*அளவுக்கு மிஞ்சினால்

♦️♦️♦️ *நுகர்ச்சி!..*


*விலங்குகளை விடக் கேவலமாக, மனிதர்கள் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு அலையும், கேவலம்!..*


*உலகின் தற்போதைய தலையாய பிரச்சினை  என்னவென்று நினைக்கிறீர்கள்?..*


*மக்கள் தொகைப் பெருக்கம்?..*


*இல்லை!..*


*Over-Population அன்று!*


*இன்று over-consumption தான் என்கிறார்கள்!..*


*அதாவது, ஒரு தேசத்தில் வெறும் 100 பேர் இருக்கலாம், இன்னொரு தேசத்தில் 10,000 பேர் இருக்கலாம்!..*


*ஆனால், 100 பேர் இருக்கும் தேசம் பேராசையுடன் பத்தாயிரம் பேர்களுக்கான resource களை படுவேகமாக நுகர்ந்து கொண்டிருக்கலாம்!..*


*இப்போது இந்த இரு நாடுகளும் கிட்டத்தட்ட ஒரே மக்கள்தொகை கொண்டவை என்று சொல்லிவிட முடியும்!..*


*Population is not exactly the issue. consumption is!..*


*அமெரிக்கர் ஒருவர் இந்தியர் ஒருவரை விட சராசரியாக 32 மடங்கு அதிகம் consume செய்வதாகச் சொல்கிறார்கள்!..*


*அதாவது, 32 பேருக்கான சாப்பாட்டை ஒருவரே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்!..*


*இந்த over consumption நம்மிடமும் தலைகாட்ட ஆரம்பித்து விட்டது!..*


*சூப்பர் மார்க்கெட் ஒன்றுக்குச் சென்று பார்த்தால் என்னென்னவோ தயாரிப்புகள் கலர் கலராக, வகை வகையாக, வெவ்வேறு சைஸுகளில் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும்!..* 


*இதை எல்லாம் கூட வாங்குவார்களா என்று யோசிப்போம். வாங்குவதால் தானே வைக்கிறார்கள்?..*


*பிரியாணி மசாலா ஓகே, தக்காளி சாதம், லெமன் சாதம், தேங்காய் சாதத்துக்குக் கூட மசாலா வந்திருக்கிறது. ஒன்றுக்கொன்று என்ன வித்தியாசம் என்று தெரியவில்லை!..*


*'பூஜா kit' விலை 180 ரூபாய்!..*


*உள்ளே ஒரு காட்டன் துணி, இரண்டு விளக்குத் திரி பாக்கெட், ஊதுபத்தி, கொஞ்சம் கற்பூரம், குட்டியூண்டு பாட்டிலில் பன்னீர், அவ்வளவு தான்

180 ரூபாய்!..*


*தேவையற்ற பொருட்களை, தயாரிப்புகளை வாங்கிக் குவிக்கும் கலாச்சாரம்!..*


*ஆணிகளை முதலில் விற்று விட்டுப் பிறகு சுத்தியலுக்கான தேவையை உருவாக்கும் யுக்தி!..*


*தேவையே இல்லாவிட்டாலும் ஒருவித 'fake demand' ஐ உருவாக்குவதிலும் கார்ப்பரேட்கள் வல்லவர்கள்!..*


*சமீபத்திய உதாரணம் vegetable wash!..*


*250-300 ரூபாய்க்கு விற்கிறார்கள். 

இதை இதற்கு முன் நாம் கேள்விப்பட்டு இருப்போமோ!..*


*பெரும்பாலும் மார்க்கெட்டில் இருந்து காய்கறிகளை வாங்கிவந்து அப்படியே தான் பிரிட்ஜில் வைத்துக்கொண்டு இருந்தோம்!..*


*எல்லா product களிலும் சகட்டு மேனிக்கு kills 99.9% germs என்று போட்டு விடுகிறார்கள்!..*


*'கொரோனா வைரஸில் இருந்து பாதுகாக்கிறது' என்று போடுகிறார்கள்!..*


*எந்த ஆராய்ச்சியின் அடிப்படையில் இந்த முடிவுக்கு வருகிறார்கள் போன்ற விவரங்கள் இல்லை!..*


*'கொரோனா வைரஸில் இருந்து பாதுகாக்க வேண்டி கடவுளை வழிபடுவதற்கு எங்கள் ஊதுபத்தி சிறந்தது ' என்று கூடிய சீக்கிரம் விளம்பரங்கள் வந்து விடும்!..*


