முன்னாள் நீதிபதி சா.நாகமுத்து அவர்களின் மனக்குமுறல்!*
முன்னாள் நீதிபதி சா.நாகமுத்து அவர்களின் மனக்குமுறல்!*
"எனது நீதிமன்றத்தில் எத்தனையோ வழக்குகள் வந்திருக்கின்றன...
அதில் ஒரு வழக்கு என்னை மிகவும் உணர்ச்சிவசப்பட வைத்தது!"
என் எதிரே பரிதாபமே உருவெடுத்து வந்தது போல ஒரு நடுத்தர வயது பெண் நின்று கொண்டிருந்தார்.
வழக்கு தொடுத்தவரும், அவரே!
ஐயா, "எங்களுக்கு ஒரே மகள்; என் வீட்டுக்காரருக்கு கைகால் வராது; நான் நாலைந்து வீட்டில் வீட்டு வேலைசெய்து அதில் வரும் சம்பாத்யத்தில் தான் கணவரையும் மகளையும் காப்பாற்றி வந்தேன்; வருகிறேன்!
மகளைக் கஷ்டம் தெரியாமல் வளர்த்தேன்; பலரது கால்களில் விழுந்து நல்ல பள்ளியில் படிக்க வைத்தேன்;
வேலை செய்யும் வீட்டில் நல்ல உணவு கொடுத்தால், அதை சாப்பிடாமல் மகளுக்கு கொண்டுவந்து கொடுத்து அவள் சாப்பிட்டு சந்தோஷப்படுவதை பார்த்து மகிழ்வேன்!இவ மேலே இவங்க அப்பனுக்கு கொள்ளை உசிரு, மகளைப் பார்ப்பற்காக வந்திருக்காரு, அந்த மனுஷன்கிட்டயும் ஒரு வார்த்தை சொல்லிட்டு போகச் சொல்லுங்கய்யா' என்றார்.
‛எங்கேம்மா உன் வீட்டுக்காரர்' என்று கேட்டேன்.
அந்தம்மா கை காட்டிய இடத்தில் ஒருவர் சுவரோடு சுவராக சாத்திவைக்கப்பட்ட நிலையில் இருந்தார்.
அவருக்கு கைகால் வராது என்பதால் துாக்கிக் கொண்டுவந்து சுவற்றில் சாத்தி வைத்துள்ளனர்.
கோர்ட்டில் நடப்பதை எல்லாம் பார்த்து... அவரது கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் கொட்டிக்கொண்டு இருந்தது.
அந்த ‛அன்பு' மகளை நோக்கி என்ன செய்யப்போகிறாய் என்பது போல பார்த்தேன்!
அந்த பெண்ணோ இதை எல்லாம் துளியும் கண்டுகொள்ளாமல்,‛ நான் கிளம்பலாமா?' என்று கேட்டுவிட்டு வெளியே காருடன் காத்திருந்த காதலன் அல்லது கணவனுடன் சிட்டாக பறந்து சென்றுவிட்டார்.
‛சரிங்கய்யா, நாங்க புறப்படுறோம்' என்ற அந்த பெண்ணின் தாயாரிடம் ‛ஊருக்கு எப்படி போவீங்க' என்று கேட்டபோது... ‛
சொந்த ஊருக்கு போக எப்படியும் நாற்பது ரூபாய் தேவைப்படும்; பஸ்ஸ்டாண்ட் போய் பிச்சை எடுப்பேங்கய்யா; கூடுதலா கிடைச்சா இரண்டு பேரும் சாப்பிடுவோம்யா; அப்புறம் ஊருக்கு போய்ட்டா...
வீட்டு வேலை செய்யற இடத்துல உதவி கிடைச்சுடும்; பிழைச்சுக்கவோம், ஐயா' என்றார்.
நீதிமன்றத்தில் இருந்த அத்தனை பேருக்கும் துாக்கிவாரிப்போட்டது!
‛இந்தாம்மா, நீ பிச்சை எடுக்க வேணாம்; என்னோட அன்பளிப்பா ஏத்துக்குங்க' என்று சொல்லி பையில் இருந்த ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொடுத்தேன்!
நான் கொடுத்ததைப் பார்த்த நீதிமன்றத்தில் இருந்த வழக்கறிஞர்கள், ஊழியர்கள், பார்வையாளர்கள் என்று ஆளாளுக்கு கொடுத்ததில் நாற்பதாயிரம் ரூபாய் சேர்ந்தது.
அதை அந்த அம்மாவிடம் கொடுத்து... உங்கள் கவலைக்கு இது மருந்தல்ல; ஊருக்கு போவதற்கான சிறு தீர்வு தான்! என்று சொல்லிக்கொடுத்தேன்.
*பெற்றவர்களைப் புரிந்து கொள்ளாத இப்படிப்பட்ட பிள்ளைகளும் இருக்கிறார்களே... என்று அன்று முழுவதும் மனம் வேதனைப்பட்டது.*
"பிள்ளைகளுக்கு அறிவைக் கொடுப்பதை விட அன்பைக் கொடுப்பது முக்கியம்! என்பதை உணருங்கள்" என்ற வேண்டுகோளுடன்
முன்னாள் நீதிபதியான சா.நாகமுத்து தனது உருக்கமான பேச்சை முடித்தார்.
கருத்துகள்
கருத்துரையிடுக