கணக்கு என்பதுதானே நம் வாழ்க்கை?
கணக்கு என்பதுதானே நம் வாழ்க்கை? 9மாதத்தில் பிள்ளை பிறக்கும், என்று அறிந்ததும், நம் வாழ்வின் முதல் கணக்கு ஆரம்பித்து விடுகிறதே…
9 மாதங்களில் பிறக்காமல் இடையில் “அவசரக் குடுக்கையாக” ஒரு பிள்ளை பிறந்து விட்டால், அது குறை மாதக் குழந்தை என்றாகி விடுகின்றது..
கூட்டுதல், கழித்தல், பெருக்குதல் , வகுத்தல் இல்லாத கணக்கு எங்குண்டு? நம் வாழ்வும் அப்படித்தானே நகர்கின்றது?
அறிவைக் கூட்ட வேண்டும் என்று ஆரம்பித்து, புத்தகமும் கையுமாக அலைந்து, பின்பு ஒரு கட்டத்தில், வருமானத்தைக் கூட்ட வேண்டும் என்று ஓடி ஓடி உழைக்கும் கட்டத்திற்குள் புகுந்து, ஆரோக்கியத்தை வளர்த்து, ஆயுளைக் கூட்ட வேண்டும் என்ற போராட்டத்தை காண்பது நம் வாழ்க்கை.
நம்மிடமிருந்து எந்தத் தீய குணங்கள் களையப்பட வேண்டும் என்றறிந்து, அவற்றை வாழ்விலிருந்து கழித்து(விலக்கி), அனாவசிய செலவுகளை அவ்வப்போது ஒதுக்கி(கழித்து) வாழ்வைப் பலப்படுத்துவது வாழ்வின் அத்தியாவசியங்கள்..
அறிவு தொடக்கம் பொருளாதார நிலை வாழ்வில் பெருக வேண்டும் என்று ஆசைப்படாத மனிதர்கள் எவர் இருக்கிறார்கள்? தமது செல்வாக்கைப் பெருக்கிக் கொள்ள நினைக்கும் அரசியல்வாதி தொடக்கம் , தனது சொத்துக்களை பெருக்க ஆசைப்படும் சராசரி மனிதன் வரை, பெருக்கும் ஆசை எவரையும் விடதில்லை.
எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு ராமையா
முதல் எட்டில் ஆடாதது விளையாட்டல்ல
நீ ரெண்டாம் எட்டில்கல்லாதது கல்வியுமல்ல
மூன்றாம் எட்டில் செய்யாதது திருமணமல்ல
நீ நாலாம் எட்டில் பெறாதது குழந்தையுமல்ல
ஐந்தாம் எட்டில் சேர்க்காதது செல்வமுமல்ல
நீ ஆறாம் எட்டில் சுற்றாதது உலகமுமல்ல
ஏழாம் எட்டில் காணாதது ஓய்வுமில்லை
நீஎட்டாம்எட்டுக்குமேலஇருந்தாநிம்மதியில்ல-
வாழ்க்கையை நீ முறையாக வகுக்காமல், வாழ்க்கையை செவ்வனே ஓட்ட முடியாது என்கின்றன வைரமுத்துவின் வைரவரிகள்…
வாழ்க்கையில் கணக்குகள் “புகுந்து விளையாடுவதை” உணர்ந்து கொண்டீர்களா?
கருத்துகள்
கருத்துரையிடுக