புண்ணியம் மற்றும் பாவ கணக்கு கண்டறிய
ஒருவர் செய்த பூர்வ ஜென்ம பாவத்தினாலும், பெற்றோர் செய்த பாவத்தாலும் அதற்கேற்ற சூழலும், குடும்ப அமைப்பும் ஒத்த இடத்தில் அதன் பயன்களை அடையும்படியாக பிறவியெடுத்து அதற்கான பலாபலன்களை இப்பிறப்பில் சுக துக்கங்களை ஆண்டு அனுபவிக்கின்றார்கள்.
அதன்படி, முன்ஜென்ம பாதக, சாதகங்களை, சூரிய சந்திரர்களிடையே யார் அதிக பலமுடன் இருக்கின்றார்கள் அறிந்து, அப்படி பலமானவர் எந்த திரேக்காணத்தில் என்பதையும், அந்த திரேக்காண அதிபதி யாரோ அவரை அனுசரித்து ஜாதகரின் முற்பிறவி நிலையை அறியலாம்.
இது எவ்வாறெனில், திரேக்காணாதிபதி குருவாகில் ஜாதகன் தேவலோகத்தில் இருந்தார் என்றும், சந்திரன் அல்லது சுக்கிரனாகில் ஜாதகர் பித்ருலோகத்தில் இருந்திருக்கிறார் என்றும் சூரியன் அல்லது செவ்வாயாகில் ஜாதகர் பூமியிலேயே பிறந்திருந்திருக்கிறார் என்றும், சனி அல்லது புதனாகில் ஜாதகர் நரகலோகத்தில் இருந்திருக்கிறார் என்றும் அறிந்து சொல்லும்படி நாரத புராணம் அறிவுறுத்துகிறது.
அதன்படி, 5 - 7 - 9 ம் பாவகங்களில் சுபர் இருந்தால் அந்த ஜாதகர் புண்ணியம் செய்து பிறந்திருக்கிறார் என்றும், மாறாக அசுபர் நிற்க ஜாதகர் பாவம் செய்தவர்கள் .
புண்ணியம் செய்தவர்களைக் குறிக்கும் கிரகம் சுக்கிரன், புதன், குரு.
புண்ணியத்தை அதாவது விதிப்பயனைக் குறிப்பது சனிபகவான். ஆகவே, சனிபகவானோடு தொடர்புகொண்ட கிரகங்கள் ஜாதகனின் பூர்வ புண்ணிய பலத்தை குறிக்கும்.
பாவங்களைக் குறிக்கும் கிரகம் சூரியன், செவ்வாய், சந்திரன், ராகு, கேது . இங்கே கிரக சேர்க்கை என்பது சனி அல்லது குருவுக்கு மற்ற கிரகங்கள் 1 , 5 , 9. அல்லது 3 , 7 , 11 அல்லது 2 , 12. ல் இருப்பதாகும்.
சனிபகவானோடு பாவங்களைக் குறிக்கும் கிரகங்கள் மட்டும் தொடர்பு பெற்றிருந்தால் ஜாதகன் முள்பிறப்பில் கணக்கிலடங்கா பாவங்களை செய்திருப்பான். ஆகவே இப்பிறப்பில் பலவித துன்பங்களை அனுபவிப்பான். குருவோடு புண்ணியங்களைக்குறிக்கும் கிரகங்கள் தொடர்பு பெற்றிருந்தால் ஜாதகன் எல்லாவித சுகபோகங்களையும் அனுபவிப்பான் என்று அகத்தியரின் கண்மகாண்டம் கூறுகிறது
கருத்துகள்
கருத்துரையிடுக