வாழ்வில் அழகான நேரங்கள்

 *#அழகான_நேரங்கள்...!!*

*உங்கள் வாழ்க்கை வளமாக உங்களுக்காக சில நிமிடங்களை நீங்கள் செலவிட்டே ஆகவேண்டும்.*


*எனக்கு நேரமில்லை. என்னால் நேரத்தை ஒதுக்க முடியாது என்பதெல்லாம் வெறும் கட்டுக்கதை.*

*ஒரு நாளின் இருபத்தி நான்கு மணிநேரங்களில் நமக்கான நேரம் இல்லை என்றால் வெட்கப்பட வேண்டும்.*


*நம்மை நாம் செதுக்கி கொள்ளவும் நம்மை நாம் யாரென்று உணரவும் நமது எண்ணங்களை செயல்பாடுகளாக மாற்றவும்.*


*அந்த செயல்பாடுகளில் வெற்றி பெறவும் நமக்கான கால நேரம் மிகமிக அவசியம்.*

*ஒரு நாளின் துவக்கத்தை மிக  அழகாக மாற்றும் சக்தி உங்கள் ஒருவருக்கே உண்டு என்பதனை மறந்து விடாதீர்கள்.*

*அதிகாலையில் எழுந்து கொள்வதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.*


*இந்த வழக்கம் உங்களை மிக  உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும். இது வெற்றியாளர்களின் வாழ்க்கையில் நடந்த உண்மை.*


*அதிகாலை துயில்  எழுந்து விட்டால் மட்டும் போதாது.*


*உங்களையும் உங்கள் சிந்தனைகளையும் லட்சியங்களையும் உங்களுக்காக  உங்கள் வாழ்க்கை வளமானதாக மாற மாற்றிக்கொள்ளுங்கள்.*


*யாருக்காகவும் நீங்கள் மாறவேண்டாம்.*


*அது உங்கள் சுயத்தினை தொலைத்து விடும். உங்கள் கொள்கைகளை மாற்றுங்கள். உங்கள் நடவடிக்கைகளை மாற்றுங்கள். உங்கள் சூழ்நிலையை மாற்ற முயற்சி செய்யுங்கள்.*


*உங்கள் பழக்கவழக்கங்களை மாற்றுங்கள். உங்கள் பேச்சை குறைத்து செயலில் வேகத்தையும் உறுதியையும் கூட்டுங்கள்.*


*உங்களுக்காக நீங்கள்  ஒதுக்கிய நேரத்தில் உங்கள் வாழ்கையை மாற்றி அமைக்கும் காரணிகளை பற்றி ஒரு புத்தகத்தில் எழுதுங்கள்.*


*இன்னும் சில  வருடங்களில் நீங்கள்  என்னவாக வேண்டும் என்பதனை எழுதுங்கள்.*


*நீங்கள் அடைய வேண்டிய குறிக்கோள்களையும் சந்திக்க வேண்டிய நபர்கள் பார்க்க வேண்டிய இடங்கள் அடைய வேண்டிய  இலக்குகளையும் தினம்தோறும் எழுதுங்கள்.*


*இப்படி செய்து கொண்டு வாருங்கள் மிகமிக விரைவில் நீங்கள் அடைய வேண்டிய அனைத்தையும் அடைவீர்கள்.*


*இது முற்றிலும் உண்மை...!*


*ஆனந்தமான வாழ்வுக்கு ஆழ்மனதின் அற்புத சக்தி பற்றிய விழிப்புணர்வு அவசியம் என்பதை அனைவருக்கும் புரியவைத்து சிறப்புடன் வாழ்வோம்....*


*பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!*


*தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்…!*    


*முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!*    

                      


 *#வாழ்க_வளர்க.*

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் பொருளாதாரம் முன்னேற்றம் எனும் பலனை தந்தது என்பது

ராஜயோகாதிபதிகளும் அவருடைய தசைகளும் விளக்கம்

எந்த லக்ன/ராசியினருக்கு, படித்த படிப்புக்கான, வேலை கிடைக்கும். (அல்லது) எதை படிக்க வேண்டும்.