பாலும் சோதிடமும்
பாலும் சோதிடமும்...
பால் ஒரு வசிய திரவம், ஏனெனில் மனதை தான் வசியம் செய்ய இயலும், புத்தியை(புதன்) வசியம் செய்ய இயலாது, மனிதன் பிறந்த பின்பு முதல் முதலில் அன்னை எனும் சந்திரன் பால் எனும் சந்திரனை கொடுத்து வசியம் செய்கிறாள் தன் பிள்ளையை, அடுத்து அந்த பிள்ளை வளர்ந்த பின்பு கல்யாணம் செய்து, முதல் இரவில் மனைவி எனும் சுக்கிரன் கணவன் எனும் செவ்வாயை அதன் அதிநட்பு கிரகம் சந்திரனின் காரகமான பாலை கொடுத்து வசியம் செய்கிறாள், இதில் சுக்கிரனுக்கு தான் சந்திரன் பகை, சந்திரன் சுக்கிரனை நடப்பாகவே எண்ணுகிறார், அடுத்து மந்திர சாதகம் செய்பவர்கள் அந்த மந்திரத்தை ஜபம் செய்து முடித்தவுடன் பாலை அருந்தியே மந்திரத்தை வசியம் செய்கிறார், அடுத்து மனிதன் இறந்து போகும் போது பிண்டம் எனும் சனி+மாந்தனுக்கு பாலை வார்க்கிறோம் இருவருக்கும், சந்திரன் பகை என்பதால் தான் அந்த பால் அந்த உடலுக்குள் செல்லவில்லை, மாறாக சந்திரனின் உடல் மீதே விழுகிறது, இவ்வாறு பால் மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரை அவனுடனே பயணிக்கிறது அவன் மனதை வசியம் செய்தபடி ......
கருத்துகள்
கருத்துரையிடுக