பிருகு-நந்தி நாடி முறையில் குருவுடன் சேரும் கிரகங்கள் தரும் பலன்கள்

 பிருகு-நந்தி நாடி முறையில் குருவுடன் சேரும் கிரகங்கள் தரும் பலன்கள்::


குருவிற்கு 1, 2 ,5, 9 ஆகிய இடங்களில் கீழ்க்கண்ட கிரகங்கள் இருந்தால்,  ஜாதகரின் குணாதிசயம் மற்றும் அவரின் தோற்றம் எப்படி இருக்கும் என்று இங்கு பார்ப்போம்


குரு - ஆண்( ஜாதகர்)


குரு- சூரியன் இந்த அமைப்பு பெற்றவர்கள் இளகிய மனம் கொண்டவராகவும் சமூக தொண்டில் தன்னை ஈடுபடுத்திக் கொள்பவர் ஆகும் இருப்பர். சமுதாயத்தில் நல்ல மதிப்பு உண்டு. ஆளுமை தன்மையுடன் இருப்பார்.


குரு- சந்திரன் பருத்த சரீரம் கொண்டவராகவும் , நல்ல கற்பனை வளம் கொண்டவராகவும் ,  பயணத்தில் அதிகம் விருப்பம் உள்ளவராகவும் இருப்பார்.


குரு - செவ்வாய் 

மிகவும் தைரியமான்வர். முன்கோபி, விடாமுயற்சி கொண்டவர்.


குரு - புதன் 

நல்ல பேச்சாளர் மற்றும் எழுத்தாளர். மிகுந்த புத்திசாலித்தனத்துடனும், நகைச்சுவை உணர்வுடன் இருப்பார் .


குரு- சுக்ரன் கலைத்துறையில் ஈடுபாடு அதிகம் இருக்கும்.  வசீகர முகத்தோற்றம்  கொண்டவராக இருப்பார் . 


குரு- சனி 

கண்ணியவான். தான் செய்யும் தொழிலில் கௌரவமாக இருப்பார்.  மந்தத்தன்மை இருக்கும்.


குரு- ராகு 

அதிக பொருள் ஆசை இருக்கும். பிறந்த ஊரிலிருந்து சென்று வேறு ஊரில் வாழ்பவர். கடவுள் நம்பிக்கை அதிகம் இருக்காது.


 குரு- கேது 

ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு இருக்கும்.  பற்றற்ற மனம் . மனதில் இருப்பதை  வெளியில் செல்ல மாட்டார். பிறந்த இடத்தை விட்டு வெளி இடத்தில் குடியேறுவார்.


குறிப்பு 


மேற்கண்ட கிரக சேர்க்கையில் கிரகங்கள் வக்கிரம் பெற்றிருக்கக்கூடாது. இதேபோல் பரிவர்த்தனை பெற்றிருந்தாலும் பலன் மாறும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் பொருளாதாரம் முன்னேற்றம் எனும் பலனை தந்தது என்பது

ராஜயோகாதிபதிகளும் அவருடைய தசைகளும் விளக்கம்

எந்த லக்ன/ராசியினருக்கு, படித்த படிப்புக்கான, வேலை கிடைக்கும். (அல்லது) எதை படிக்க வேண்டும்.