நீங்கள் உங்கள் காம உணர்வை எவ்வாறு கட்டுப்படுத்தி கொள்கிறீர்கள்?

 

நீங்கள் உங்கள் காம உணர்வை எவ்வாறு கட்டுப்படுத்தி கொள்கிறீர்கள்?

அப்போ நான் 8 வது படிச்சிக்கிட்டு இருந்தேன் . எங்கள் பள்ளியில் தீயணைப்பு வீரர்கள் ஒரு வகுப்பு எடுத்தனர் .

அவங்க சொன்னாங்க நெருப்பு எரிய மூன்று விஷயங்கள் தேவை .. வெப்பம், எரிபொருள் , பிராண வாயு (oxygen) அதில் ஒன்று இல்லையென்றாலும் அது எரியாது.

சரி நம்ம விஷயத்துக்கு வருவோம்..

Free time ( ஓய்வு வேளை)

நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கீர்களா ? நீங்கள் முக்கியமான அலுவலுக வேலையில் இருக்கும் போதோ அல்லது முக்கியமான தேர்வுக்கு படிக்கும் போதோ இந்த உணர்வு உங்களுக்கு ஏற்படவே ஏற்படாது ..

David னு ஒரு ராஜா இருந்தார் , அவருடைய ராணுவம் முழுவதும் யுத்தத்திற்கு சென்றிருக்க அவர் மட்டும் யுத்தத்திற்கு செல்லாமல் ஓய்வு எடுத்து கொண்டார் .. ரொம்ப bore அடிக்கிதுன்னு அவர் மாடியில உலாவ , அங்க ஒரு அம்மா குளிக்கரத பாத்துட்டார் .. சபலப்பட்ட ராஜா அவங்களோட உறவு வச்சுக்க பிள்ளையும் உருவாகுது .. இதனால ராஜா அவங்களோட புருஷனையும் போட்டுத் தள்ளிட்டு அவங்கள ஏத்துக்கிறார் ...

அதுக்கப்புறம் அவங்களுக்கு பிறக்கின்ற பிள்ளை செத்துப்போகுது , அந்த ராஜாவின் வம்சத்துல பட்டயமும் யுத்தமும் எப்பவும் இருக்கும்னு சாபமும் கிடைக்குது ..

காரணம் அவர் யுத்தத்துக்கு போகாம free ஆக இருந்தது .. இந்த உணர்வு மேலிடுவதற்கு மிக முக்கிய காரணம் free/ Leisure time ..

ஏதேனும் ஒரு வேலையில் உங்களை ஈடுப்படுத்திக்கொள்ளுங்கள் .. வெட்டியா மட்டும் இருக்காதீங்க ..

தியானம் பண்ணுங்கள் , புக் படியுங்கள் அப்படினு தேஞ்ச ரெகார்ட தேய்க்க விரும்பல ..

உங்க மனசு நீங்க எதை பண்ணீங்கனா உங்களையே மறந்து மணிக்கணக்கா ஈடுபடுமோ அதை பண்ணுங்க .... அது கிரிக்கெட் ஆக இருக்கலாம் , சமையலாக இருக்கலாம் ஏன் நல்லா சாப்பிட்டு தூங்கறதா கூட இருக்கலாம் ...

தனிமை

தனிமையில் எப்போதும் இனிமை காணாதீர்கள் .. முடிந்த வரை எப்பொழுதும் யாருடனாவது பேசிக்கொண்டோ (குறைந்த பட்சம் தொலை பேசி வாயிலாவது ) , அல்லது கூட்டமான இடத்தில் உங்களை வைத்துக்கொள்ளுங்கள் .. நீங்கள் யாருடானவது பேசும் கொண்டிருக்கும் போது இந்த உணர்வு தானாகவே சிதறும்..

மொழி தெரியாத ஆளாக இருந்தாலும் பரவா இல்ல , அவங்கள கூப்பிட்டு வெச்சி மொக்க போடுங்க ..

