*மாடிப்படியானாலும்! வாழ்க்கை படி என்றால சரி

 ஏறுவது தான் கடினம்! இறங்குவது சுலபமே

 

*மாடிப்படியானாலும்! வாழ்க்கை படி என்றாலும் சரி !!*


*மலையை பார்த்து  மலைத்து விடாதே  மலை மீது ஏறினால் மலையும் உன் காலடியில்....*


*வெட்டித்தனமாக இருப்பதிலும் சில்லரைத்தனமான விஷயங்களிலும் மனதை அலைபாய விடக்கூடாது என்பதில் விடாப்பிடியாக இருங்கள்!*


*வாழ்க்கையில் ஒன்றை விட  இன்னொன்று சிறந்தது என்று எண்ணுவதை விட,*


*ஒவ்வொன்றுக்கும் ஒரு தனித்துவம் இருக்கும் என்று புரிந்துக்கொண்டு இயல்பாக ஏற்றுக் கொண்டால் வாழ்க்கை சிறக்கும் ......*


*உண்டு, உறங்கிக்கழிவதல்ல வாழ்க்கை. இருக்கும் வரையிலும் இறந்த பின்னரும் பிறர் பாராட்டும் படியான வாழ்க்கை சிலருக்கே சாத்தியமாகிறது. மற்றவர்கள் வேடிக்கை மனிதர்கள் போலவே வீழ்ந்து போகிறார்கள்.*


*தன்னால் இயன்றளவு வாழ்க்கையை பிறருக்கு பயன்படும் படியாக வாழ்பவர்களே வாழ்வை வென்றவர்களாக வலம் வருகிறார்கள்.*


*அற்ப விஷயங்களுக்காக கூட அடுத்தவரோடு சண்டை போடுபவர்களால் எப்படி உலக சமாதானம் பற்றி பேச முடியும்..*


*உறவில் உரிமையை  கொடுங்கள்.. வாழ்க்கையில் நம்பிக்கையை கொடுங்கள்.. அன்பில் உண்மையை கொடுங்கள்.. நட்பில் நேர்மையை கொடுங்கள்.. சந்தோஷம் தானாக அமையும்..!!


*#வாழ்க வளர்க

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் பொருளாதாரம் முன்னேற்றம் எனும் பலனை தந்தது என்பது

ராஜயோகாதிபதிகளும் அவருடைய தசைகளும் விளக்கம்

எந்த லக்ன/ராசியினருக்கு, படித்த படிப்புக்கான, வேலை கிடைக்கும். (அல்லது) எதை படிக்க வேண்டும்.