*இந்த consumption எப்போதும் exponential ஆக இருக்கிறது!..*


*அதாவது நாம் நம் தாத்தாவை விட 8 மடங்கு அதிகம் நுகர்ந்தோம் என்றால் நம் பேரன் நம்மை விட 64 மடங்கு அதிகம் நுகர்வான்!..*


*நம் தாத்தாவுக்கு இருந்தது ஒரே ஒரு option lifebuoy சோப் என்றால் நம் பேரன் முன்பு 64 சோப்புகள் கடை விரிக்கப்படும்!..*


*எல்லா சோப்புகளும் more or less ஒன்றுதான் என்ற அறிவு நம்மிடம் இருப்பதில்லை!..*


*64 வகை சோப்புகள், சூப்பர் மார்க்கெட்டில் கால்வாசி இடத்தை அடைத்துக் கொண்டு!..*


*'selection time rule' என்ன சொல்கிறது தெரியுமா?..*


*இரண்டு பொருட்களில் இருந்து ஒன்றைத் தேர்ந்தெடுக்க நமக்கு 10 நிமிடங்கள் ஆகிறது என்றால் மூன்று பொருட்களில் இருந்து தேர்ந்தெடுக்க நமக்கு 100 நிமிடங்கள் ஆகுமாம்!..*


*நான்கு பொருட்கள் என்றால் ஆயிரம் நிமிடங்கள்!..*


*நம்முடைய நேரத்தையும் சத்தமில்லாமல் திருடி விடுகின்றன இந்த ஹைப்பர் மார்க்கெட்டுகள்!..*


*இது நல்லது தானே? நிறைய தயாரிப்புகள் என்றால் நிறைய வேலைவாய்ப்பு என்று நினைத்தால் தப்பு!..*


*அந்தக் குறிப்பிட்ட தயாரிப்பு எப்படி சந்தைக்கு வருகிறது என்ற விவரம் நம்மிடம் இல்லை!..*


*முழுக்க முழுக்க automated process சில் வந்திருக்கலாம். எந்த ஒரு தயாரிப்பும் அப்படியே வானத்தில் இருந்து குதித்து விடுவதில்லை!..*


*அது பஞ்சபூதங்களையும் கணிசமான அளவு பதம் பார்க்கிறது! அதற்கான தயாரிப்பில் எத்தனை தண்ணீர் உறிஞ்சப்பட்டது? எத்தனை ஏக்கர் மண் மலடானது? எத்தனை டன் காற்று மாசுபட்டது? அந்தத் தயாரிப்பு எத்தனை carbon footprint ஐ பூமியின் வளிமண்டலத்தில் வெளிவிட்டது? என்றெல்லாம், நமக்குத் தெளிவாகத் தெரிவதில்லை!..*


*மேலும் அந்தத் தயாரிப்பின் பின்புலத்தில் நசுக்கப்பட்டவர்கள் யார், மிரட்டப்பட்டவர்கள் யார், அதன் பின்புலத்தில் இயங்கும் socio, economic, political forcesகள் எதுவும் நமக்கு விளங்குவதில்லை!..*


*'கடை விரித்தேன் கொள்வார் இல்லை' என்ற வாசகம் இப்போது எடுபடாது!..*


*எங்கே கடைவிரித்தாலும் எங்கிருந்தோ 'கொள்வார்' கள் வந்து விடுகிறார்கள்!..*


*home-made என்று போட்டுவிடு, organic என்று எழுது, 100% hygienic என்று எழுது, good for liver என்று போடு! ஏதோ ஒரு வைட்டமின் இருக்கிறது என்று, அளந்து விடு, கவரில் பற்கள் தெரியச் சிரிக்கும் ஒரு happy family யின் படத்தைப் போட்டுவிடு!..* 


*அவ்வளவு தான் ...*


*Shit sells!..*


*ஓகே! இவை எல்லாம் நமக்கு ஏற்கனவே தெரிந்த விஷயங்கள் தானே என்றால், பொருட்களை மட்டும் அல்ல, சேவைகளையும் நாம் over consume செய்கிறோம் என்று, தோன்றுகிறது!..*


*தினமும் 3 GB டேட்டா இலவசம்! வேறு என்ன செய்ய?..*


*வீடியோக்கள் scroll செய்யச் செய்ய மேலெழும்பி வந்து கொண்டே இருக்கின்றன.  இரவு முழுவதும் பார்க்கலாம். காலையில் நம் cognitive data base அப்படியே தான் இருக்கும். எதையும் புதிதாகக் கற்றுக்கொண்டு இருக்க மாட்டோம். எதுவும் நம்மை மாற்றி இருக்காது!..*


