அங்கிசம் என்றால் என்ன ? அதன் அர்த்தம் என்ன ?

 அங்கிசம் என்றால் என்ன ? 

அதன் அர்த்தம் என்ன ? 


அங்கிசம் என்பதன் அர்த்தம் ; தோள் கொடுத்தல் , கூறு , பங்கு , வாழையடி வாழையாய் வளர வேண்டிய வம்சம் என்று அர்த்தம் கொள்ளலாம் . ஒரு நட்சத்திரத்துக்கு ஒருவர் அதிபதியாக இருக்கும் போது , இன்னொருவர் அந்த நட்சத்திரத்தை தோள்கொடுத்து தூக்கி நிறுத்த முடியும் என்பதைக் காட்டுவதே அங்கிசம் என்பதாக நினைக்கிறேன் . இப்போது குருவின் நட்சத்திரம் விசாகத்திற்கு சுக்கிரன் அங்கிசைநாதனாக வருகிறார் . குரு எனும் கிரகம் சாரம் தருவதின் மூலம் இயக்கு சக்தியாக இருக்க , சுக்கிரன் அங்கிச நாதனாகி இயங்கு சக்தியாக இருப்பார் . விசாகம் சாரம் பெறும் எந்தகிரகத்திற்கும் சாரநாதனும் , அங்கிசைநாதனும் பலம்பெற்று இருந்தால்தான் முழுமையான பலன்கள் கிட்டும் . தமிழ்மொழியில் இயற்றப்பட்ட மூத்த பழமையான ஜோதிட நூலான , " ஜாதக அலங்காரம் " என்கிற நூலில் அங்கிசப் பலனறியும் முறையினை தந்துள்ளார்கள் . நாம் முன்பு கண்ட , " தசவர்க்கமும் , அங்கிசப் பலன் அறிதலும் " என்கிற கட்டுரையில் கண்டதைப்போல , இதுவும் ஒருவழியாகும் . இதுவும் மிகவும் நுட்பமான விடயம்தான் . ஆனால் , அதிகம் பயன்படுத்தாத , விரிவுபடுத்தாத ஒரு விடயமாகவே உள்ளது . இதை " ஜோதிட ஆசான்கள் " விரிவாக ஆய்வு செய்து மக்களுக்குப் பயன்படும் விதமாக கொண்டு சேர்ப்பது நமது கடமையாகும் . 


  அங்கிசநாதன் அறிதல் . அசுவினி முதல் ரேவதி வரையிலான 27 நட்சத்திரங்களும் , ஒன்பது கிரகங்களான , சூரியன் , சந்திரன் , செவ்வாய் , புதன் , குரு , சுக்கிரன் , சனி , இராகு , கேது ஆகிய ஒன்பது கிரகங்களுக்குப் பிரித்துக் கொடுக்கப் பட்டுள்ளது . இவர்களை , " அங்கிசநாதன் " என்று அழைக்கப்படுகின்றன . ஒவ்வொரு கிரகங்களுக்கும் மூன்று நட்சத்திரங்களாக பிரித்துத் தரம்போது , அந்த ஒவ்வொரு நட்சத்திரங்களுககும் நான்கு , நான்கு பாதங்களாக , பன்னிரண்டு பாதங்களாக , பன்னிரண்டு இராசிகளுக்கும் , ( மேடம் முதல் மீனம் வரையிலான ) தரப்படும் . இப்போது ஒவ்வொருவருக்கும் ஒரு ஜென்ம நட்சத்திரம் இருக்கும் அல்லவா ? அந்த ஜென்ம நட்சத்திரம் , பன்னிரு பாகங்களில் ஒன்றில் அமையும் . அது எத்தனையாவது பாகம் என்பதைக் கண்டுபிடித்து , அந்த எண்ணிக்கையை , மேடம் முதல் எண்ணிவர , பன்னிரண்டு இராசிகளில் , ஏதாவது ஒன்றில் அமையும் . அந்த இராசியின் அதிபர் , " அங்கிசவான் " அல்லது " அங்கிசை " என்றும் கண்டுபிடித்து , அந்த எண்ணிக்கையை , மேடம் முதல் எண்ணிவர , பன்னிடண்டு இராசிகளில் , ஏதாவது ஒன்றில் அமையும் . அந்த இராசியின் அதிபர் , " அங்கிசவான் " அல்லது " அங்கிசை " என்றும் அழைக்கப்படுகிறார் . உதாரணமாக . ஒருவர் விசாகம் மூன்றாம்  பாதத்தில் பிறந்துள்ளதாக வைத்துக் கொள்வோம் . இவர் பிறந்த நட்சத்திரம் சுக்கிரனின் அங்கிசையில் வருகிறது . அதனால் , குருவின் நட்சத்திரமாகவே இருந்தாலும் , அந்த நட்சத்திரத்துக்கு தோள்கொடுத்து தூக்கி நிறுத்துபவன் சுக்கிரனாகவே இருப்பான் . அதனால்தான் குருவின் நட்சத்திரம் விசாகத்திற்கு , சுக்கிரன் அங்கிசைநாதனாக வருகிறார் . 



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் பொருளாதாரம் முன்னேற்றம் எனும் பலனை தந்தது என்பது

ராஜயோகாதிபதிகளும் அவருடைய தசைகளும் விளக்கம்

எந்த லக்ன/ராசியினருக்கு, படித்த படிப்புக்கான, வேலை கிடைக்கும். (அல்லது) எதை படிக்க வேண்டும்.