சந்திரன் + கேது இணைவு பற்றி விளக்கம்
சந்திரன் + கேது
இணைவு
இணைவு சந்திரன் மற்றும் கேதுவும் நட்சத்திர ரீதியாக
மோத வேண்டும் அப்போதுதான் பலன் சரியாக வரும். எப்படி (எ.கா) சந்திரன் - பரணி
நட்சத்திரத்தில் இருந்து கேது - கார்த்திகை
நட்சத்திரத்தில் இருந்தால் தான் இணைவு வரும். ஏன் எனில் கேது பின் நோக்கி நகரும்
அதாவது கார்த்திகை நட்சத்திரத்தில் இருந்து
பரணி நோக்கி நகரும் சந்திரன் முன் நோக்கி
நகரும் அப்போது இந்த கிரகம் மோதி கொள்ளும் அவ்வாறு இல்லாமல் மேஷத்தில்
அஸ்வினி நட்சத்திரத்தில் கேதுவும்
சந்திரன் பரணியில் இருந்தால் இணைவு வராது.
கேது அஸ்வினியில் இருந்து ரேவதி நோக்கி
நகரும் சந்திரன் பரணியில் இருந்து கார்த்திகை நட்சத்திரத்தை நோக்கி நகரும்
எனவே இரு கிரகமும் மேஷத்தில் இருந்தாலும் இணைவாக எடுத்து கொள்ள தேவையில்லை ஆனால் ஒரு சில தாக்கம் இருக்கவே செய்யும்
சந்+ கேது
1 . ஜாதகரின் தாயார் கொஞ்சம் நொரண்டு என்று பெயர் இருக்கும்.
2. தாயார் சட்ட நியாயம் பேசுபவர்.
3. தாயார் ஆன்மிக நாட்டம் இருக்கும்
4. தாயாருக்கு (or) பெண் ஜாதகியாக இருந்தால் ஜாதகிக்கும்கர்ப்ப பையில் பிரச்சினை இருக்கலாம்
5. ஜாதகர் விரக்தியான நபர்
6 ஜாதகர் அதிகம் பேசாதவர்
7. ஜாதகருக்கு சளி, ஆஸ்த்துமா, அலர்ஜி
தொந்தரவு இருக்கும்.
8. இந்த இணைவு ஜாதகருக்கு திருமணத்தை
மிக மிக தாமதபடுத்தும்.
9. திருமணம் ஆகாத நபர்களில் ஜாதகத்தில்சந்+கேது(or) சந்+ ராகு
இணைவு இருக்கும்.
10. ஜாதகருக்கு தன் அம்மாவை ரொம்ப பிடிக்கும் பின் அதுவே பிரச்சினை, டார்ச்சர்
தாயாரால் ஏற்படும்.
11. ஜாதகர் குழப்பமான மனநிலை உடையவர்.
12. ஒரு சிலர் மற்றவரிடம் பேசும் போதும் கூட
மனதில் வேறு விஷயம் ஓடி கொண்டு இருக்கும்.
13. ஜாதகர் சிலர் ஆன்மிகவாதிகளாகவும்
ஒருசிலர் போதை அடிமையாகவும் இருப்பர்
14. உடலில் சிறு துவார வகை பிரச்சினை வரும்.
15. தாய், மூத்த சகோதரி, மூத்த பெண்கள்
வகை தொந்தரவு இருக்கும்.
16. வராகி, பிருத்திங்கா தேவி, இது போன்ற
பெண் மனித முகம் இல்லா பெண் தெய்வ வழிபாடு சிறப்பு. பரிகாரம் கூட
கருத்துகள்
கருத்துரையிடுக