வருடம் ஒருமுறையாவது ..மனம் விட்டு பேசுங்கள்....
சில மனைவிமார்களின் வார்த்தைகள்
அவர் என்ன வேண்டாலும் செய்யட்டும் ...பெண்களோடு போகாமல் இருந்தால் அதுவே போதும்.
அவர் என்ன வேண்டும் என்றாலும் செய்யட்டும் ....குடிக்காமல் வீட்டிற்கு வந்தால் போதும்.
அவர் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும் ....குடும்ப நடத்த நாலு காசு சம்பாதித்து கொடுத்தால் போதும்.
அவர் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும் ....அதை வாங்கி வா, இதை வாங்கி வா என்று துன்புறுத்தாமல் இருந்தால் போதும்.
அவர் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும்.... சண்டை போடட்டும் ஆனால் கை தொட்டு அடிக்காமல் இருந்தால் போதும்.
அவர் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும் ...நான்கு அடி அடிக்கட்டும் ஆனால் அசிங்கமாக பேசாமல் இருந்தால் போதும்.
அவர் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும் ....என்னை கூட பார்க்க வேண்டாம் இந்த குழந்தைக்கு தேவையானதை செய்தால் மட்டும் போதும்.
அவர் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும் ...இரவில் என் ஆசையை தீர்த்தல் போதும்.
அவர் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும் ... என்னை நன்றாக பார்த்துக் கொண்டால் போதும்.
அவர் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும் ....என்னோடு சேர்த்து என் தாய் தந்தையையும் பார்த்துக் கொண்டால் போதும்..,
அவர் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும் ....என்னை சந்தோசமாக பார்த்துக் கொண்டால் போதும்..
அவர் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும்..... தொடரும் தொடர்ந்து கொண்டே இருக்கும்..!
ஆனால் தினம் தினம் வேண்டாம்... வாரம் ஒரு முறை வேண்டாம்... காலாண்டுக்கு ஒரு முறை வேண்டாம்...
அரையாண்டுக்கு ஒரு முறை வேண்டாம்... வருடம் ஒருமுறையாவது .. 😍
உங்களுக்கு என்ன வேண்டும் ?
என்ன பிடிக்கும் ?
உங்கள் ஆசை என்ன ?
நான் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் 😍 என்று
மனைவி கணவனிடம் ஒரு முறையேனும் கேட்டிருந்தால் ... !
கணவன் உங்களுக்காக மட்டும் 💯% சதவீதம் கணவனாக இருந்திருப்பான்..,
ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்
கணவன் தனக்காக மட்டுமே உழைப்பதும் இல்லை ஓடுவதும் இல்லை சம்பாதிப்பதும் இல்லை..!
அனைத்தும் அவனுக்காக மட்டுமே இல்லை என்று தெரிந்தும்...
உலகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் ஒரே ஜீவன் கணவன் ..!
அவனைப் புரிந்து கொள்ளாத மனைவிகளே இந்த உலகத்திலேயே ஏராளம்.
கணவன்களை சிரிக்க வைக்கும் மனைவிமார்கள் கிடைத்துவிட்டால்
கணவன் ஒருபோதும் கோவிலுக்கு செல்ல மாட்டான் ..!
மனைவிகளே நீங்கள் தெய்வமாக மாறுங்கள்...!
வாழ்க்கை வாழ்வதற்கே..
படித்ததில் பிடித்தது.
கருத்துகள்
கருத்துரையிடுக