*'Stop making stupid people famous' என்று சொல்வார்கள்!..*


*அரைவேக்காடுகளை, கத்துக்குட்டிகளை நாம் தான் பிரபலம் ஆக்குகிறோம்!..*


*மில்லியன் subscribers, லட்சக்கணக்கில் followers!..*


*வாங்குவோர் இல்லையென்றால், விற்பனை செய்வோர் இல்லை. பார்ப்போர் இல்லை என்றால், பிரபலங்கள் இல்லை!..*


*data என்றில்லை, மின்சாரம், தண்ணீர், எரிபொருள் எல்லாமே over consumption தான்!..*


*Buffet- வில் இலவசமாகக் கிடைக்கிறது என்று எல்லா அயிட்டங்களிலும் ஒன்றை எடுத்து உள்ளே தள்ளுகிறோம்!..*


*விளைவு: வயிற்று வலி, இரண்டு நாள் வயிற்று உப்புசம், உபாதை!..*


*இலவச மருத்துவம் என்பதற்காக நோயை வலிய வரவழைத்துக் கொள்ளவும் செய்வோம் நாம்!..*


*மூன்றாவதாக நாம் வாழ்க்கையையும் over consume செய்கிறோம்!..*


*'நாளை என்பது நிச்சயம் இல்லை, இன்றே அனுபவித்து விடு' என்பதெல்லாம் சரி தான்!..*


*ஆனால், வாழ்க்கையில் நம் அனுபவங்களை, சுகங்களை, சந்தோஷங்களை சரி சமமாக distribute செய்கிறோமா?..*


*40 வயதுக்குள்ளாகவே எல்லாவற்றையும் முடித்து விட்டு போதும்டா சாமி என்று exhaust ஆகி விடுகிறோம்!..*


*8 வயது சிறுவன் 28 வயது இளைஞன் போலப் பேசுகிறான்!..*


*'மஞ்சத்திலே கொஞ்சக் கொஞ்ச' என்று ஆறு வயது குழந்தை ஒன்று பாடுகிறது!..*


*'expression பத்தலை' என்று ஜட்ஜுகள் (?!) தீர்ப்பு சொல்கிறார்கள்!..*


*'ஆன்மிகம்' என்பது ஒருவருக்கு வயது முதிர்ந்தபின் தான் அர்த்தமுள்ளதாகும்!..*


*50+...அந்தந்த வயதில் அது அது இனிக்கும்!..*


*ஆன்மிகத்திற்கென்று ஓர் ஓய்வு, ஒரு விரக்தி, ஒரு களைப்பு, ஒரு சோர்வு, ஓர் அர்த்தமின்மை எல்லாம் தேவைப்படுகிறது!..*


*20 வயதில் எல்லாமே அர்த்தமுள்ளதாகத் தான் தெரியும்!..*


*ஆனால், ஒரு curiosity க்காக, அனுபவத்துக்காக 20 வயதில் ஆன்மிகத்தின் பக்கம் ஒதுங்கினால் அதில் ஆழம் இருக்காது!..*


*அது வெறும் over consumption ஆகவே இருக்கும்!..*


*சின்னக் குழந்தைகள் ஆன்மிக கதா காலட்சேபம் செய்வது பொருத்தமாகுமா?..*


*பத்து வயதில் காதலித்து, 20 இல் ஆன்மிகம் பேசி விட்டு, முப்பதில் முடித்து விட்டால் என்ன தான் செய்வது?..*


*40-இல், 50-இல், 60-இல் வாழ்க்கை என்னும் காலிபாட்டிலை வைத்துக்கொண்டு எதை அனுபவிப்பது?..*


*நாளைக்கென்று கொஞ்சம் மிச்சம் வைப்போம்!..*


*நீரை, மின்சாரத்தை, கனிம வளங்களை, பெட்ரோலை நம் பேரப்பிள்ளைகளுக்கும் விட்டு வைப்போம் என்ற எண்ணம் நமக்கு வருவதே இல்லை!..*


*அளவுக்கு மிஞ்சினால்?..*

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் பொருளாதாரம் முன்னேற்றம் எனும் பலனை தந்தது என்பது

ராஜயோகாதிபதிகளும் அவருடைய தசைகளும் விளக்கம்

எந்த லக்ன/ராசியினருக்கு, படித்த படிப்புக்கான, வேலை கிடைக்கும். (அல்லது) எதை படிக்க வேண்டும்.