேயே படுவது, கெட்ட குடியே கெடுவது,*


*காரணமின்றி ஒன்றை வெறுப்பது, தவிர்க்க வேண்டியதை விட முடியாது, தவிப்பது,*


*நம்பியவர் கைவிடுவது, முன்பின் அறியாதவர் கை கொடுப்பது,*


*இவையெல்லாம் என்ன?..*


*அனைத்துமே இயற்கையின் இயல்பு என்று சொல்ல இயலுமா?..*


*விடையில்லாத இவற்றுக்கெல்லாம், விஞ்ஞானிகள் இயற்கை என்று, ஒரு சொல்லைப் பயன்படுத்தி முற்றுப்புள்ளி வைப்பது வழக்கம்!..*


*இதைத்தான், மெய்ஞானம் கர்மாவின் கைகளால் எழுதப்படும் விதி என்று, கூறுகிறது!..*


*விதியை உணர்பவர், நிலையாமை என்ற வாழ்வியல் உண்மையை, உணர்பவர்!..*


*விதியை உணர்பவர், தன் சிந்தனைக்கும், முயற்சிக்கும், செயல்களுக்கும், முடிவுகளுக்கும் இடையே உள்ள தொடர்பு, காலத்தினால் மாற்றம் பெறுவதை உணர்ந்தவர்!..*


*இதை வள்ளுவன் வாக்கில் கூறுவதானால்,*


*ஞாலம் கருதினும் கைகூடும் காலம் கருதி இடத்தாற் செயின்!..*


*மொத்தத்தில், காலம் எனும் புத்தகத்தில் கர்மா எனும் கைகள் எழுதும் கவிதைகள் தான், விதி என்பது!..*


*அந்த காலம் எனும் புத்தகத்தின் தத்துவத்தை விளக்குவதே, ஜோதிடம்!..*


*அந்த ஜோதிட உண்மைகளை, விதியின் தன்மைகளை உணர்ந்தவர், வாழ்க்கைப் பாதையின் துவக்கமும், முடிவும், ஏற்றமும், இறக்கமும் என்னவென்று உணர்ந்தவர்!..*


*நிலையாமை மட்டுமே, உண்மை என்று புரிந்தவர்!..*


*அப்படி ஜோதிடத்தை ஒருவர் உணர்வதால்,*


*மனிதனின் அறியாமை விலகும்! ஆணவம் அழியும்! கீழ்மைக் குணங்களும் மறையும்!..*


*தேடல்கள் குறையும்! தேவைகளும் குறையும்!..*


*உள்ளொளி பெருகும்! பிரபஞ்சத் தத்துவத்தின், உண்மைகள் புரியும்!..*


*உள்ளம்தான், மானுடத் தத்துவத்தின் மகத்துவத்தை உணரும்!..*


*ஜோதிடம் என்னும் தத்துவம், மானுடம் என்னும் இனத்துக்கு, இறைவன் வழங்கிய அற்புதம்!..*  

Thanks SNR

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் பொருளாதாரம் முன்னேற்றம் எனும் பலனை தந்தது என்பது

ராஜயோகாதிபதிகளும் அவருடைய தசைகளும் விளக்கம்

எந்த லக்ன/ராசியினருக்கு, படித்த படிப்புக்கான, வேலை கிடைக்கும். (அல்லது) எதை படிக்க வேண்டும்.