செவ்வாய் கெட்டால் என்ன நடக்கும்
செவ்வாய் கெட்டால்
என்ன நடக்கும்======================
செவ்வாய் ஒருவனுக்கு கெட்டால் என்ன நடக்கும். வாங்க பார்க்கலாம். முதலில் செவ்வாய் மனிதனுக்கு தருவது என்னென்ன என காண்போம்.
செவ்வாய் ஒருவருக்கு வலிமையை, வீரியத்தை, தைரியத்தை, சுயகௌரவத்தை மற்றும் கோபத்தை தரும். மேலும் இரத்த அணுக்கள், எலும்பு மஜ்ஜை, இயக்க ஆற்றல், ஜீரண சக்தி, பற்கள், பித்த நாடி மற்றும் ரத்த ஓட்டத்தை குறிக்கும்.
மேற்கண்ட விசயங்களில் ஏதேனும் இரண்டு ஒருவருக்கு கெட்டாலும் அல்லது சரியாக கிடைக்காமல் இருந்தாலும் அவருக்கு செவ்வாய் கெட்டருப்பதாக அர்த்தம். இதுதான் செவ்வாய் தோசம். தோசம் எனில் குறைபாடு என பொருள். அதாவது வீரிக்குறைபாடு, முன்கோபம், பொறுமை இழப்பு, தாழ்மை உணர்வு, தைரியக்குறைபாடு, சுயகௌரவ குறைபாடு, தன்னை பிறர் பாவம் என கருதவேண்டும் என நினைத்தல், பிறரை காரணமின்றி எதிரியாக நினைத்தல், விவேகமின்மை போன்றவை குணநலனில் தரும். மேலும் உடலில் அடிக்கடி சோர்வு, எலும்பு மஜ்ஜை பலமின்மை, ஜீரண சக்தி குறைபாடு, சிறுவயதில் அதிக பற்சொத்தை, பித்தநரை போன்றவை தரும்.
குணநலன் மேம்பட முருக வழிபாடும், உடல்நலம் மேம்பட செம்பு பாத்திர நீர் பருகுதலும் பரிகாரமாகும்.
கருத்துகள்
கருத்துரையிடுக