குருபகவான்" இருக்கும் பாவத்தை எப்படி நமக்காக "possitive"ஆக மாற்றுவது என்பது
ஸ்ரீ பெரியகாண்டி அம்மன்
நவசக்தி
ஜோதிட உலகத்தில் இருக்கும் மிக மிக முக்கியமான கிரகமாகிய "குருபகவான்" இருக்கும் பாவத்தை எப்படி நமக்காக "possitive"ஆக மாற்றுவது என்பது இந்தப் பதிவில் பார்க்கலாம்.
★நமது ஜாதகத்தில் குரு பகவான் எந்த பாவத்தில் இருந்தாலும் சரி அல்லது எந்த கிரகத்துடன் சேர்ந்து இருந்தாலும் சரி அந்த பாவம் சார்ந்த விஷயத்தையும் அந்த கிரக காரகத்துவம் சார்ந்த விஷயத்தையும் என்றைக்குமே நம்மால் நம் சுயநலத்திற்காக அனுபவிக்க குருபகவான் விடமாட்டார்.
★குரு இருக்கும் பாவம் சார்ந்த விஷயங்களை நாம் அனுபவிக்க வேண்டும் என்றால் அதற்கு குரு எந்த பாவத்தில் இருக்கிறதோ அல்லது எந்த கிரகத்துடன் சேர்ந்து இருக்கிறதோ அந்த பாவம் சார்ந்தும் அந்த கிரக காரகத்துவம் சார்ந்தும் நாம் எவ்வளவுக்கு எவ்வளவு அடுத்தவர்களுக்கு உதவி செய்கிறோமோ அதனுடைய reflection
ஆகத்தான் அந்த பாவம் சார்ந்து நம்மால் அனுபவிக்க முடியும்.
★அதாவது குரு எந்த பாவத்தில் இருக்கிறதோ அந்த பாவம் சார்ந்த விஷயங்களை நாம் அடுத்தவர்களுக்கு உதவ வேண்டும் மற்றும் நன்மை செய்ய வேண்டும் அப்படி செய்தால் அதன் மூலமாக நம்மால் அந்த பாவம் சார்ந்த விஷயங்களை அனுபவிக்க முடியும்.
★அதை விட்டுவிட்டு குரு இருக்கும் பாவம் சார்ந்த விஷயங்களை நமக்காக நம்முடைய சுய நலத்திற்காக அந்த பாவம் சார்ந்து நாம் அனுபவிக்க வேண்டும் என்று நினைத்தால் குருவிடமிருந்து எந்த ஒரு உதவியும் நமக்கு அந்த பாவம் சார்ந்து கிடைக்காது அதற்கு பதிலாக தர்ம சங்கடங்களும் பிரச்சனைகளும் ஏமாற்றங்களையும் குரு பகவான் நமக்கு கொடுத்து விடுவார்.
★யாருக்கெல்லாம் குருதசை நடக்கிறதோ அவர்களுக்கெல்லாம் தர்ம சங்கடங்களும், பிரச்சனைகளும் ஏமாற்றங்களும், நஷ்டங்களையும் தான் சந்திப்பார்கள் வேண்டும்
என்றால் குருதசை யாருக்கெல்லாம் நடக்கிறதோ அவர்களை கேட்டுப்பாருங்கள்.
★குரு இருக்கும் பாவம் சார்ந்த விஷயங்களை ஒருவரால் தனக்காக ஒரு போதும் அனுபவிக்கவே முடியாது மீறி அனுபவிக்க நினைத்தால் அந்த பாவத்தையே குரு பகவான் அழித்து விடுவார்.
★ஏனென்றால் குரு பகவான் யாரென்றால் தேவகுரு பிரகஸ்பதி ஆவார் அவர் சொர்க்கத்தில் ஆடம்பரமாக வாழ வில்லை அதற்கு பதிலாக பூமியில் ஒரு சாதாரண ஆசிரமத்தில் மிக எளிமையாக வாழ்ந்தவர்.
★குருபகவான் என்றைக்குமே அடுத்தவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுவாரே தவிர தனக்காக எதையுமே அவர் வைத்துக் கொள்ள விரும்ப மாட்டார்.
