ராகு கேது......

 ராகு-பயங்கரவாதி

கேது - போராளி....

இருவரும் தீவர அமைப்பு தான்.

ஆனால் கேதுவின்

செயலில் ஒரு நியாயம் இருக்கும்.

இருவரும் தரும் துன்பம்

ஒன்றே...

ராகு-அது வெளியே தெரியும்

கேது - அது உள்ளே புற்றாய்

உருவாகும்.

கேது இருக்கும் இடம் ஒரு ஆறாம் அதிபதியாகவே

செயல்படும்.

ராகு,-ஆசை

கேது - பற்று

ராகு- ஒருவித சமயத்தில்

எல்லா பலனை அனுபவிக்க

வைத்து கஷ்ட படுத்தும்

கேது - எப்பவுமே ஒரு தீரா பற்று தந்து வெறுப்பு தந்து

ஞானம் தரும்.


ராகு-poison

கேது - Slow poison 


ராகு-தன்னை தானே உயர்த்தி

பேசும் அதிகம் பில்டப் செய்யும்


கேது - பேசாமலே கொல்லும் 


ராகு - எதிலும் பெரியதை 

Select செய்யும் விரும்பும் 

பெரியது எல்லாம் ராகு


கேது - எதிலும் சிறியது கேது


ராகு-மந்திரம், தாய்த்து. ஆவியுடன் பேசுதல் ஆக்ரோசஅம்மன் வழிபாடு ராகு


கேது - தியானம் , ஆசனம் ,

அமைதியான வழிபாடு சித்தர் வழிபாடு கேது 


ராகு- மிரட்டி வாங்குவது ராகு

கேது - சட்டபூர்வமாக or கெஞ்சி கேட்டு வாங்குவது கேது


ராகு-பிரமாண்டபேரணி, ஆர்பாட்டம் ராகு

கேது - ஆன்மிக ஊர்வலம்

அமைதி போரட்டம் கேது 


ராகு-மிக பெரிய வெற்றி

மிக பெரிய தோல்வி . ராகு

கேது - எதிலும் நிம்மதி தேடுவது கேது 


ராகு- சூதாட்டம், கருப்பு பணம்

ஒன்றுக்கு இரண்டு வேண்டும்

என்று ஆசைபடுவது ராகு

கேது - பணத்தை உதறி தள்ளும் காரகம் கேது 


ராகு- மனித வாழ்க்கை அனைத்துக்கும் ஆசைபடுவது ராகு

கேது - தான் உண்டு

தன் தேவை உண்டு என இருப்பது கேது 


ராகு-தொழில் நீண்டதூர வாகனம் ஓட்டுதல், 

அடகு பிடித்தல்,. Chain line வியாபாரம்


கேது - சட்டம், மாற்று மருத்துவம், சோதிடம் ,ஆன்மிக பொருள் கேது


ராகு-உறவுகளை உடனே

வெட்டி விடுவது ராகு

கேது - இல்லறத்தில் இருந்தால்

கூடவே இருந்து நரக வேதனை

கேது...


ராகு-கடித்து காயப்படுத்துவது

கேது - சுருட்டி மூச்சு திணற வைப்பது கேது

ராகு-மறைமுக தொழிலில்

அனைத்திலும் ராகு உண்டு

கேது - சட்டபூர்வமான,நுணுக்கமான

நொண்டு வேலை அனைத்திலும் கேது உண்டு .


ஆக இரண்டுமே துன்பம் தான்


ராகு,கேது கிரகமாகஉருவான கதை படித்து இருப்பீர்கள்

பரமாத்மா பாற்கடலை கடைந்து

தேவர்களை சாகாவரம் பெற

வைக்க வைத்தார் 

அதில் அரக்கர் ஆன பாம்பு

தானும் தேவர் வேடம் இட்டு

அமிர்தம் பருகி சாகா வரம்

பெற்றது .சூரி, சந்திரன் காட்டி

கொடுத்ததால் அவர்களை

எப்பவுமே விரோதியாக பார்க்கிறது என்றும்

அமிர்தம் குடித்ததால் வெட்ட

பட்ட பாம்பு இரண்டு துண்டு

ராகு , கேது கிரகமாக மாற்றபட்டது தெரியும்


இதில் இருந்து ஒரு ஆய்வு


ராகு,கேது நடிகர்கள்

எனவே நம் ஜாதகத்தில்

எந்த இடத்தில் ராகு,கேது

இருக்கிறதே அந்த இடகாரகமும் நம்மிடம் நடிக்கவே செய்யும்

இவர்கள் இணைந்த கிரகமும்

நடிக்கவே செய்யும்

நாமும் அதை உணர்ந்து

அதற்கு தவிர்ந்தால் போல்

நடித்தால் மட்டுமே இவர்களை

சமாளிக்க முடியும்

Conti.....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் பொருளாதாரம் முன்னேற்றம் எனும் பலனை தந்தது என்பது

ராஜயோகாதிபதிகளும் அவருடைய தசைகளும் விளக்கம்

எந்த லக்ன/ராசியினருக்கு, படித்த படிப்புக்கான, வேலை கிடைக்கும். (அல்லது) எதை படிக்க வேண்டும்.