தீபாவளி ஸ்பெஷல் (தனதிரயோதசி)

 தீபாவளி ஸ்பெஷல்  தனதிரயோதசி

தீபாவளிக்கு முன் வரும் திரயோதசி திதி 'தந்தேரஸ்'என்று 

வடமாநிலங்களில் கொண்டாடப்படுகிறது..


தந்தேரஸ் அன்று செய்யப்படும் தானம் பலமடங்கு பலனளிக்கும் தானத்திருநாள் ..


மருந்துகளுக்கும் வைத்தியத்திற்கும் தலைவரான  தன்வந்திரி‘ பகவான். பாற்கடலைக் கடைந்த போது அமிர்த கலசத்தை  கரத்தில்  எடுத்தபடி வெளியே வந்தவர். 


வாசுகிப் பாம்பின் விஷத்தின் நெடி தங்காமல் சிலர் மயக்கம் போட அதே நேரத்தில் மஹாவிஷ்ணுவே ‘தன்வந்த்திரியாகத் தோன்றினார்.


ஆகவே தீபாவளித்திரு நாளின் முதல் நாள் தன்வந்திரி திரயோதசியாக ஆரோக்கியம் அருள பிரார்த்திக்கப்படுகிறது ..! 


தந்தேரஸ் அன்று இரவு முழுவதும் விளக்கு ஏற்றிவைப்பது , 

எமபயம் தீர்ப்பதாக ஐதீகம்..


எனவேஅந்த விளக்கு 'எமதீபம்' என்று அழைக்கப்படுகிறது....


யம  தீபம-  யமராஜன் தன் சகோதரி யமுனையின் வீட்டிற்குச் சென்று ஆசிகள் வழங்கி, பல பரிசுகள் கொடுக்க  யமுனையும் மனம் மகிழ்ந்து, சகோதரனுக்குப் பரிசுகளும் இனிப்புகளும் கொடுக்கிறாள். 


சனி பகவானும் யமனும் சகோதரர்கள். எனினும் கருத்து வேறுபாடு உள்ளவர்கள். 


இருவரும் இறைவனை வழிபட்டுத் தகுந்த பதவியினைப் பெற்று பூலோகவாசிகளுக்கு அவரவர் செய்யும் பாவ- புண்ணியங்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கிறார்கள்.


யமனும் சனியும்  தீபாவளி அன்று மட்டும்  தங்களை மகிழ்விக்கும் 

மக்களுக்கு நன்மைகள் செய்வது வழக்கம்.


மகாளய பட்ச நாட்களில் மறைந்த முன்னோர்கள், தாங்கள் வசித்த ஊருக்கு வருவதாக சாஸ்திரங்கள் சொல்கின்றன. அதனால், அவர்களுக்கு மகாளய பட்ச நாட்களிலும் மகாளய அமாவாசையிலும் தர்ப்பணம் செய்வது வழக்கத்தில் உள்ளது.


பிதுர்லோகத்திலிருந்து தங்கள் ஊருக்கு வந்தவர்கள் 

உடனே திரும்பிச் செல்வதில்லை. 


தீபாவளி சமயத்தில்தான் தங்கள் உலகத்திற்குச் 

செல்வதாகச் சொல்லப்படுகிறது. 


அதனால் வடநாட்டில் வீட்டைச் சுற்றி விளக்குகள் ஏற்றி வைப்பது வழக்கம். இந்த தன திரயோதசி நாளில் யம தீபம் என்ற விளக்கை ஏற்ற வேண்டும் என்றும் சாஸ்திரம் சொல்கிறது. 


தீபாவளிக்கு முதல் நாள் திரயோதசியன்று மாலை நேரத்தில் யமதீபம் ஏற்றுவது வழக்கம். இந்த தீபத்தினை வீட்டின் உயரமான இடத்தில் ஏற்றுவார்கள். 


இதனால் முன்னோர்கள் மட்டுமல்ல; யமனும் மகிழ்வானாம்.


யமதீபம் ஏற்றினால் விபத்துகள், எதிர் பாராத மரணம் ஆகியவை ஏற்படாமலும்; ஆரோக்கியமாக வாழவும் யமன் அருள் புரிவார் என்பது நம்பிக்கை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் பொருளாதாரம் முன்னேற்றம் எனும் பலனை தந்தது என்பது

ராஜயோகாதிபதிகளும் அவருடைய தசைகளும் விளக்கம்

எந்த லக்ன/ராசியினருக்கு, படித்த படிப்புக்கான, வேலை கிடைக்கும். (அல்லது) எதை படிக்க வேண்டும்.