★இப்பொழுது நமது ஜாதகத்தில் குரு இருக்கும் பாவம் சார்ந்து நாம் என்ன செய்தால் நம்மால் அந்த பாவத்தை அனுபவிக்க முடியும் என்பதை ஒவ்வொரு பாவமாக பார்க்கலாம்.
(★லக்னத்தில் "குரு")
★லக்னத்தில் குரு இருப்பவர்கள் எல்லாம் இவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் அடுத்தவர்களுக்கு எவ்வளவுக்கு எவ்வளவு உதவுகிறார்களோ அதன் மூலமாக குருபகவான் இவர்களது வாழ்க்கையில் மிகவும் உதவி செய்வார்.
★தான் ஏழ்மையில் இருந்தாலும் அடுத்தவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை இவர்கள் செய்தார்கள் என்றால் இவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஏதாவது மிக முக்கியமான பிரச்சினை வந்தால் அப்போது குரு பகவான் இவர்களுக்கு உதவி செய்வார் இவர்களுக்கு தேவையான அனைத்தையும் குருபகவான் கொடுத்துவிடுவார்.
★லக்னத்தில் குரு இருப்பவர்கள் என்றைக்குமே சுயநலமாக வாழவே கூடாது.யாருக்குமே உதவாமல் சுயநலமாக இருந்தார்கள் என்றால் குரு பகவான் இவர்களிடம் இருப்பதை அனைத்தையும் பிடுங்கி விடுவார்.கடைசியில் ஒன்றுமே இல்லாதவாறு குருபகவான் செய்துவிடுவார்.
(★2ம் பாவத்தில் "குரு")
★குரு இரண்டாம் பாவத்தில் இருந்தால் என்றைக்குமே இவர்களுக்கு வரக்கூடிய வருமானத்தை இவர்களுக்காக இவர்களின் சுய நலத்திற்காக குருபகவான் அனுபவிக்கவே விடமாட்டார்.
★இவர்களின் குடும்பத்திற்காக அந்த பணத்தை எவ்வளவுக்கெவ்வளவு உதவுகிறார்களோ பிற்காலத்தில் அதன் மூலமாகத்தான் இவர்களுக்கு குருபகவான் உதவி செய்வார்.
★அதற்கு பதிலாக இவர்கள் சுயநலமாக இருந்தார்கள் என்றால் குடும்பத்தில் தர்ம சங்கடங்களையும் பிரச்சினைகளையும் ஏமாற்றங்களையும் குருபகவான் ஏற்படுத்தி விடுவார்.
★மேலும் அடுத்தவர்களின் வருமானத்திற்காக இவர்கள் உழைத்தார்கள் என்றால் அதன் மூலமாக இவர்களால் வருமானத்தை ஈட்ட முடியும் தனக்காகவும் பயன்படுத்த முடியும்.
(★3ம் பாவத்தில் "குரு")
★குரு மூன்றாம் பாவத்தில் இருந்தால் இளைய சகோதரர்கள் நெருங்கிய நண்பர்கள் மற்றும் பக்கத்து வீட்டுக்காரர்கள் இவர்களுக்கு தேவையான உதவிகளை இவர்கள் செய்தார்கள் என்றால் அதன் மூலமாக குருபகவான் இவர்களுக்கு உதவி செய்வார்.
★மேலும் மூன்றாம் பாவம் சார்ந்த விஷயங்களை இவர்களால் அனுபவிக்கவும் முடியும்.
★மூன்றாம் பாவம் என்பது பக்கத்து வீட்டுக்காரர்கள்.அதாவது நமது பக்கத்து வீட்டில் அல்லது நம்மைச் சுற்றி ஏதாவது ஒரு வக்கீல் இருந்தால் அவர்களுக்குத் தேவையான வாடிக்கையாளரை நாம் ஏற்படுத்திக் கொடுத்தால் அதன் மூலமாக நம்மால் வருமானத்தை ஈட்ட முடியும்.
★இவர்களை சார்ந்த நாம் சுய நலமாக இருந்தால் நெருங்கிய நண்பர்கள் மூலமாகவும் இளைய சகோதரர்கள் மூலமாகவும் பக்கத்து வீட்டுக்காரர்கள் மூலமாகவும் தர்ம சங்கடங்களையும் பிரச்சினைகளையும் ஏமாற்றங்களையும் குரு பகவான்
ஏற்படுத்தி விடுவார்.
