பெண்களின் 27 நட்சத்திரங்களை வைத்து அவர்களுக்கு அமையப் போகும் கணவன் எப்படியிருப்பார் என்று ஓரளவுக்கு கிட்டத்தட்ட கணிக்க முடியும்.
பெண்கள் மட்டும் படிக்கவும்...!!!!...
உங்கள் கணவர் எப்படி இருப்பார்?
சீரியஸ் ஆக படிக்காமல் சும்மா ஜாலியா படிங்க...
பெண்களின் 27 நட்சத்திரங்களை வைத்து அவர்களுக்கு அமையப் போகும் கணவன் எப்படியிருப்பார் என்று ஓரளவுக்கு கிட்டத்தட்ட கணிக்க முடியும்.
அதன் படி...
1 அசுவினி„ அப்பாவி. சுமாரான அழகுள்ளவர். மனைவி மீது உயிரையே வைத்திருப்பார். தேவைக்கேற்ப சம்பாதிப்பார்.
2 பரணி„ மனைவிக்குப் பயப்படுவார். பார்க்க சுமாராகத்தான் இருப்பார். வியாபாரம் செய்பவராக இருப்பார்.
3 கிருத்திகை„ எதிர்பார்ப்பிற்கேற்ற அழகுடன் இருப்பார். மனைவியை நன்றாக நடத்துவார்.
4 ரோகிணி„ அதிர்ஷடக்காரர். மற்றவர் பொறாமைப்படும் அளவுக்கு அன்பிலும், வசதிகளிலும் மனைவியை ராஜகுமாரியாக நடத்துவார்.
5 மிருகசீரிடம்„ கோபக்காரர். வாழ்க்கையில் கஷடப்பட்டு முன்னுக்கு வந்தவராக இருப்பார்.
6 திருவாதிரை„ முரடர். நிரந்தர வேலையில் இருக்க மாட்டார். மனைவியைக் கஷ்டப்படுத்துபவர்.
7 புனர் பூசம்„ நிறைய சம்பாதிப்பார். மனைவி மேல் உயிரையே வைத்திருப்பார். செக்ஸ் விஷயத்தில் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பார்.
8 பூசம்„ பெண்டாட்டிதாசனாக இருப்பார். கை நிறைய சம்பாதிப்பார்.
9 ஆயில்யம்„ பார்க்க சுமாராக இருப்பார்;. அமைதியான சுபாவமுடையவர்.
10 மகம்„ எந்த விஷயத்திலும் மனைவிக்கு ஒத்துப் போக மாட்டார். மனைவியின் உணர்ச்சிகளை புரிந்து கொள்ள மாட்டார்.
11 பூரம்„ உயரமானவராக, கருப்பானவராக, சுமாராக சம்பாதிப்பவராக இருப்பார். மனைவியுடன் அடிக்கடி சண்டை போடுவார்.
12 உத்திரம்„ வசதியானவராக இருப்பார். மனைவியை மிகவும் நேசிப்பார்.
13 அஸ்தம்„ எதற்கெடுத்தாலும் அதிகக் கோபம் வரும். ஆனாலும் நல்லவர். சிக்கனமானவர்.
14 சித்திரை„ குடும்பத்தின் மீது அளவு கடந்த பற்று வைத்திருப்பார். மனைவியின் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றுவார்.
15 சுவாதி„ திருமணத்திற்குப் பிறகு மனைவி வந்த யோகத்தால் எங்கேயோ போய் விடுவார். மனைவியிடம் ஆசையாக நடந்து கொள்வார்.
16 விசாகம்„ எந்த வேலை பார்த்தாலும் அதில் உயர்ந்த நிலையிலிருப்பவராக இருப்பார். சுமாரான அழகுடன் இருப்பார்.
17 அனுஷம்„ கல்யாணமாகி எத்தனை வருடங்களானாலும், மனைவியைச் சுற்றி வருவார். அழகாக இருப்பார். தேவைக்கேற்ப சம்பாதிப்பார்.
18 கேட்டை„ நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவராக இருப்பார். கல்யாணத்திற்குப் பிறகு அதிர்ஷடம் அடிக்கும். சுமாராக இருப்பார்.
19 மூலம்„ அதிர்ஷடக்காரர். பணத்திற்குக் குறைவிருக்காது. சராசரி கணவனாகக் கோபமும், அன்பும் சம அளவு கலந்தவராக இருப்பார்.
20 பூராடம்„ வசதியானவர். மனைவியை நேசிப்பவர். கேட்டதை நிறைவேற்றுவார்.
21 உத்திராடம்„ மனைவிக்குக் கட்டுப்படுபவர். நிறைய சம்பாதிப்பார்.
22 திருவோணம்„ கணவன் - மனைவிக் கிடையே பெரிய சண்டை சச்சரவுகள் இருக்காது. சந்தோஷமான மனிதர்.
23 அவிட்டம்„ அழகு, வேலை, சம்பாத்தியம், குணம் என எல்லாவற்றிலும் நம்பர் ஒன்னாக இருப்பார்.
24 சதயம்„ அலட்டல் இல்லாதவர். மனைவி பேச்சை மதிப்பவர்.
25 பூரட்டாதி„ தங்கமான குணம். சுமாரான அழகுடன் இருப்பார். எல்லா விஷயங்களிலும் சரியாக நடக்க விரும்புவார்.
26 உத்திரட்டாதி„ மற்றவர் பொறாமைப்படும் அளவுக்கு மனைவி மீது அன்பு செலுத்துவார். கண்ணுக்கு லட்சணமாக இருப்பார்.
27 ரேவதி„ மனைவியைத் தங்கத்தட்டில் வைத்துத் தாங்குவார். திருமணத்திற்குப் பிறகு அடிக்கும் அதிர்ஷடத்தால் வாழ்க்கையில் பெரிய நிலைக்கு உயர்வார்.
+++++++++++++++++++++
சரியா இருந்தா ஒரு கமெண்ட் போடுங்க...
சரியா இல்லையென்றால் மனதை தேற்றி கொள்க...
ஹீ..ஹீ..
கருத்துகள்
கருத்துரையிடுக