நான் பெங்களூரில் வேலை செய்யும் போது சில நாட்கள் அறையில் தனியாக இருந்தேன் .. அப்போதெல்லாம் நான் பெரும்பாலான நேரத்தை அலுவலக வளாகத்திலேயே கழிப்பேன் .. அங்கேயே கிரிக்கெட் விளையாடுவது , சுண்டாட்டம் விளையாடுவது போதா குறைச்சலுக்கு gym ல வேற சேந்துட்டேன் , அந்த களைப்பே அறைக்கு போன உடனே கண்ணை சொக்கக் வெச்சிடும் ..(இது போல அலுவலகத்தில் அதிக நேரமிடுவதை நான் பரிந்துரைக்கவில்லை , ஆனால் அந்த காலகட்டத்தில் எனக்கு தனிமையை தவிர்க்க வேறு வாய்ப்புகள் இல்லை )

வீட்டில் தனி அறையில் வசிப்பவராக இருந்தால் குறைந்த பட்சம் உடை மாற்றும் நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் உங்கள் அறை கதவு திறந்தே இருக்கட்டும் , நாம் மற்றவருடன் சேர்ந்து வாழ்கிறோம் என்ற எண்ணம் இது போன்ற உணர்வுகளை தள்ளி வைக்கும்..

தூண்டுதல்

ஒரு சிறிய தீப்பொறி போதும் ஒரு காட்டை அழிக்கறதுக்கு ..

நீங்கள் காலையில் பார்த்த ஐட்டம் சாங்கின் ஒரு frame போதும் , உங்களை இரவில் தூங்காவிடாமல் செய்ய , நீங்கள் social media வில் படிக்கும் ஓரு 18 + பதில் போதும் உங்களை incognito mode க்கு நகர்த்தி உங்கள் விந்தணுக்களை வெளியேற்ற , ஒரு youtube வீடியோ , ஒரு whatsapp status , ஒரு facebook post , ஒரு ஆபாச வார்த்தை , ஒரு பெண்ணின் உள்ளாடை , ஒரு துப்பட்டா விலகல் , ஒரு jockie உள்ளாடை இப்படி நீங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளாத ஏதோ ஒரு பொறி போதும் உங்களின் உள்ளத்தில் இந்த நெருப்பை பற்றவைக்க ...

முடிந்தவரை அந்த தீப்பொறி எங்கிருந்து வருகிறது என்று அறிந்து அதன் அருகில் செல்லாதீர்கள் ...

இது இயற்கை , எல்லாரும் மறைமுகமாக செய்கிறார்கள் , உடலுக்கு நல்லது இப்படி எந்த சாக்கையும் சொல்லி உங்களை சமாதான்ப்படுத்திக்கொள்ளாதீர்கள்...

கடைசியாக

நம்பிக்கை

இந்த பதில் படித்து முடிக்கும் போது நீங்கள் இதிலிருந்து முழுவதுமாக மீண்டீர்கள் என்று நம்புங்கள் ... இதுநாள் வரை உங்களுக்குள் இருந்த குற்றவுணர்வு இன்றிலிருந்து மறைகிறது .. உலகம் உங்களை இதுநாள் வரை பார்த்ததுபோல் அழகாகவும் கண்ணியமாகவும் பார்த்துக்கொண்டிருக்கிறது...

நீங்களும் இதுபோல் உணர்வில் தவிப்பவர்களுக்கு அதிலிருந்து மீண்டு வர உதவி செய்யத்தான் , இந்த உணர்வில் அனுபவப்படீர்கள் என்று நம்புங்கள்...
ஏனெனில் அனுபவ போதனை விலைமதிப்பற்றது , செயலாற்றக்கூடியது..


எவன் மனதை அடக்குகிறவன் அவனே உத்தமன்..

வாழ்க வளர்க

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் பொருளாதாரம் முன்னேற்றம் எனும் பலனை தந்தது என்பது

ராஜயோகாதிபதிகளும் அவருடைய தசைகளும் விளக்கம்

எந்த லக்ன/ராசியினருக்கு, படித்த படிப்புக்கான, வேலை கிடைக்கும். (அல்லது) எதை படிக்க வேண்டும்.