(★4ம் பாவத்தில் "குரு")
★வீடு,வண்டி, வாகனம்,சொத்து, இது சார்ந்த விஷயங்களுக்கு நாம் எவ்வளவுக்கு எவ்வளவு அடுத்தவர்களுக்கு உதவி செய்கிரோமோ அதன் மூலமாக நம்மால் வருமானத்தை ஈட்ட முடியும் இந்த பாவம் சார்ந்த விஷயத்தையும் நம்மால் அனுபவிக்க முடியும்.
★குரு 4-ஆம் பாவத்தில் இருப்பவர்கள் real estate தொழில் தாராளமாக செய்யலாம் ஆனால் முதலீடு போடக்கூடாது இடைத்தரகராக இருக்க வேண்டும்.
★மேலும் இவர்களுக்கு வீடு வண்டி வாகனம் சொத்து இது சார்ந்த விஷயங்களை இவர்களின் சுய நலத்திற்காக அனுபவிக்க குருபகவான் விடவே மாட்டார்.அப்படி அனுபவிக்க நினைத்தார்கள் என்றால் குரு பகவான் அந்த பாவத்தையே அழித்து விடுவார்.
★சுயநலமாக இருந்தார்கள் என்றால் வீடு வண்டி வாகனம் சொத்து இதனை சார்ந்து தர்மசங்களையும் பிரச்சனைகளையும் ஏமாற்றங்களையும் குருபகவான் ஏற்படுத்தி விடுவார்.
(★5ம் பாவத்தில் "குரு")
★குரு ஐந்தாம் பாவத்தில் இருந்தால் ஆன்மீகம் சார்ந்த விஷயங்களுக்கும் விளையாட்டுத் துறை சார்ந்த விஷயங்களுக்கும் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கும் எவ்வளவுக்கு எவ்வளவு இவர்கள் அவர்களுக்கு உதவி செய்கிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு எதிர்காலத்தில் குருபகவான் இவர்களுக்கு நன்மை செய்வார்.
★இப்படி செய்தார்கள் என்றால் இவர்களின் வாழ்க்கையில் குருபகவான் இவர்களுக்கு நன்மையே செய்வார்.
(★6ம் பாவத்தில் "குரு")
★குரு ஆறாம் பாவத்தில் இருந்தால் உத்தியோகம்(job) மூலம் வரும் வருமானத்தை இவர்களுக்காக இவர்களின் சுய நலத்திற்காக அந்தப் பணத்தை அனுபவிக்க குரு பகவான் எப்போதும் விடவே மாட்டார்.
★இவர்களுக்கு உத்தியோகம் எப்போதுமே set ஆகாது.அதற்கு பதிலாக அடுத்தவர்களுக்கு உத்தியோகத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் வழியை இவர்கள் செய்தார்கள் என்றால் அதன் மூலமாக இவர்களால் வருமானத்தை அதிகமாக ஈட்ட முடியும்.
★job consultancy business தாராளமாகச் செய்யலாம்.இப்படி செய்தால் இவர்களால் வாழ்க்கையில் மிகப்பெரிய உச்சத்தை அடைய முடியும்.
★மேலும் ஆறாம் பாவத்தில் குரு இருந்தால் என்றைக்குமே இவர்கள் கடன் வாங்கவும் கூடாது கடன் கொடுக்கவும் கூடாது கடன் கொடுத்தார்கள் என்றால் அந்த பணம் மறுபடியும் திரும்ப வராது கடன் வாங்கினார்கள் என்றால் அந்த பணத்தை இவர்களால் கட்டவும் முடியாது.
★தங்களுடைய பெயரில் கடன் வாங்குவது சீட்டு நடத்துவது loan எடுப்பது போன்ற விஷயங்களை செய்யவே கூடாது செய்தார்கள் என்றால் மிகப் பெரிய பிரச்சினைகளை இவர்கள் சந்திக்க நேரிடும்
★மேலும் இவர்கள் வம்பு வழக்கு கோர்ட் கேசு போன்ற பிரச்சனைகளுக்கு அடுத்தவர்களுக்கு உதவினார்கள் என்றால் அதன் மூலமாக இவர்களுக்கு நன்மை உண்டாகும்.
