மழை காலங்களில் மின்னல் தாக்கும் போது பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பது குறித்த வழிமுறைகள்.*

 *மழை காலங்களில் மின்னல் தாக்கும் போது பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பது குறித்த வழிமுறைகள்.*


🌩️மின்னல் ஏற்படும் நேரம் மற்றும் இடத்தினை முன்கூட்டியே கணிப்பது சிரமமானது. எனவே, மின்னல் ஏற்படும் போது பொதுமக்கள் பாதுகாப்பான கட்டிடங்களில் ஒதுங்குவது சிறந்ததாகும். கட்டிடங்கள் இல்லாத பகுதியாக இருந்தால் குகை, அகழி அல்லது பள்ளமான பகுதிகளை தேர்வு செய்து ஒதுங்க வேண்டும்.


🌩️இடி சத்தம் கேட்கும் போது தவிர்க்க முடியாத காரணங்களை தவிர முற்றிலும் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். காடுகளில் இருக்கும் போது இடி, மின்னல் ஏற்பட்டால் அடர்ந்த சிறிய குட்டையான மரங்கள் உள்ள பகுதிகளில் தங்கலாம். பொதுமக்கள் முடிந்த அளவு வறண்ட பகுதிகளை தேர்வு செய்வது நல்லது.


🌩️மின்சாரம் கடத்தும் நெருப்பு, ரேடியேட்டர்கள், அடுப்பு, உலோக குழாய்கள், தொட்டிகள், தொலைபேசிகள் ஆகியவற்றில் இருந்து தள்ளி இருக்க வேண்டும். மின்சாரத்தால் இயங்கக்கூடிய ஹேர் டிரையர், மின்சார ரேசர்கள், செல்போன், டெலிபோன் ஆகியவைகளை பயன்படுத்தக்கூடாது.


🌩️மேலும் சாலை செப்பனிடும் உருளை வண்டி, சரக்கு லாரி மற்றும் பெரிய இரும்பிலான வண்டிகளுக்கு அருகிலும் நிற்கக்கூடாது. கொடி கம்பம், தொலைக்காட்சி ஆண்டனா, உயரமான குழாய்கள் அல்லது இரும்பிலான கோடரி, மண்வெட்டி, ஊஞ்சல் மற்றும் இரும்பு கம்பியுடன் கூடிய குடையை கூட பயன்படுத்தக்கூடாது.


🌩️நீரினுள் இருந்தால் அந்த நீர்நிலையை விட்டு வெளியே வந்துவிட வேண்டும். களத்து மேடு, வைக்கோல்போர், மரவண்டிகள், கண்காணிப்பு கோபுரங்கள், உயர்ந்த இடங்கள், உயரமாக உள்ள குடிசைகள் மற்றும் தங்கும் இடங்கள் ஆகியவற்றில் இருத்தல் கூடாது. கால்நடைகளை மரத்தடியில் தங்க வைக்காமல் பாதுகாப்பான இடத்தில் வைத்து பாதுகாக்கலாம்.


🌩️உயரழுத்த மின் தடங்களை தாங்கி நிற்கும் கோபுரங்களுக்கு அருகில் செல்லக்கூடாது. பொதுமக்கள் ஒதுங்குவதற்கு பாதுகாப்பான இடமானது சுவர்கள், கான்கிரீட் கூரைகள், தரைதளத்துடன் கூடிய வீடுகள், பள்ளிகள், அலுவலகங்கள் மற்றும் வணிக வளாகங்கள் ஆகும். 


எனவே இடி மின்னல் வரும் சமயங்களில் இந்த வழிமுறைகளை பொது மக்கள் பின்பற்றலாம். தங்கள் பகுதிக்கான அரசு அதிகார அறிக்கையை தவறாமல் கேட்டு அதனை பின்பற்றி நடப்பதும் மிக அவசியம்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் பொருளாதாரம் முன்னேற்றம் எனும் பலனை தந்தது என்பது

ராஜயோகாதிபதிகளும் அவருடைய தசைகளும் விளக்கம்

எந்த லக்ன/ராசியினருக்கு, படித்த படிப்புக்கான, வேலை கிடைக்கும். (அல்லது) எதை படிக்க வேண்டும்.