(★7ம் பாவத்தில் "குரு")
★குரு 7-ஆம் பாவத்தில் இருந்தால்
partnership business(கூட்டுத்தொழில்) தன் பெயரில் செய்யக்கூடாது.
அடுத்தவர்களின் பெயரில் தான் செய்ய வேண்டும்.
★தன் பெயரில் செய்தார்கள் என்றால் நஷ்டம் தான் ஆகும் மற்றும் தேவையற்ற பிரச்சினைகளும் ஏற்படும்.
★மேலும் அடுத்தவர்களுக்கு திருமணம் வரன் சார்ந்து ஏதாவது இவர்கள் உதவி செய்தார்கள் என்றால் அதன் மூலமாக குருபகவான் இவர்களுக்கு நன்மை செய்வார்.marriage broker தொழில் இவர்களுக்கு set ஆகும்.
★மேலும் இவர்கள் திருமண வாழ்க்கையில் மனைவியிடம் சுயநலமாக இருக்கக்கூடாது இருந்தார்கள் என்றால் தேவையற்ற தர்ம சங்கடங்களும் பிரச்சனைகளும் ஏமாற்றங்களும் குருபகவான் ஏற்படுத்தி விடுவார்.
(★8ம் பாவத்தில் "குரு")
★குரு 8-ஆம் பாவத்தில் இருந்தால்
PF, pension, Life Insurance, retirement life
Insurance இதனை சார்ந்த விஷயங்களுக்கு அடுத்தவர்களுக்கு இவர்கள் உதவி செய்தார்கள் என்றால் அதன் மூலமாக இவர்களுக்கு வருமானம் வரும்.
★மேலும் இவர்கள் அமானுஷம் சார்ந்த விஷயங்களை கற்றுக்கொண்டு அதாவது ஜோதிடம் மற்றும் வேறு ஏதாவது ஒரு அமானுஷம் சார்ந்து ஒரு விஷயத்தைக் கற்றுக் கொண்டு அடுத்தவர்களுக்கு நியாயமாக உதவி செய்தார்கள் என்றால் அதன் மூலமாக குருபகவான் இவர்களுக்கு நன்மை செய்வார் வருமானத்தையும் இவர்களுக்கு கொடுப்பார்.
(★9ம் பாவத்தில் "குரு")
★குரு ஒன்பதாம் பாவத்தில் இருந்தால் தந்தையைச் சார்ந்து இவர்கள் சுயநலமாக இருக்கக் கூடாது.தந்தைக்கு என்ன வேண்டுமோ அதனை இவர்கள் பூர்த்தி செய்ய வேண்டும் மாறாக தந்தைக்கு எதிராக இவர்கள் துரோகம் செய்தால் குரு பகவான் இவர்களுக்கு தீங்கு செய்து விடுவார்.
★foreign job consultancy வெளிநாட்டு வேலை வாங்கிக் கொடுக்கும் இடைத்தரகர் வேலையை இவர்கள் தாராளமாக செய்யலாம் இதனை செய்தார்கள் என்றால் இவர்களுக்கு வருமானம் பெருகும்.
★transport department travel agency அடுத்தவர்களுக்கு தொலைதூரம் சார்ந்து உதவுவது அதாவது சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வது
போன்றவற்றை இவர்கள் செய்யலாம்.
★மேலும் இவர்கள் அடுத்தவர்களுக்கு உயர்கல்வி படிப்பதற்கும் வெளிநாடு செல்வதற்கும் உதவி செய்தார்கள் என்றால் இவர்களுக்கு தேவையான சமயத்தில் குருபகவான் கண்டிப்பாக இவர்களுக்கு உதவி செய்வார்.
(★10ம் பாவத்தில் "குரு")
★குரு பத்தாம் பாவத்தில் இருந்தால் அடுத்தவர்களுக்கு எவ்வளவுக்கு எவ்வளவு தொழில் சார்ந்து இவர்கள் உதவி செய்கிறார்களோ அதன் மூலமாக இவர்களுக்கு குருபகவான் நன்மை செய்வார் வருமானத்தையும் இவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பார்.
★மேலும் குரு பத்தாம் பாவத்தில் இருந்தால் தங்களுடைய பெயரில் இவர்கள் என்றைக்குமே தொழில் செய்ய கூடாது அடுத்தவர்களின் பெயரில்தான் இவர் தொழில் செய்ய வேண்டும்.
★தங்களுடைய பெயரில் தொழில் செய்தார்கள் என்றால் மிகப் பெரிய தர்மசங்கடங்களையும் பிரச்சினைகளையும் ஏமாற்றங்களையும் நஷ்டங்களையும் தான் இவர்கள் சந்திக்க நேரிடும்.
★இவர்களுக்கு அடுத்தவர்களின் தொழிலை பார்த்துக்கொள்ளும் வேலை தான் set ஆகும்.
★மேலும் இவர்கள் தொழில் சார்ந்து யாருக்கும் துரோகம் செய்யவே கூடாது மீறி செய்தார்கள் என்றால் பிற்காலத்தில் குருபகவான் அதற்கு தகுந்தவாறு மிகப் பெரிய தண்டனையை கொடுத்து விடுவார்
(★11ம் பாவத்தில் "குரு")
★குரு பதினோராம் பாவத்தில் இருந்தால் மூத்த சகோதரர்கள் மற்றும் சித்தப்பா இவர்களை சார்ந்து
இவர்கள் சுயநலமாக இருக்கக் கூடாது.மேலும் இவர்களுக்கு துரோகம் செய்யக் கூடாது.
★மீதி செய்தார்கள் என்றால் இவர்கள் மூலமாகவே இவர்களுக்கு தர்ம சங்கடங்களும் பிரச்சனைகளும் ஏமாற்றங்களும் சந்திக்க நேரிடும்.
★பதினோராம் பாவம் என்பது லாபஸ்தானம் ஆகும்
அடுத்தவர்களின் லாபத்திற்கு இவர்கள் உழைத்தார்கள் என்றால் அதன் மூலமாக இவர்களுக்கு நல்ல Commission வரும்.
(★12ம் பாவத்தில் "குரு")
★குரு பன்னிரெண்டாம் பாவத்தில் இருந்தால் மருத்துவம் சார்ந்த விஷயத்திற்கு அடுத்தவர்களுக்கு எவ்வளவுக்கு எவ்வளவு இவர்கள் உதவி செய்கிறார்களோ அதன் மூலமாக இவர்களுக்கு குருபகவான் மிகப் பெரிய நன்மையை செய்வார்.
★அடுத்தவர்களுக்கு மருத்துவ உபகரணங்களை வாங்கி கொடுப்பது அடுத்தவர்களின் மருத்துவச் செலவை ஏற்றுக் கொள்வது போன்றவற்றை இவர்கள் செய்தால் மிகப் பெரிய நன்மையை குருபகவான் இவர்களின் வாழ்க்கையில் ஏற்படுத்துவார் அதன் மூலமாக நமக்கு மறைமுகமாக குருபகவான் வருமானத்தை கொடுப்பார்.
★மேலும் உணவு இல்லாதவர்களுக்கு இவர்கள் உணவு வாங்கிக் கொடுப்பது ஆதரவற்றோருக்கு இவர்கள் உணவு கொடுப்பது போன்றவற்றை செய்தால் இவர்களின் புண்ணிய பலம் பெருகும் மற்றும் குரு பகவான் இவர்களுக்கு நன்மையும் செய்வார்.
★இவர்கள் மருத்துவம் சார்ந்த விஷயத்திற்கும் உணவு சார்ந்த விஷயத்திற்கும் இவர்கள் சுயநலமாக செயல்படக்கூடாது சுயநலமாக செயல்பட்டால் குருபகவான் அதற்கு தகுந்தவாறு தண்டனையை கொடுத்து விடுவார்.
★மேற்கண்டவாறு குரு இருக்கும் பாவம் சார்ந்து நாம் செய்தால் குரு பகவானிடம் இருந்து நாம் நன்மையும் மற்றும் குரு இருக்கும் பாவத்தையும் நம்மால் அனுபவிக்க முடியும்.
கருத்துகள்
கருத்துரையிடுக